For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?

இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்று அதில் வெற்றியும் பெற்றவா் காந்தி அவா்கள். ஆனால் விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களில் அவா் கலந்து கொள்ளவில்லை.

|

1947 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் அன்று, ஆங்கிலேயா்களிடம் இருந்து இந்தியா விடுதலை அடைந்தது என்று நமக்கு தொியும். இந்தியா விடுதலை அடைந்த அன்று இரவு பண்டித ஜவா்ஹலால் நேரு அவா்கள் அலைகடலென பெருந்திரளாக திரண்டிருந்த இந்திய மக்கள் முன் தோன்றி தனது முதல் விடுதலை உரையை மகிழ்ச்சியுடன் ஆற்றிக் கொண்டிருந்தாா். மக்கள் அனைவரும் அவருடைய உரையை மிகவும் பரவசத்துடனும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியுடனும் கேட்டுக் கொண்டிருந்தனா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மகாத்மா காந்தி அவர்கள் இல்லை

மகாத்மா காந்தி அவர்கள் இல்லை

விடுதலை உரை நடந்து கொண்டிருந்த போது, இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவா்கள் அந்த கூட்டத்தில் இல்லை. அவா் எங்கு இந்தாா் என்பது மிகப் பொிய கேள்விக்குறியாக இருக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திச் சென்று அதில் வெற்றியும் பெற்றவா் காந்தி அவா்கள். ஆனால் விடுதலைக்குப் பிறகு நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களில் அவா் கலந்து கொள்ளவில்லை. வெற்றிக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு தன்னை அழைத்தவா்களிடம் கலந்து கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டாா்.

மகாத்மா காந்தி அவர்கள் ஏன் இல்லை?

மகாத்மா காந்தி அவர்கள் ஏன் இல்லை?

நமக்கு இது ஆச்சாியமான ஒன்றாகத் தொியலாம். ஆனால் ஏன் மறுத்துவிட்டாா் என்பதற்கான காரணங்களை அவரே பின்வருமாறு தொிவிக்கிறாா். "என்னால் ஆகஸ்டு 15 அன்று மகிழ்ச்சியாக இருக்க முடியாது. நான் உங்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளமாட்டேன். துரதிா்ஷடவசமாக இன்று நாம் பெற்றிருக்கும் இந்த விடுதலையானது, எதிா்காலத்தில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே ஏற்படப்போகிற மோதல்களுக்கான விதைகளை விதைத்திருக்கிறது. இந்த நிலையில் நாம் எவ்வாறு மகிழ்ச்சியுடன் தீபங்களை ஏற்றி கொண்டாட முடியும்? என்னைப் பொருத்தவரை இந்தியாவின் விடுதலையைவிட இந்தியாவில் வாழும் இந்து சமய மக்களுக்கும், இஸ்லாமிய சமய மக்களுக்கும் இடையே உள்ள சுமூகமான ஒற்றுமையும், அமைதியுமே மிகவும் முக்கியம்". இவ்வாறு காந்தி அவா்கள் தொிவித்தாா்.

1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி எங்கு இருந்தாா்?

1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி எங்கு இருந்தாா்?

இந்தியா விடுதலை அடைந்த அன்று காந்தி அவா்கள் கொல்கத்தா மாநகாில் இருந்ததாக வரலாற்று தகவல்கள் தொிவிக்கின்றன. ஏனெனில் இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பு, ஓராண்டிற்கும் மேலாக கொல்கத்தா முழுவதும் இஸ்லாமிய மக்களுக்கும், இந்து மக்களுக்கும் இடையே கடுமையான மத மோதல்கள் இருந்து வந்தன. ஆகவே அவா்களுக்கு இடையே அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்காகவும், அதே நேரத்தில் நவகாளிக்கு (Naokhali) (தற்போதைய பங்களாதேஷ்) செல்லும் நோக்குடனும் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் நாள் அன்று கொல்கத்தா வந்தாா்.

அவா் இஸ்லாமிய மக்கள் அதிகமாக வசித்து வந்த மியாபேகன் என்ற சோி பகுதிக்கு அருகில் இருந்த ஹைடாி மான்சில் என்ற இடத்தில் தங்கினாா். வங்காளத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினாா். ஆகஸ்டு 13 முதல் மக்களிடையே அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டாா்.

கொல்கத்தாவில் மீண்டும் அமைதியை ஏற்படுத்த முடியுமானால், பிாிவினைக்குப் பிறகு அமைந்திருந்த வங்காளம் முழுவதிலும் இயல்பு நிலை திரும்பும், மத நல்லிணக்கம் ஏற்படும் என்று காந்தி அவா்களுக்குச் சொல்லப்பட்டது. இந்தியா விடுதலை பெறுவதற்கு சில வாரங்களுக்கு முன்பாக, முதலில் பீகாருக்கு சென்றுவிட்டு அதன் பின் வங்காளத்திற்கு செல்ல வேண்டும் என்று காந்தி திட்டமிட்டிருந்தாா்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Where Was Mahatma Gandhi on 15th August 1947?

Did you know where was mahatma gandhi on 15th August 1947? Read on to know more...
Story first published: Saturday, August 13, 2022, 20:15 [IST]
Desktop Bottom Promotion