Just In
- 4 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
- 7 hrs ago
தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை இருமடங்கு அதிகரிக்குமாம் தெரியுமா?
- 7 hrs ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 11 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
Don't Miss
- News
என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கு.. ரஜினி நெகிழ்ச்சி
- Movies
ரசிகர்களை காக்க வைத்து வந்த கடைசி விவசாயி டிரைலர்.. கடைசி விவசாயி யார் தெரியுமா?
- Finance
உள் நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு..!
- Sports
யாருப்பா அது? யுவராஜ் சிங்கை அடுத்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!
- Automobiles
மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களின் விலை அடுத்த ஆண்டு முதல் அதிகரிப்பு...
- Education
TNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்!! விபரங்கள் உள்ளே..!
- Technology
2020 இலக்கு: வெளியாகும் விவோ அட்டகாச ஸ்மார்ட் போன்கள் பட்டியல்
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அனுமன் சாகாவரம் பெற்றதற்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசங்களில் ஒன்று இராமாயணம் ஆகும். இராவணனை அழிக்க இராமருக்கு பேருதவியாக இருந்தது அனுமன்தான். இராமாயணத்தில் மட்டுமின்றி இந்து மதத்திலேயே அனுமன் மிகவும் முக்கியமான கடவுளாக விளங்குகிறார். உலகம் முழுவதும் இருக்கும் இந்து மக்கள் கொண்டாடும் கடவுளாக அனுமன் இருக்கிறார்.
தைரியம், வலிமை மற்றும் இறையன்பின் கடவுளாக இருக்கும் அனுமன் சாகாவரம் பெற்றவராக இருந்ததாக இந்து புராணங்கள் கூறுகிறது. அனுமனின் இந்த சாகாவரத்திற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது. அனுமன் சிரஞ்சீவியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கூட சில நம்பிக்கைகள் உள்ளது. இந்த பதிவில் அனுமனின் அமரத்துவத்துக்கு பின்னால் இருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

அனுமனின் குழந்தைப்பருவம்
தன்னுடைய குழந்தைப்பருவத்தில் அனுமன் மிகவும் குறும்புக்காரராகவும், அமைதியற்றவராகவும் இருந்தார். இது அவரின் பெற்றோரை மிகவும் கவலைகொள்ள செய்தது. ஒருமுறை அனுமன் சூரியனை பழுத்த சிவப்பு பழம் என்று நினைத்து நோக்கி பறந்தார். அனுமன் சூரியனுக்கு அருகில் சென்று அதனை விழுங்க முயன்றார் இது பிரபஞ்சத்தில் இருளையும், அழிவையும் ஏற்படுத்தும் என்று அனைவரும் அஞ்சினர்.

இந்திரன்
தேவர்களின் அதிபதியான இந்திரன் சூரியதேவர் மற்றும் பிற கடவுள்களின் வேண்டுதல்களைக் கேட்டார். அதன்பின் ஆஞ்சநேயரை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்றும் முடிவெடுத்தார். இதனால் தனது வஜ்ராயுதத்தின் மூலம் பாலகனான ஆஞ்சநேயரை தாக்கினார், அனுமன் உடனே வானத்தில் இருந்து விழுந்தார்.
MOST READ: தீபாவளி அன்னைக்கு பட்டாசு வெடிப்பதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா?

ஆஞ்சநேயர் பெயர் காரணம்
இளம் ஆஞ்சநேயர் பூமியில் விழுந்ததால், அவரது தாடையின் இடது புறம் சிதைந்தது. ஆஞ்சநேயர் என்பதன் பொருள் உடைந்த கன்னத்துடன் இருப்பவர் என்பதாகும். அனுமனின் தெய்வத்தந்தையான வாயுபகவான் தன்னுடைய மகன் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டது கண்டு கோபமுற்றார். இதனால் அனைத்து கடவுள்களுக்கும் பாடம் புகட்ட வேண்டுமென்று நினைத்தார்.

வாயுபகவானின் செயல்
வாயுபகவான் மூன்று உலகத்திலும் காற்றை நிறுத்தினார். ற்ற கடவுள்கள் உட்பட பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் காற்று இல்லாததால், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டனர். அனைவரும் சேர்ந்து வாயுபகவானை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் அதனை சாதிக்க முடியவில்லை. அதனால் அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினர்.

பிரம்மாவின் வரம்
வாயுபகவானை சமாதானப்படுத்த பிரம்மா அவருக்கு ஒரு வரம் கொடுக்க முன்வந்தார். அதன்படி எந்த கடவுளின் அஸ்திரமும் அனுமனை தாக்காது என்று கூறினார். இந்திரனும் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதுடன் அவரின் மரணத்தை அவரே தேர்வு செய்துகொள்ளும் வரத்தை கொடுத்தார்.அதன்மூலம் அனுமன் நினைத்தால் மட்டுமே மரணம் அவரை நெருங்க முடியும். இதனை அனுமனும், வாயுபகவானும் ஏற்றுக்கொண்டனர்.
MOST READ: சர்க்கரை நோய் உள்ள ஆண்கள் தங்களின் பாலியல் வாழ்க்கையை பாதுகாக்க என்ன செய்யணும் தெரியுமா?

இராமரின் வரம்
மற்றொரு புராணக்கதையின் படி பல ஆண்டுகள் அயோத்தியில் ஆட்சி புரிந்த இராமர் தன்னுடைய குருதேவரின் அறிவுரைப்படி தன்னுடைய பூமிவாழ்வை சராயு நதிக்கரையில் மூழ்கி முடித்துக்கொள்ள முடிவெடுத்தார். அதற்குமுன் அனுமனுக்கு சாகாவரத்தை வழங்கினார். உலகத்தின் முடிவு வரும் வரை அனுமன் நீண்ட ஆயுளோடும், மகிழ்ச்சியாகவும் அனுமன் வாழ வேண்டுமென்று இராமர் விரும்பினார். இராமரின் விருப்பத்தை நிறைவேற்ற அனுமனும் அந்த வரத்தை ஏற்றுக்கொண்டார். இந்த உலகம் அழியும்வரை இராமரின் பெயரைக் கூறி தவத்தில் ஈடுபடுவேன் என்று அனுமன் உறுதியேற்றார்.