For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களை வாடகைக்கு அழைத்துச்செல்லும் வினோத வேலை...இந்த வேலையவாது இன்ஜினியருங்களுக்கு கொடுங்கப்பா...!

மக்கள் பணத்திற்காக வித்தியாசமான வேலைகளைச் செய்கிறார்கள். இதில் சில வேலைகள் மிகவும் வேடிக்கையானதாகவும், சுலபமானதாகவும் இருக்கிறது.

|

உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் என்பது பெரும் பிரச்சினையாக உள்ளது, இந்தியாவில் படித்தவர்களின் நிலைப்பற்றி கூறவே தேவையில்லை. படித்தவர்களை பக்கோடா கடை போடும் சொல்லும் நிலையில்தான் நம் நாட்டில் படித்தவர்களின் நிலை உள்ளது. மறுபுறம் வேலையில் இருப்பவர்கள் தங்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

Weird Jobs That Pay Surprisingly Well

மக்கள் பணத்திற்காக வித்தியாசமான வேலைகளைச் செய்கிறார்கள். இதில் சில வேலைகள் மிகவும் வேடிக்கையானதாகவும், சுலபமானதாகவும் இருக்கிறது. ஆனால் அதற்கு அளிக்கப்படும் சம்பளம் கற்பனைக்கு எட்டாத அளவில் உள்ளது. இங்கே மிக அதிக சம்பளம் வழங்கப்படும் சில வேடிக்கையான வேலைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 தொழில்முறை கட்டியணைப்பவர்கள்

தொழில்முறை கட்டியணைப்பவர்கள்

இந்த வேலை உங்களுக்கு வேடிக்கையானதாக தோன்றினாலும் பலரும் இந்த சேவைக்காக கட்டணம் செலுத்த தயாராக இருக்கிறார்கள். தொழில்முறை கட்டியணைப்பவர்கள் நிறைய பணம் பெறுகிறார்கள், இது இந்த வேலையின் மோசமான தன்மைக்கு ஏற்றதாக இருக்கும். இதற்கு இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் ஒரு மணி நேரத்திற்கு 60 முதல் 80 டாலர்கள் ஆகும். முதலில் ஜப்பானில் தொடங்கப்பட்ட இது இப்பொழுது அமெரிக்காவிலும் பரவிவிட்டது. தனிமையில் வாடுபவர்கள் இவர்களை அணுகுகிறார்கள்.

வாடகை காதலன்

வாடகை காதலன்

உங்களிடம் பணம் இருந்தால், டோக்கியோவில் ஒரு ஆண் நண்பரைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு ஒருபோதும் பிரச்சினையாக இருக்காது. ஆமாம், டோக்கியோவில் வாடகை காதலன் என்ற வேலையைச் செய்யும் ஆண்கள் இருக்கிறார்கள், அங்கு அவர்கள் அந்தப் பெண்ணை கவனித்துக்கொள்வதற்காக பணம் பெறுகிறார்கள் மேலும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பணியையும் செய்கிறார்கள். அது எந்த வகையான கோரிக்கையாகவும் இருக்கலாம். ஆனால் இது மிகவும் சுவாரஸ்யமான வேலை என்பதில் சந்தேகமே இல்லை.

நாய் உணவு சோதனையாளர்

நாய் உணவு சோதனையாளர்

உணவின் சுவையை சோதிப்பது சாதாரணமான வேலைதான். ஆனால் நாய்களுடைய உணவின் சுவையை சோதிப்பது நிச்சயம் சாதாரண வேலையாக இருக்க முடியாது. இதற்காக மக்கள் சம்பளமும் பெறுகிறார்கள். நாய் உணவு பிராண்டுகள் தங்கள் நாய் உணவைச் சோதிக்கவும், சுவை, ஊட்டச்சத்து போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்கவும் மக்களை நியமிக்கின்றன, மேலும் அவர்கள் உணவை அதன் பேக்கேஜிங் மூலமும் தீர்மானிக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான நாய் உணவு சோதனையாளர்கள் நாய் உணவை உட்கொள்வதற்கு முன்பு வெளியே துப்புகிறார்கள். இவர்களுக்கு இதற்கு வழங்கப்படும் சம்பளம் 40,000 டாலர்களில் இருந்து தொடங்குகிறது.

MOST READ:பெண்ணை கடத்துவது, வன்கொடுமை செய்வது எதுவுமே இங்கு தப்பில்லை...பெண்களுக்கு எதிரான மோசமான சட்டங்கள்...

 நீர்விளையாட்டு சோதனையாளர்

நீர்விளையாட்டு சோதனையாளர்

இது மிகவும் வித்தியசமான வேலையாக இல்லாமல் இருந்தாலும் நிச்சயம் சுவாரஸ்யமான ஒரு வேலைதான். ஓரு வாட்டர்லைடு சோதனையாளர் வெவ்வேறு நீர் பூங்காக்களுக்குச் சென்று ஸ்லைடுகளின் செயல்திறனைச் சோதிக்கிறார், இது எவ்வளவு வேடிக்கையாக இருக்கிறது, மேலும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஒரு சோதனையாளர் வாட்டர்லைடு நிறுவனத்திடம் சொல்வார். ஸ்லைடுகளை சவாரி செய்வது மற்றும் பணம் பெறுவது வேடிக்கையானது என்றாலும், பல நாடுகளுக்கும் வெவ்வேறு இடங்களுக்கும் பயணம் செய்வது சில நேரங்களில் கடினமாக இருக்கும். இதற்கு வழங்கப்படும் குறைந்தபட்சம் சம்பளம் 30,000 டாலர்கள் ஆகும்.

