For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்ககிட்ட பழகுறவங்களோட உண்மையான குணத்த தெரிஞ்சிக்கணுமா? இத கவனியுங்க போதும்...!

ஒருவரை வரவேற்கும் விதமாகவும், வாழ்த்தும் விதமாகவும் கைகுலுக்குவது பழங்காலம் முதலே கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முறையாகும்.

|

ஒருவரை வரவேற்கும் விதமாகவும், வாழ்த்தும் விதமாகவும் கைகுலுக்குவது பழங்காலம் முதலே கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு முறையாகும். ஆனால் ஆச்சரியமளிக்கும் வகையில் நீங்கள் கைகுலுக்கும் விதமே நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தக்கூடும். எனவே அடுத்தமுறை பிறருடன் கைகுலுக்கும் போது அவர்கள் உங்களின் நேர்மறை குணங்களை மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கைகுலுக்குங்கள்.

What Does Your Handshake Reveal About You

இந்த காலக்கட்டத்தில் ஒருவரை பற்றி தெரிந்து கொள்ள அவர்களின் ஒருநொடி நடவடிக்கையே போதும். இந்த சூழ்நிலையில் நீங்கள் அனைத்திலும் உங்களை முழுமையனாராக வைத்துக்கொள்ள அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதில் கைகுலுக்குவது முக்கியமான இடத்தை வகிக்கிறது. உங்கள் தன்னம்பிக்கை, திறமை, செல்வாக்கு, வலிமை என அனைத்தையும் உங்களின் கைகுலுக்கலில் இருந்தே கண்டறிந்து விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தளர்வான கைகுலுக்கல்

தளர்வான கைகுலுக்கல்

தளர்வான கைகுலுக்கல் இழிநிலை, வைராக்கியமின்மை மற்றும் அவநம்பிக்கையின் அடையாளமாகும். இது ஒரு நம்பிக்கையற்ற ஆளுமையின் அறிகுறியாகும், இப்படிப்பட்டவர்களை தங்கள் அருகில் வைத்துக்கொள்ள யாரும் விரும்பமாட்டார்கள்.

நீண்ட கைகுலுக்கல்

நீண்ட கைகுலுக்கல்

ஒருவருடன் கைகுலுக்கும் போது அவர்கள் உங்கள் கையை பிடித்துக் கொண்டு விட மறுத்தால் அவர்களை நம்பிவிட வேண்டாம். அதற்கு காரணம் அவர்கள் உங்களிடம் இருந்து எதையோ எதிர்பார்க்கிறார்கள், எனவே உங்களை அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வது நல்லது.

 அழுத்தமான கைகுலுக்கல்

அழுத்தமான கைகுலுக்கல்

மற்றவருடன் கைகுலுக்கும் போது அவர்க்ளின் கையை கசக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பவர்கள் எப்பொழுதும் ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தமாட்டார்கள். இந்த வகையான கைகுலுக்கல் நீங்கள் ஆக்ரோஷமானவர் என்ற பிம்பத்தை அவர்களுக்கு உணர்த்தும்.

MOST READ:இந்த ராசிகளில் பிறந்த ஆண்களுக்கு ரொமான்டிக்காக காதலிக்கவே தெரியாதாம்...கத்துக்கோங்கப்பா...!

உடலுக்கு நெருக்கமான கைகுலுக்கல்

உடலுக்கு நெருக்கமான கைகுலுக்கல்

கையை உடலுக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு முழங்கையை மட்டும் கைகுலுக்க வழங்குபவர்கலாக நீங்கள் இருந்தால் நீங்கள் பயம், பதட்டம், நட்பின்மை மற்றும் ரகசியமானவராக அடையாளப்படுத்தப்படுவீர்கள்.

 உறுதியான கைகுலுக்கல்

உறுதியான கைகுலுக்கல்

இதுதான் சிறந்த தோற்றத்தை ஏற்படுத்தும் கைகுலுக்கல் முறை ஆகும். இது உங்களை வலிமையானவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், நேர்மறை எண்ணம் கொண்டவர்களாகவும் காட்டும். உடல் மொழி வல்லுனர்களின் கருத்துப்படி இப்படி கைகுலுக்குபவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது.

 அரசியல்வாதி கைகுலுக்கல்

அரசியல்வாதி கைகுலுக்கல்

இதற்கு இப்படி பெயர் வரக்காரணம் இதனை பெரும்பாலான அரசியல்வாதிகள் செய்வதுதான். வலது கையால் கைகுலுக்கும் போது உங்கள் கையை இடது கையால் மூடுவார்கள். இதனை சரியான நபர் பண்ணும் போது அது பாசம், கருணை, உண்மை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக கருதப்படும்.

