ராசிப்படி உங்க அதிர்ஷ்டம் எந்த வயதில் பிரகாசிக்கும் தெரியுமா?

ஜோதிடத்தில் உள்ள ஒரு பழங்கால புத்தகமான பிருகு சம்ஹிதாவின் படி, ஒருவரது தலைவிதியை அறியலாம். ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தின் முதல் வீடு தான் நம் வாழ்வில் திசையையும், நிலைமையையும் தீர்மானிக்கிறது.

தற்போதைய பரபரப்பான உலகில் மக்கள் வாழ்வில் முன்னேற, நல்ல அந்தஸ்துடன் வாழ இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால் ஒருவர் எவ்வித பிரச்சனையும் இல்லாமல், செழிப்பாகவும், சமூகத்தில் மரியாதையுடனும் வாழ விரும்பினால், அதற்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவும் வேண்டும். ஜோதிடத்தின் மூலம் ஒருவரது வாழ்வில் நடக்கவிருக்கும் பல விஷயங்களை கணித்து அறிய முடியும். முக்கியமாக ஒருவரது அதிர்ஷ்டம் எப்போது பிரகாசிக்கும் என்பதை ஜோதிடத்தைக் கொண்டு அறியலாம்.

When Will Your Luck Shine According To Zodiac Signs In Tamil

ஜோதிடத்தில் உள்ள ஒரு பழங்கால புத்தகமான பிருகு சம்ஹிதாவின் படி, ஒருவரது தலைவிதியை அறியலாம். ஜோதிடத்தின் படி, ஒருவரது ஜாதகத்தின் முதல் வீடு தான் நம் வாழ்வில் திசையையும், நிலைமையையும் தீர்மானிக்கிறது. இப்போது ஒருவரது ராசிப்படி, எந்த வயதில் ஒருவரது அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு 16 வயதில் தான் அதிர்ஷ்டம் உண்டாகும். ஒருவேளை 16 வயதில் சில காரணங்களால் அதிர்ஷ்டமாக இல்லாவிட்டால், 22, 28, 32 மற்றும் 36 ஆவது வயதில் அதிர்ஷ்டமாக இருப்பதற்கா வலுவான வாய்ப்புள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு 25 வயதில் தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். ஒருவேளை 25 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்காமல் இருந்தால், 28, 36 மற்றும் 42 வயதில் அதிர்ஷ்டம் ஜொலிக்கும்.

மிதுனம்

மிதுனம்

நீங்கள் மிதுன ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு 22 வயதில் அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். அதிகபட்சமாக 42 வயதில் அதிர்ஷ்டம் ஜொலிக்கும். இதற்கிடையே 32, 33 மற்றும் 36 வயதில் அதிர்ஷ்டம் சற்று பிரகாசிக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டமானது 16 வயதில் ஜொலிக்கும். இது தவிர, 22 முதல் 25 வயது வரையான காலமும் அதிர்ஷ்டமாக இருக்கும். அதன் பின் 28 அல்லது 32 வயதில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 16 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதன் பின்னர் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமாது 22, 24, 26 அல்லது 28 வயதில் பிரகாசமாக ஜொலிக்கும். அதாவது இந்த வயதில் வாழ்வில் மிகச்சிறந்த உயரத்தை அடைந்திருப்பீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்களின் அதிர்ஷ்டம் 16 வயதில் பிரகாசிக்கும். ஒருவேளை 16 வயதில் எந்த அதிர்ஷ்டமும் அடிக்காவிட்டால், 22, 25, 32, 33, 35 மற்றும் 36 வயதில் அதிர்ஷ்டம் சாதகமாக இருந்து, வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சற்று தாமதமாகவே பிரகாசிக்கும். அதுவும் 24 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்காவிட்டால், 25 வயதில் அந்த அதிர்ஷ்டம் அடிக்கும். இல்லாவிட்டால் 32, 33 அல்லது 35 வயதில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கும் தாமதமாகவே அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். இவர்களுள் பெரும்பாலானோருக்கு 22 வயதில் அதிர்ஷ்டம் ஜொலிக்காவிட்டாலும், 24 வயதிற்கு பின் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அதன் பின் 28 அல்லது 32 வயதில் அதிர்ஷ்டம் அடிக்க வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு

நீங்கள் தனுசு ராசியைச் சேர்ந்தவராக இருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டமானது 16 வயதில் உண்டாகும். அதன் பின் 22 அல்லது 32 வயதில் தான் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற முடியும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் எவ்வளவு தான் சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டலும், இவர்களின் அதிர்ஷ்டம் 25 வயதில் தான் ஜொலிக்கும். அதன் பின்னர் 33, 35 அல்லது 36 லயதில் வாழ்வில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டம் சற்று தாமதமாகவே பிரகாசிக்கும். ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்களுக்கு 25 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். அதைத் தொடர்ந்து 28, 36, 42 ஆகிய வயதில் அதிர்ஷ்டம் நன்கு ஜொலிக்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் இளம் வயதில், அதாவது 16 வயதிலேயே அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும். அதன் பின் 22, 28 அல்லது 33 வயதில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion