Latest Updates
-
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் செல்வம் டபுள் ஆகப்போகுது! -
வீட்டில் இந்த 4 செடிகள் இருந்தா போதும்… புழுதிப் புயலையும் தாண்டி அதிர்ஷ்டம் தேடி வரும்! -
கேரட்டும், மாங்காயும் இருந்தா.. இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாத்துக்குமே டக்கரா இருக்கும்.. -
கப்பர் யோக காலத்தில் பணத்தை இழக்காதீங்க! இந்த 5 வாஸ்து மாற்றங்கள் செழிப்பை அள்ளித்தரும்! -
Mathi Meen Benefits: அடிக்கடி மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர் தினேஷ்! -
May 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
கொளுத்தும் வெயிலில் உடல் எடையைக் குறைக்க உதவும் 3 விதமான கூழ் ரெசிபிக்கள் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இன்றைய ராசிபலன் 02 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பொறுமையை சோதிக்கும் நாளாக இருக்குமாம் -
எவிலின் சர்மாவின் திடீர் பிரிவு! கசப்பான விவாகரத்தை விட இது எவ்வளவோ மேல் தெரியுமா? -
கல்யாணத்துக்குப் பின் 'சிச்சுவேஷன்ஷிப்' - வைரலாகும் இந்த டிரெண்ட் எதை உணர்த்துகிறது?
ஒரே பிறப்பு எண்ணில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?
பொதுவாக ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அவர்களின் பிறந்த தேதியை பற்றி பலரும் கவனத்தில் கொள்வது இல்லை.
உங்கள் காதலர் அல்லது வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? காதலிலோ அல்லது திருமணத்திலோ பொருத்தம் என்று வரும்போது நியூமராலஜி துல்லியமான முடிவுகளை வழங்கக்கூடும். நியூமராலஜி ஒருவரைப் பற்றிய பல தகவல்களை கூற இயலும் அதில் அவர்களின் திருமண பொருத்தமும் ஒன்று.

பொதுவாக ஒரே ராசியில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள். ஆனால் அவர்களின் பிறந்த தேதியை பற்றி பலரும் கவனத்தில் கொள்வது இல்லை. நியூமராலஜி ஒருவரின் பிறந்த தேதியை அடிப்படையாக கொண்டு அவர்களின் எதிர்காலத்தை கணிக்கிறது. ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகை அவர்களின் வாழ்க்கைப் பாதையின் எண்ணாக கருதப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஒரே வாழ்க்கைப் பாதை எண் கொண்டவர்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வாழ்க்கைப் பாதை எண்ணை கணக்கிடுவது எப்படி?
ஒருவரின் பிறந்த தேதியின் கூட்டுத்தொகையில் இருந்துதான் அவர்களின் வாழ்க்கைப் பாதை எண் அல்லது பிறப்பு எண் கணக்கிடப்படுகிறது. உதாரணத்திற்கு உங்களின் பிறந்த தேதி நவம்பர் 23, 1992 ஆகா இருந்தால்
நவம்பர்(1+1=2)+ (2+3=5)+(1992= 1+9+9+2=21, 2+1=3) = (2+5+3=10), (1+0) =1. ஒரே பிறப்பு எண்ணில் இருப்பவர்களை திருமணம் செய்து கொண்டால் உங்க வாழ்க்கை எப்படி இருக்கும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

1 மற்றும் 1
தலைமை பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பும் இருவர் இவர்கள், இருவருமே அதிக சுதந்திரத்தை விரும்புபவர்கள். மற்ற எந்த எண்ணைக் காட்டிலும் ஒரே இரண்டு 1 ஜோடிகள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வார்கள். இது ஒரு ஆபத்தில்லாத உறவாகும், ஏனெனில் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட தொடங்கும்போது அது அவர்கள் இருவருக்கும் நன்மையையே வழங்கும். இது அவர்களின் உறவில் உற்சாகத்தையும்ம் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கும்.

2 மற்றும் 2
இந்த ஜோடி அன்பை கொடுத்துப் பெறுவதில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். தங்களுக்குள் எழும் எந்தவொரு பிரச்சினைக்கும் பொதுவான காரணத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு கொஞ்சம் சிரமம் எழும். இவர்கள் இருவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் அடிப்பதால் ஏற்படும் காயங்களை விட சொற்களால் ஏற்படும் காயங்கள் அதிக வலியை ஏற்படுத்தும். ஆனால் இவர்கள் பெரும்பாலும் அமைதியானவர்களாக இருப்பார்கள் அதேசமயம் ஒருவரையொருவர் மதிப்பவராகவும் இருப்பார்கள்.

