For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மர்மங்கள் நிறைந்த சுடுகாடுகள்... தைரியம் உள்ளவர்கள் மட்டும் தெரிந்து கொள்ள வேண்டிய மர்மங்கள்...!

சுடுகாடு என்பது எப்பொழுதுமே அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தும் இடமாகும். இறந்தவர்களுடன் பேசுவது முதல் சில மாந்திரீக செயல்களுக்கு சிலர் சுடுகாட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

|

சுடுகாடு என்பது எப்பொழுதுமே அனைவருக்கும் பயத்தை ஏற்படுத்தும் இடமாகும். இறந்தவர்களுடன் பேசுவது முதல் சில மாந்திரீக செயல்களுக்கு சிலர் சுடுகாட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். இதுவரை கண்டறியப்பட்டுள்ள எண்ணிக்கையின் படி உலகில் 300 க்கும் மேற்பட்ட வினோதமான சுடுகாடுகள் உள்ளது.

Weird Burial Grounds In The World

இந்த பயங்கரமான சுடுகாடுகள் அனைத்தும் மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவையாக உள்ளது. இங்கு ஆன்மாக்கள் மகிழ்ச்சியாகவும், கோபமாகவும் அலைவதாக நம்பப்படுகிறது. இந்த பதிவில் உலகின் பயங்கரமான சுடுகாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தி சேஸ் வால்ட்

தி சேஸ் வால்ட்

பார்படாஸ் சேஸ் வால்ட்டுக்கு நன்கு அறியப்பட்டவர். இந்த வினோதமான சுடுகாடு நகரும் சவப்பெட்டிகளின் இடமாக கருதப்படுகிறது. பாரம்பரிய நம்பிக்கைகளின் படி சீல் செய்யப்பட்ட இந்த வால்ட் ஒவ்வொரு முறை திறக்கும்போதும் அங்கு இருந்த சவப்பெட்டிகள் இடம் மாறியிருந்தது கண்டறியப்பட்டது.

செயின்ட் லூயிஸ் கல்லறை

செயின்ட் லூயிஸ் கல்லறை

இந்த சுடுகாடு மர்மமானது என்று கூறப்பட காரணம் இங்கு வூடு பாதிரியாரின் ஆன்மாக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் துளியும் தொடர்பில்லாத நபர்களால் அடையாளம் காணப்பட்டது. பாதிரியார் தனது மகளுடன் இரவு முழுவதும் கல்லறையை சுற்றி வருவதாக பலரும் கூறியுள்ளனர்.

 கடகோம்பே டி கப்புசினி

கடகோம்பே டி கப்புசினி

இத்தாலியின் சிசிலியின் பலேர்மோவில் அமைந்துள்ள ஒரு சிறிய கல்லறைத் தோட்டம் கேடகோம்பே டீ கப்புசினி அல்லது கபுச்சின்ஸின் கேடாகோம்ப்ஸ் ஆகும். இதன் வினோதம் என்னவென்றால் இதன் கிரிப்டின் சுவர்கள் எம்பால்மிங் செய்யப்பட்ட உடல்களால் நிரப்பப்பட்டுள்ளன. நீங்கள் இறந்த உடல்களை கீழ்நோக்கி பார்க்கும்போது சுவரின் உடல்கள் உங்களை பார்த்துக் கொண்டிருக்கும்.

MOST READ: வரப்போகிற புது ஆண்டு இந்த 6 ராசிக்காரங்களோட திருமண வாழ்க்கையில பெரிய ஆபத்துகளை ஏற்படுத்த போகுதாம்...!

ப்ரூக்வுட் கல்லறை

ப்ரூக்வுட் கல்லறை

இந்த வினோதமான கல்லறை 'லண்டன் நெக்ரோபோலிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது. தனிமையில் பார்ப்பதற்கு இந்த இடங்கள் சரியான இடமல்ல. ஏனெனில் இறந்தவர்களின் குரல்கள் மிகவும் சத்தமாகக் கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது, இது உங்கள் வயிற்றுக்குள் பயத்தை ஏற்படுத்தும்.

கடகோம்போஸ் ஆப் பாரிஸ்

கடகோம்போஸ் ஆப் பாரிஸ்

உலகின் மிக மோசமான மற்றும் பழமையான சுடுகாடு இதுவாகும். இந்த கடகோம்போஸ் நகரின் அடியில் அமைந்துள்ள சுவர்களில் ஆயிரக்கணக்கான மண்டை ஓடுகள் மற்றும் பிற எலும்புகள் உள்ளன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இங்கு ‘புதைக்கப்பட்டுள்ளனர்' என்பதால் இது பேய்களின் பிறப்பிடமாக கருதப்படுகிறது.

ஓசூரி செக்

ஓசூரி செக்

சுடுகாடு மட்டுமே இறந்தவர்களின் இடம் என்று நீங்கள் நினைத்தால் உங்கள் எண்ணம் முற்றிலும் தவறாகும். ஏனெனில் ஒசூரி செக் என்பது ஒரு வகை தேவாலயமாகும். இது இறந்தவர்களின் எலும்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை செய்யும் இடத்தில் கூட ஆன்மாக்கள் சுற்றியிருப்பது போன்ற உணர்வு இருக்கும்.

MOST READ: இந்த சம்வங்களால்தான் பெண்கள் ரொமான்டிக்கான காதலை வெறுக்க தொடங்குகிறார்களாம் தெரியுமா?

ரெக்கோலெட்டா கல்லறை

ரெக்கோலெட்டா கல்லறை

பியூனஸ் ஏரீஸில் அமைந்துள்ள ரெக்கோலெட்டா கல்லறை வெளிப்புறத்தில் அழகாக இருக்கிறது. ஆனால் இந்த ரெக்கோலெட்டா கல்லறையை சுற்றி இருக்கும் மர்மம் என்னவெனில் இந்த இடம் முழுவதும் பேய்களால் சூழப்பட்டுள்ளது. உயிருடன் புதைக்கப்பட்ட ருஃபினா கம்பசெரெஸ் என்ற இளம் பெண்ணும், தற்கொலை செய்துகொண்ட இரவு காவலாளியான டேவிட் அலெனோவும் இன்றுவரை ரெக்கோலெட்டா கல்லறையில் உலவுவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஆக்டூன் துனிச்சில் முக்னாலிஸ்

ஆக்டூன் துனிச்சில் முக்னாலிஸ்

பெலிஸில் உள்ள புதைகுழி போன்ற இந்த குகை தைரியமானவர்கள் மட்டுமே செல்ல வேண்டிய இடமாகும். இங்கு வந்தவர்கள் அறைகள் முழுவதும் சிதறிய எலும்புக்கூடுகள் வழியாக நடந்து வரவேண்டும். நீங்கள் ‘கிரிஸ்டல் மெய்டன்' வழியாகச் செல்ல நேர்ந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த எலும்புக்கூடு தனது உயிரை தியாகம் செய்த ஒரு டீனேஜ் பெண்ணுடையது. அவரின் எலும்புகள் அங்கு படிகப்படுத்தப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weird Burial Grounds In The World

Read to know about some creepiest burial grounds in the world.
Story first published: Saturday, December 12, 2020, 10:05 [IST]
Desktop Bottom Promotion