 கோல்ஃப் பால் டைவர்

கோல்ஃப் பால் டைவர்

நீங்கள் கோல்பைப் பார்த்திருந்தால், சில நேரங்களில் பந்து தண்ணீருக்குள் செல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு கோல்ஃப் பந்து டைவரின் வேலை, தண்ணீரில் விழும் கோல்ஃப் பந்துகளை சென்று எடுத்து வருவதாகும். இந்த வேலை எளிதானது என்று தோன்றினாலும், இது மிகவும் ஆபத்தானது மற்றும் ஒரு கோல்ஃப் பந்துகளை தண்ணீரிலிருந்து வெளியே இழுக்க நீங்கள் வலுவான தசையை கொண்டிருக்க வேண்டும். கோல்ஃப் பந்து டைவர்ஸ் தண்ணீரில் மூழ்கி சில நேரங்களில் அலிகேட்டர்கள் மற்றும் பிற ஆபத்துக்களை சுற்றி கொண்டிருக்கும். சவாலான இந்த வேலைக்கு 50,000 முதல் 1,00,000 டாலர் வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

பர்சனல் ஷாப்பர்

பர்சனல் ஷாப்பர்

ஷாப்பிங் செய்வது என்பது யாருக்குத்தான் பிடிக்காது, ஆனால் என்ன வாங்க வேண்டும் என்று சிந்திக்கும்போதுதான் குழப்பம் ஏற்படுகிறது. பர்சனல் ஷாப்பர்கள் நீங்கள் எதை வாங்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார்கள். இது எளிதான வேலை என்று தோன்றலாம் ஆனால் சில நேரங்களில் அது கடினமாக இருக்கும். பர்சனல் ஷாப்பராக இருப்பவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுடன் ஒரு நல்லுறவை உருவாக்கிக் கொண்டு அவர்களின் பாணியை உருவாக்கிக் கொண்டு அவர்களுக்கு எது பொருந்தும் என்று பார்த்து ஆலோசனை வழங்க வேண்டும். பொதுவாக இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 60 டாலர்களை சம்பளமாக வாங்குகிறார்கள்.

 ஐஸ்க்ரீம் சோதனையாளர்

ஐஸ்க்ரீம் சோதனையாளர்

இது அனைவருக்கும் பிடித்த ஒரு "கூலான" வேலையாகும். ஐஸ்க்ரீமை யார் வேண்டுமென்றாலும் சுவைத்து பார்க்கலாம் ஆனால் அது மக்களுக்கு ஏற்றதா இல்லையா என்பதை உணவு விஞ்ஞானியால் மட்டுமே கூற இயலும். ஐஸ்கிரீமை அதன் சுவை, நிறம், சுவை, வாசனை, அமைப்பு மற்றும் அது எப்படி இருக்கிறது என்பதை அடிப்படையாகக் கொண்டு உணவு விஞ்ஞானி சோதனை செய்ய வேண்டும். சிலசமயம் அவர்கள் புதிய சுவையைக் கூட கண்டறிவார்கள். இவர்களுக்கு இதற்கு 1,00,000 டாலர்கள் வரை சமபளம் பெறுகிறார்கள்.

MOST READ:ஒரே காதலனை சண்டையில்லாமல் 'பகிர்ந்து' கொள்ளும் இரட்டை சகோதரிகள்... அதிர்ஷ்டக்கார ஆளு...!

 தீவை பராமரிப்பவர்

தீவை பராமரிப்பவர்

நீங்கள் இயற்கையை நேசிக்கிறீர்கள் மற்றும் உலகின் அமைதியான மூலைகளை ஆராய விரும்பினால், இந்த வேலை உங்களுக்கானது. ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தீவுகளை வைத்திருக்கும் தனிநபர்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் பொதுவாக தங்கள் தீவுகளை கவனித்துக் கொள்ளக்கூடிய நபர்களை வேலைக்கு அமர்த்தும். ஆமாம், நீங்கள் தனியாக இருப்பதை ரசிக்க விரும்பினால், சுற்றுச்சூழலையும் ஆராய்வீர்கள் என்றால், நீங்கள் எளிதாக இந்த வேலைக்கு தகுதி பெறலாம். ஊதியம் உங்களை பணியமர்த்தும் தீவு உரிமையாளரைப் பொறுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Jobs That Pay Surprisingly Well

A few jobs can be difficult to do but today, we would be mentioning about some of the bizarre and unusual jobs in the world
Story first published: Friday, February 14, 2020, 17:20 [IST]
Desktop Bottom Promotion