For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேய்கள் பற்றி ஒவ்வொரு மதத்திலும் கூறப்பட்டுள்ள ரகசியங்கள் என்னென்ன தெரியுமா?

அனைவருக்குமே பேய்கள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும். ஏனெனில் மனித குலம் தோன்றியதில் இருந்தே இது மனிதர்களை துளைக்கும் சந்தேகமாகும்.

|

உலகில் நல்ல சக்தி என்ற ஒன்று இருந்தால் தீயசக்தி என்பது கண்டிப்பாக இருந்தே தீரும். அனைவருக்குமே பேய்கள் உண்மையில் இருக்கிறதா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்வதில் அதீத ஆர்வம் இருக்கும். ஏனெனில் மனித குலம் தோன்றியதில் இருந்தே இது மனிதர்களை துளைக்கும் சந்தேகமாகும்.

What each religion says about ghost

பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பேய்கள் பற்றிய கேள்விக்கு விடை கண்டுபிடிக்க முடியவில்லை. நமது புராணங்கள் பேய்களை பற்றி நிறைய கூறியுள்ளது. ஒவ்வொரு மதத்திலும் பேய்கள் பற்றிய கருத்துக்களும், கண்ணோட்டங்களும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த பதிவில் வெவ்வேறு மதங்களில் பேய்கள் பற்றி என்ன கூறப்படுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனிமிசம்

அனிமிசம்

அனிமிசம் என்பது உலகெங்கிலும் உள்ள பழங்குடியினருக்குள் காணப்படும் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய நம்பிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். பழங்குடி சமூகங்களுக்குள் இடையே காணப்பட்ட பொதுவான நம்பிக்கைகள்தான் அனிமிசம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், இதிலிருந்துதான் பிற மதங்கள் உண்மையில் உருவானதாக கூறப்படுகிறது.

இந்து மதம்

இந்து மதம்

இந்து மத நம்பிக்கைகளின் படி பேய்கள் என்பவர்கள் உடல் இல்லாத மனிதர்கள் ஆவர், தங்களின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்னரே இறந்தவர்கள்தான் பேயாக வருவதாக கூறப்படுகிறது. அதேபோல ஆசை நிறைவேறாமல் இறந்தவர்களும் பேயாக வருவார்கள். இந்து மதத்தில் மறுவுலக வாழ்க்கை மீது உறுதியான நம்பிக்கை உள்ளது.

புத்த மதம்

புத்த மதம்

புத்த மதம் பேய்கள் இருப்பதை கதைகள் மற்றும் படங்கள் மூலம் உணர்த்துகிறது. அவர்கள் பேய்களை பசி பேய்கள் என்று அழைக்கின்றனர். பூமியில் நிறைவேறாமல் போன ஆசைகளை நிறைவேற்ற அவை முயற்சிப்பதால் அவை பசி பேய்கள் என்று புத்த மதத்தில் அழைக்கப்படுகிறது.

யூதம்

யூதம்

பேய்கள் உண்மையில் இருக்கிறது ஆனால் அவற்றை பற்றி பேசக்கூடாது என்ற பாரம்பரிய கருத்தை யூத மதம் கொண்டுள்ளது. பேய்க்கான ஹெப்ரூ சொல் ஓவோத் ஆகும், ஆனால் பேய்க்கு மிகவும் பொருத்தமான சொல் டைபக் என்று யூதர்கள் கூறுகிறார்கள். டைபக் என்பது அலையும் ஆத்மா எனவும், அது உயிருள்ள நபர்களுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் எனவும், தேவைப்பட்டால் அவர்களை கட்டுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

MOST READ: உலகில் ஆரோக்கியமாக இருக்கும் எல்லோருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் இந்த பழக்கங்கள் இருக்கிறதாம்...!

கிறிஸ்துவம்

கிறிஸ்துவம்

கிறிஸ்துவம், குறிப்பாக அடிப்படை கிறிஸ்துவத்தில் அவர்கள் நித்திய நரகத்தை பற்றி அறிந்திருப்பதால் பேய்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை. அடிப்படைவாதிகள் மனிதர்கள் பேய்களாக மாறமுடியாது என்று நம்புகிறார்கள். மரணத்திற்கு பிறகு ஒருவர் நித்திய சொர்க்கத்திற்கோ அல்லது நித்யா நரகத்திற்க்கோதான் செல்ல முடியுமே தவிர பூமியில் அவர்களால் இருக்க முடியாது.

இஸ்லாம்

இஸ்லாம்

இஸ்லாம் மொத்தமாகவே பேய்கள் மற்றும் மறுபிறவி இருப்பதை கற்பிக்கவில்லை. ஏனெனில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானில் எந்த இடத்திலும் பேய்கள் பற்றி குறிப்பிடப்பவில்லை. அவர்கள் நம்பும் ஒரே நம்பிக்கை இறுதி தீர்ப்பு வரை இறந்தவர்களின் ஆன்மா அவர்களின் கல்லறையை சுற்றிவரும்.

பூர்வீக அமெரிக்க நம்பிக்கை

பூர்வீக அமெரிக்க நம்பிக்கை

பூர்வீக அமெரிக்க ஆன்மீக நம்பிக்கைகள் பேய்கள் மற்றும் ஆவிகள் மீது அபார நம்பிக்கை கொண்டுள்ளது. இறந்தவர்கள் இறந்தும் வாழ்கிறார்கள், நம்மை பார்க்கிறார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை மரணம் என்பது அடுத்த வாழ்விற்கோ அல்லது அடுத்த உலகத்திற்கோ இருக்கும் வாசல் ஆகும். எனவே அதனை நினைத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்.

MOST READ: இந்த செடியை இப்படி வளர்ப்பது உங்கள் இல்லத்தில் வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் ஏற்படுத்துமாம்...!

சீன நம்பிக்கைகள்

சீன நம்பிக்கைகள்

சீன கலாச்சாரத்தில் பேய்கள் பற்றிய பல குறிப்புகள் உள்ளது. கன்பூசியஸ் கூறுகையில் "பேய்களையும் கடவுள்களையும் மதிக்க வேண்டும், ஆனால் அவர்களிடமிருந்து விலகி இருக்க " என்று கூறுகிறார். ஒருவர் இறந்த வழியை பொறுத்து அவர்கள் பல்வேறு வடிவங்களை எடுக்கிறார்கள், அவற்றில் சில ஆபத்தானவையாக கூட இருக்கலாம். சீனர்களின் பேய் பற்றிய நம்பிக்கைகள் ஜப்பான் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What each culture says about ghost

Read to know what each religion says about ghost.
Story first published: Thursday, July 25, 2019, 12:30 [IST]
Desktop Bottom Promotion