3 மற்றும் 3
இவர்களின் ஜோடி மிகவும் சுவாரஸ்யமானது என்று கூறப்படுகிறது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு ஆதரவாக இருக்கும் இவர்களை போல வேடிக்கை மற்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள் யாரும் இருக்க முடியாது. யாரை யார் கட்டுப்படுத்தவுது என்ற போட்டியால் இவர்களுக்குள் பிரச்சனைகள் எழ வாய்ப்புள்ளது. ஆனால் அது விரைவில் தீர்ந்துவிடும்.

4 மற்றும் 4
இந்த் ஜோடியை உறுதி மற்றும் பாதுகாப்பு என்ற வார்த்தைகளை கொண்டு வரையறுக்கலாம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பதில் இவர்களை மிஞ்ச முடியாது. இருவரும் தங்கள் இலட்சியங்களை பகிர்ந்து கொள்வார்கள் அவற்றை சாதிக்க ஒருவருக்கொருவர் உதவியும் செய்து கொள்வார்கள். காதலிலும், தமபத்யத்திலும் இவர்களுக்கு எந்த குறையும் இருக்காது. இவர்களிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் இவர்களுக்குள் பிரச்சினை எழுவது அரிது, ஆனால் அப்படி எழுந்தால் அது அவ்வளவு சீக்கிரம் ஓயாது.

5 மற்றும் 5
இந்த ஜோடிகள் மிகவும் இணக்கமான ஜோடிகளாக இருப்பார்கள். இருவருமே சுதந்திரத்தையும், சாகசத்தையும் விரும்புபவர்களாக இருப்பார்கள். புதிய ஐடியாக்களையும், மாற்றங்களையும் விரும்புபவர்களாகவும், அவற்றை சேர்ந்தே செய்பவர்களாவும் விளங்குவார்கள். இந்த ஜோடிகளில் தங்கள் துணை என்ன நினைக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை மற்றவர் எளிதில் கணித்து விடுவார். இவர்களின் பிரச்சினை கவனக்குறைவு ஆகும், ஏனெனில் இருவருமே வேடிக்கையானவர்களாக இருப்பதால் இவர்களிடம் பொறுப்புணர்ச்சி குறைவாக இருக்கும்.

6 மற்றும் 6
இந்த ஜோடிகள் எதார்த்ததாலும், காதலாலும் நிரம்பியவர்கள். வீடும், குடும்பமும்தான் இவர்களுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். இவர்கள் மிகவும் புரிந்துணர்வு கொண்ட ஜோடிகளாக இருப்பார்கள். தங்களின் துணைக்கு எது பொருத்தமாக இருக்கும் இருக்கும் மற்றொருவர் அறிவார். எனவே இவர்கள் ஒருவரையொருவர் நன்கு அறிந்து கொள்வார்கள். யார் குடும்பத்தை வழிநடத்தவுது என்ற போட்டி இவர்களுக்குள் அடிக்கடி எழும்.

7 மற்றும் 7
7 ஆம் எண்ணில் பிறந்தவர்களின் விசித்திரமான குணங்களை மற்றொரு 7 ஆம் எண்ணில் பிறந்தவர்களால்தான் புரிந்து கொள்ள முடியும். சரியான புரிதல் மற்றும் அணுகுமுறை மூலம் இவர்கள்வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும் என்று நன்கு அறிவார்கள். இருவரின் எண்ண ஓட்டங்களும் ஒரே மாதிரி இருக்க வாய்ப்புள்ளது, எனவே ஒருவரை ஒருவர் எளிதில் புரிந்து கொள்வார்கள். இவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை யார் முதலில் சமாதானத்தை தொடங்குவது என்பதுதான் ஏனெனில் இருவருமே பிடிவாதக்காரர்களாக இருப்பார்கள்.

8 மற்றும் 8
அதிக உணர்ச்சிகளும், காதலும் நிறைந்த ஜோடி இவர்கள். இவர்களுக்குள் இருக்கும் காதல் மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும். இவர்கள் எளிதில் மற்ற காரணங்களால் திசைதிருப்பப்படுவார்கள். உறவு என்பது திடமாக இருப்பதால், தம்பதியினர் வார்த்தையிலோ செயலிலோ உணர்வின் ஆழத்தைத் தொடர்புகொள்வதில் அதிக சிரமப்படுவார்கள். இருவரும் தங்களுக்கான நேரத்தை சரியாக திட்டமிட்டுக் கொண்டால் இவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினையும் வராது.

9 மற்றும் 9
இந்த ஜோடி அறிவுசார்ந்த ஜோடியாக இருப்பார்கள். இவர்களின் ஒருவரின் வசீகரம் மற்றவரை ஈர்ப்பதாக இருக்கும். சுயநலமில்லாமல் இவர்கள் வாழ்வதால் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். ஒருவரையொருவர் பரஸ்பரம் புரிந்து கொண்டு காதலாகவும், ஆதரவாகவும் இருந்து துணையின் ஆசை மற்றும் கனவுகளை நிறைவேற்ற இவர்கள் முயலுவார்கள்.



Click it and Unblock the Notifications