MOST READ:சாணக்கியரின் கூற்றுப்படி உங்கள் எதிரிக்கு நீங்கள் வழங்கும் மிகப்பெரிய தண்டனை எது தெரியுமா?

சர்வாதிகார கைகுலுக்கல்

சர்வாதிகார கைகுலுக்கல்

சிலர் இந்த கைகுலுக்கலை செய்வார்கள், அது அவர்களின் மோசமான ஆளுமையின் வெளிப்பாடு, அவர்கள் கை மேலே இருக்கும்போது மற்றும் அவர்களின் உள்ளங்கை கீழ்நோக்கி எதிர்கொள்ளும். இப்படி கைகுலுக்குபவர்கள் அனைத்து சூழ்நிலைகளும் தனது கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

குளிர்ச்சியான கைகுலுக்கல்

குளிர்ச்சியான கைகுலுக்கல்

ஒருவர் பதட்டமடையும் போது அவர்களின் உள்ளங்கை வியர்வையாக மாறலாம். இப்படிபட்டவர்களை நிம்மதியாக வைக்க உங்களால் முடிந்ததை செய்யுங்கள். இந்த வகையில் கைகுலுக்குபவர்கள் பலவீனமானவர்களாக இருப்பார்கள். இது நான் பதட்டமானவன் என்று அவர்கள் கூறுவதன் வெளிப்பாடு ஆகும்.

மல்யுத்த கைகுலுக்கல்

மல்யுத்த கைகுலுக்கல்

அதிக ஆக்ரோஷமானவர்களுக்கு மிகவும் பிடித்த கைகுலுக்கல் இது. இந்த முறையில் அவர்களின் வலிமையும், மேலாதிக்கமும் வெளிப்படும். இப்படிப்பட்டவர்களுடன் கைகுலுக்கும் போது உங்களுக்கு உடனடி வலி ஏற்படும், இதனால் நீங்கள் உடனடியாக கைகளை எடுத்துக்கொள்வீர்கள். சிலசமயம் பலவீனமானவர்களும் தங்களை பலசாலிகள் பல காட்டிக்கொள்ள இந்த கைகுலுக்கலை பயன்படுத்துவார்கள்.

MOST READ:பேய்களை ஏன் நம் கண்களால் பார்க்க முடிவதில்லை தெரியுமா? யாரெல்லாம் பேய்கள் இருப்பதை உணர முடியும்?

விரல்நுனி கைகுலுக்கல்

விரல்நுனி கைகுலுக்கல்

இந்த வகை கைகுலுக்கல் பொதுவாக ஆணுக்கும், பெண்ணக்கும் இடையில் நடப்பதாக இருக்கும். பெண்கள் தங்கள் தனிப்பட்ட குணத்தைப் பற்றி ஒருவித உடைமை கொண்டவர்களாக இருப்பதால், மற்றவர் தனது விரல்களைப் புரிந்து கொள்ள முடியாத வகையில் அவர்கள் கையை நீட்டுகிறார்கள். இது அதிகாரம் மற்றும் மேலாதிக்கத்தின் அடையாளமாகும்.

நழுவும் கைகுலுக்கல்

நழுவும் கைகுலுக்கல்

ஒரு நபரின் கையில் எலும்புகள் இல்லாதது போல உணர்ந்தால் அவர்களுக்கு நழுவும் கைகுலுக்கல் செய்கிறார்கள் என்று அர்த்தம். இது அடிபணிந்த மற்றும் தனிமையான ஆளுமையை குறிக்கிறது. இப்படிப்பட்ட கைகுலுக்கலை தவிர்க்கவும் ஏனெனில் இது உங்களுக்கு வாழ்க்கை மீது எந்த அக்கறையும், இலட்சியமும் இல்லை என்று குறிக்கும்.

 வேகமான கைகுலுக்கல்

வேகமான கைகுலுக்கல்

கைகுலுக்கியா மைக்ரோ நொடியில் கையை திரும்ப எடுத்துக்கொள்வது இந்த கைகுலுக்கல் வகையை சேர்ந்தது. இது உணர்த்துவது என்னவெனில் அவர்கள் உங்களை விட திக நம்பிக்கை கொண்டவர்கள் என்பதாகும்.

MOST READ:உங்கள் உணவில் முட்டைக்குப் பதில் இந்த சைவ பொருட்களை கொண்டே அதற்கு சமமான ஊட்டச்சத்தைப் பெறலாம்...!

இழுக்கும் கைகுலுக்கல்

இழுக்கும் கைகுலுக்கல்

ஒருவர் கைகுலுக்கும்போது உங்களை அவர்களை நோக்கி இழுப்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? இப்படிப்பட்டவர்கள் உங்களை கட்டுப்படுத்த விரும்புவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இது வலிமையின் அடையாளம் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Does Your Handshake Reveal About You

Read to know what does your handshake reveal about your personality.
Desktop Bottom Promotion