Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
உங்க கனவுல நாய் உங்கள துரத்துதா? அப்ப அதுக்கு இதுதான் அர்த்தமாம்...ஷாக் ஆகாம படிங்க...!
மகிழ்ச்சியான, ஆற்றல் மிக்க நாய்களைப் பற்றி கனவில் வருகிறது என்றால், உங்கள் வாழ்க்கையில் ஒரு மன அழுத்தத்திலிருந்து நீங்கள் குணமடைந்து வருகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது.
படுக்கையிலிருந்து உங்களைத் துள்ளிக் குதிக்கச் செய்த ஒரு நாயைப் பற்றி நீங்கள் சமீபத்தில் கனவு கண்டீர்களா? நாய்களைப் பற்றி கனவு காண்பது மிகவும் பொதுவானது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நாய்கள் அழகானது மற்றும் நன்றியுள்ளது. வீட்டில் செல்லப்பிராணியாக நாயை வளர்க்கிறோம். இது வீட்டை பாதுகாக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் செல்லப்பிராணியான நாயை பிடிக்கும். உங்களைப் பற்றியும் உங்களுக்கு நெருக்கமானவர்களை பற்றியும் கனவு காண்பது உங்களை அன்பாகவும் பாசமாகவும் உணர வைக்கும்.

ஆனால், உங்கள் கனவில் விலங்குகள் எப்போதாவது வரலாம். அதில், நாய்களைப் பற்றி சில கனவுகள் வரும்போது பலவிதமான விஷயங்களை உங்களுக்கு தெரியப்படுத்தலாம். நாய்களைப் பற்றிய பல்வேறு வகையான கனவுகள் எதைக் குறிக்கின்றன என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

மகிழ்ச்சியான நாய்
மகிழ்ச்சியான, ஆற்றல் மிக்க நாய்களைப் பற்றி கனவில் வருகிறது என்றால், உங்கள் வாழ்க்கையில் ஒரு மன அழுத்தத்திலிருந்து நீங்கள் குணமடைந்து வருகிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. யாரோ ஒருவர் உங்களை வழிநடத்துகிறார் அல்லது உங்கள் பாதுகாவலர் தேவதையாக செயல்படுகிறார் என்பதையும் இது குறிக்கிறது.

நாய் உங்களை துரத்துவது
ஒரு சுபாவமுள்ள நாய் உங்களைத் துரத்துவது போன்று நீங்கள் கனவு கண்டால், நீங்கள் மிகவும் கவலையாகவும், மன அழுத்தமாகவும், சோர்வாகவும் இருப்பதை இது குறிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய தடையாக மாறும் கடினமான சூழ்நிலையிலிருந்து நீங்கள் தப்பிக்க முயற்சிக்கிறீர்கள்.

தெரிந்த நாய் பற்றிய கனவு
உங்களுக்குத் தெரிந்த அல்லது பார்த்த ஒரு நாயைப் பற்றி கனவு காண்கிறீர்கள் எனில், இதன் பொருள் நீங்கள் யாரையும் தெளிவாகக் காணவில்லை அல்லது உங்கள் செல்லப்பிராணியை நீங்கள் இழந்துவிடுவீர்கள். இந்த வகையான கனவுகள் மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு ஆறுதல் மற்றும் கவனிப்பு தேவை என்பதைக் குறிக்கிறது.

ஒரு நாய் நடப்பது பற்றிய கனவு
ஒரு நாய் நடப்பது போன்று கனவு காண்கிறீர்கள் எனில், இதன் பொருள் நீங்கள் வெற்றிக்கான பாதையில் செல்கிறீர்கள். நீங்கள் கடின உழைப்பில் தீவிர நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் உங்கள் இலக்குகளை அடைவதற்கான திறமை உங்களிடம் உள்ளது என்பதைக் குறிக்கிறது.

உங்களின் தற்போதைய நாயைப் பற்றிய கனவு
இதன் பொருள் நீங்கள் தற்போது உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட சிக்கலைப் பற்றி சிந்திக்கிறீர்கள். இதுபோன்று கனவு வருவது, உங்கள் நிலைமையை மிக விரிவாக உங்களை சிந்திக்க வைக்கலாம். இது ஒரு நம்பிக்கைக்குரிய சூழ்நிலையாக இருக்கலாம் ஆனால் தீவிரமான ஒன்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது.

நாய் காயமடையும் கனவு
அத்தகைய சூழ்நிலையை நீங்கள் கனவு காண்கிறீர்கள் என்றால், ஆழ்ந்த வலி, நோய்வாய்ப்பட்ட அல்லது பெரும் இழப்பை அனுபவிக்கும் ஒருவரைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள். இது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ அல்லது நெருங்கியவர்களுக்கோ ஏற்பட வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications