இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்...

ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். வரப்போகிற ஏழு நாட்களும் நல்லதாக நடக்குமா? கெட்டதாக ஏதாவது இருக்குமோ என்று பயப்படுகிறீர்களா? கவலை வேண்டாம்.

ஜூன் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும். வரப்போகிற ஏழு நாட்களும் நல்லதாக நடக்குமா? கெட்டதாக ஏதாவது இருக்குமோ என்று பயப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். நிறைய பேருக்கு சந்தோஷங்கள் அதிகமாகவே இருக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்கலாம். உங்களுக்காகவே இந்த வார ராசிபலன்கள் எழுதியிருக்கிறோம் படித்து பாருங்க.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். நீண்ட காலமாக நினைத்திருந்த எண்ணங்கள் நிறைவேறும். கனவு நனவாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். நோய் பற்றிய பயம் போகும். சகோதரர் சகோதரிகளிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். தாய் மாமன் வகையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் தீரும். நிறைய சுப செலவுகள் வரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். இது வெற்றிகரமான வாரமாக அமையும். உழைக்கும் எண்ணங்களை அதிகரியுங்கள். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கவுரவம் உயரும். வருமானம் உயரும் குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு நினைத்ததை சாதிக்கும் வாரம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொறுமையாக இருங்க மனக்கசப்புகள் மாறும். வியாபாரத்தில் லாபம் வரும். பணத்தேவை பூர்த்தியாகும். குழந்தைகள் மூலம் சுப காரியங்கள் நடைபெறும். வேலை செய்பவர்களுக்கு சிக்கல் நீங்கி நன்மை நடக்கும். மாணவர்களுக்கு கவனமும் அக்கறையும் தேவை நல்லா படிங்க. உயர்கல்விக்கு தயாராக இருப்பவங்களுக்கு நல்லதே நடக்கும். சஷ்டி தினத்தில் முருகனை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு நன்மைகள் நடக்கும். வரவுகள் வருவதெல்லாம் செலவுகள் அதிகமாகும். வார ஆரம்பத்தில் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையும் கவனமும் தேவை. உங்களுடைய முக்கிய முடிவுகளை நிதானமாக இருக்கணும். தொழிலில் ஏற்பட்ட கஷ்டங்கள் நீங்கும். நல்ல தகவல்கள் தேடி வரும். பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. யாருக்காகவும் எதற்காகவும் வாக்குறுதி கொடுக்காதீங்க. அப்புறம் மாட்டிக்குவீங்க. உறவினர்களிடம் கவனமாக பேசுங்க. தெளிவாக பேசுங்க. சண்டை சச்சரவுகள் வரலாம். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வேலை செய்யும் இடத்தில் பொறுப்பா இருங்க. இல்லன்னா ஏதாவது பிரச்சினையில் மாட்டிப்பீங்க. வரப்போகிற வாய்ப்பை பயன்படுத்திக்கங்க. வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் தாமதமாக வரும் எப்படியாவது சமாளிங்க. பெண்கள் வாக்கில் நிதானமாக இருங்க. சின்னச் சின்ன கவலைகள் மனதை வாட்டும் தந்தை வழி உறவினர்களால் சிக்கல்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. வேலைக்கு போறவங்கள் ரகசியங்களை பகிர்ந்துக்காதீங்க. கன்னிப்பெண்கள் சுப காரியம் விசயமாக முடிவெடுக்கும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு பண்ணுங்க. மாணவர்கள் தெளிவாக படிங்க ஆசிரியர்கள் சொல்வதை தெளிவாக கேட்டு படிங்க நல்லா தேர்வு எழுதுங்க திறமையால் ஜெயிக்கலாம். சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை வழிபடுங்க பணவரவு வரும் சங்கடங்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 24

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் உங்களுக்கு வார மத்தியில சந்திராஷ்டம் இருப்பதால் இந்த கால கட்டங்களில் முடிவு எடுக்கும் போது கவனமாக இருங்க. கணவன் மனைவி பேச்சில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க. பெண்கள் யாரையும் குற்றம் சொல்லாதீங்க. குடும்ப ஒற்றுமைக்காக எதையும் விட்டுக்கொடுக்கலாம். வேலைக்கு போகும் பெண்கள் புதிய வேலைக்காக முயற்சி பண்ணுங்க தேடுங்க. கண்டிப்பாக கிடைக்கும். பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் சில சிக்கல்கள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. வீண் வம்பு வழக்குகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்க. சொந்த பந்தங்களினால் சில பிரச்சினைகள் வரலாம் அதை சமாளிங்க. சுப காரியம் தொடர்பான விசயங்களைப்பற்றி இப்போதைக்கு பேச வேண்டாம் எச்சரிக்கையாக இருங்க. எதையும் துணிச்சலாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்வீர்கள். பேச்சில் கவனமாக இருங்க எதையும் அவசரப்பட்டு பேசிவிட்டு பின்னாடி வருத்தப்படாதீங்க. இந்த வாரம் வேலை, பிசினஸ் தொடர்பாக யோசிக்க ஆரம்பிச்சிருப்பீங்க. பேசும் போது கவனமாக பேசுங்க யாரைப்பற்றியும் குற்றம் சொல்லாதீங்க. மாணவர்கள் திரும்ப திரும்ப படிங்க தேர்வுகளை நன்றாக எதிர்கொள்வீர்கள். அஷ்டமி நாளில் கால பைரவரையும் சிவபெருமானையும் வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : கரும்பச்சை

அதிர்ஷ்ட எண் : 23

அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப சுபிட்சமாக இருக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும் எந்த காரியத்திலும் எச்சரிக்கையோடு இருக்கணும். அதிர்ஷ்டங்கள் தேடி வரும் பயன்படுத்திக்கங்க. வார கடைசியில சந்திராஷ்டமம் வருவதால நீங்க ரொம்ப கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கணும். தேவையில்லாத குழப்பத்தில மாட்டிக்காதீங்க. பணம் விவகாரங்களில் எச்சரிக்கையாக இருங்க. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக இருங்க. ரொம்ப வேகமாக போகாதீங்க. விஐபிக்களின் சந்திப்புகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிரச்சினைகள் தீரும் வாரம் இது. நேர்மறை எண்ணங்களை அதிகமாக்குங்கள். வியாபாரிகளுக்கு ரொம்ப நல்ல வாரம். லாபம் கிடைக்கும். உங்களுக்கு வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கங்க. குடும்பத்தில் சில நேரங்களில் குழப்பங்கள் வரலாம் கணவன் மனைவி இடையே சிக்கல்கள் வராமல் தடுக்க ஆலோசனைக்கு பின்னால் முடிவெடுங்க. பெண்கள் கவனமாக இருங்க. முடிவு எடுக்கும் முன்பு கணவரின் ஆலோசனையை கேளுங்க. வேலைக்கு போறவங்கள் தெளிவாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. திருமணம் கல்யாணம் விசயமாக பேசும் முன்பு பொறுமையாக இருக்கணும். மாணவர்களுக்கு இது அற்புதமான வாரம் நல்லா படிங்க. சோம்பேறித்தனத்தை கை விடுங்க நல்லா தேர்வுகளை எழுதலாம். உயர்கல்வி விசயமாக ஆசிரியர்கள், பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்க. சஷ்டி விரதம் இருங்க சங்கடங்கள் தீரும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 19

அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

சிம்மம்

சிம்மம்

இந்த வாரம் உங்களுக்கு நிறைய நல்ல விசயங்கள் நடக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பமாயிருச்சு. வேலையே இல்லாம இருந்தா கூட ஏதாவது ஒருவகையில் வருமானம் உங்களுக்கு வரும். சுப பலன்கள் தேடி வரும். சகோதரர்கள் ஒற்றுமை அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். பெயர், புகழ் கவுரவம் அதிகரிக்கும். உங்க முன்னேற்றத்திற்கான வாரம். நீண்டகால பிரச்சினைகள் தீரும். வங்கிக்கடன் கிடைக்கும் நினைத்ததை சாதிக்கலாம். நிறைய பேரோட நட்பு கிடைக்கும். இந்த வாரம் குடும்பத்தில ஒரு விழா நடக்கும் ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழிலுக்கு முயற்சி பண்ணலாம். வேலை இல்லாதவங்க புது வேலைக்கு முயற்சி பண்ணாலும் கண்டிப்பாக நடக்கும். அதே போல உங்க ராசியை சம சப்தமாக செவ்வாய் பார்ப்பதால சுப காரிய பேச்சுவார்த்தைகள் நடக்கும். மாணவர்களுக்கு சிறப்பா இருக்கும் நல்லா படிங்க பரிட்சையை நல்லா எழுதி நல்ல மார்க் வாங்கலாம். கவனமா படிங்க. பெண்கள் குடும்பத்தோட வெளியூர் கிளம்பலாம் பாதுகாப்போட போயிட்டு வாங்க. வேலையில் புரமோசன் கிடைக்கும். குல தெய்வத்தை கும்பிடுங்க நிறைய நல்ல விசயங்க நடக்கும் பாராட்டுக்கள் அதிகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண் : 28

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கன்னி

கன்னி

உங்க ராசிக்கு நிறைய நல்ல விசயம் நடக்கும்னாலும் கவனமாக இருங்க. வீண் விவகாரங்களில் தலையிடாதீங்க. யாரையும் நம்பி எதையும் கொடுக்காதீங்க. உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. ஹெல்த் செக்அப் எடுத்துக்கங்க. வெளியூர் பயணங்கள் எதையும் வச்சுக்காதீங்க ரொம்ப பொறுமையாக இருங்க. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எந்த வேலையும் செய்யுங்க. வண்டி வாகனங்களில் போகும் போது அசால்டா இருக்காதீங்க. வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களை நம்பி எதையும் ஒப்படைக்காதீங்க. கவனமாக இருங்க. பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கவனமாக இருங்க. உயரதிகாரிகளாலும், உடன் வேலை செய்பவர்களாலும் திடீர் சிக்கல்கள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் லோக்கல் பாலிடிக்ஸ் மன உளைச்சலை ஏற்படுத்தும் வேறு வேலைக்கு முயற்சி பண்றவங்க நல்ல வேலையாக இருந்தா மட்டும் மாறுங்க பிரச்சினையாக இருந்தா வேண்டாம் விட்டுருங்க. திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். மாணவர்கள் தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம். படிப்புல தீவிரமாக கவனம் செலுத்துங்க. சங்கடங்கள் தீர சஷ்டி விரதம் இருங்க நினைத்தது நிறைவேறும் லட்சியங்களை அடையலாம்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

அதிர்ஷ்ட எண் : 23

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருக்கிறது. நினைத்தது நிறைவேறும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில அக்கறை காட்டுங்க. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் காரியத்தில் இருந்த தடைகள் நீங்கும். இதுநாள் வரை உங்களை திட்டி தீர்த்தவங்கள் பாராட்ட முன்வருவாங்க. உங்க நெகட்டிவ் எண்ணங்கள் மாறி பாசிட்டிவ் எண்ணங்கள் அதிகரிக்கும். இதுநாள் வரைக்கும் வருமானம் இல்லையே நஷ்டம் நிறைய வருதேன்னு கஷ்டப்பட்டவங்க இனி கவலைப்படாதீங்க. வியாபாரிகளுக்கு லாபம் வரும் வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவாங்க. இது மகிழ்சியான வாரம். நிறைய நல்லது நடக்கும் லாபம் வரும் சம்பாதிப்பீங்க. சுப காரியங்களில் பங்கேற்க வெளியூர் போவீங்க. வேலையில் சிலருக்கு மாற்றம். பெண்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்க திறமையை பாராட்டுவாங்க. கல்யாண விசயத்தில எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசாதீங்க. குரு பெயர்ச்சி வரட்டும் அப்புறம் பேசிக்கலாம். மாணவர்கள் கவனமாகவும் அக்கறையாகவும் படிங்க. நல்லா தேர்வு எழுதலாம். உழைப்புக்கு உயர்வு தரும் வாரம். அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண் : 30

அதிர்ஷ்ட கிழமை : திங்கட்கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

இந்த வாரம் உங்களுக்கு கிரக சூழ்நிலைகள் சுமாராகத்தான் இருக்கிறது உடன் வேலை செய்பவர்களை மதித்து நடக்கணும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கங்க. அவங்க படிப்பு விசயத்தில கவனமாக இருங்க. எதற்காகவும் அவசரப்படாதீங்க பொறுமையாக இருங்க. வாய்ப்புகள் வரும் போது பயன்படுத்திக்கங்க. புதிய முயற்சிகள் வேண்டாம். வீண் பழி வந்துடும் கவனமாக இருங்க. சிலருக்கு புகழ் அதிகரிக்கும் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. வேலைக்கு போறவங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம். சுப காரிய பேச்சுவார்த்தைகள் எதுவும் வேண்டாம். மாணவர்கள் விளையாட்டு புத்தியை விட்டு விட்டு படிப்பில கவனமாக இருங்க. உயர்கல்விக்கு தயாராக இருக்கிற மாணவர்கள் நல்ல சப்ஜெக்டை எடுத்து படிங்க. சகோதர சகோதரிகள் மூலம் பண வருமானம் வரும். பாதிப்புகள் குறைய முருகப்பெருமானை வணங்குங்கள். கந்த சஷ்டி கவஷம் படிங்க நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண் : 27

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

தனுசு

தனுசு

உங்களுக்கு இந்த வாரம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றாலும் வேலையில் கவனமாக இருங்க. பாசிட்டிவ் ஆக நினைங்க. நெகட்டிவ் எண்ணங்களை விடுங்க. பிரச்சினைகள் தீர பிள்ளையாரை நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் வரலாம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து போங்க பிரச்சினைகள் தீரும். உங்க தொழில் வியாபாரத்தில் கவனமாக இருங்க. தொழில் நஷ்டம் வர வாய்ப்பு இருக்கு பெரிய அளவில் முதலீடு எதுவும் பண்ணாதீங்க. ஒருதடவைக்கு இருதடவை யோசித்து முடிவு பண்ணுங்க. புதிய வேலை மாறலாமா என்று யோசிப்பீங்க. நேரம் கனிந்து வருகிறது திறமையை வெளிப்படுத்துங்க. இருக்கிற வேலையை தக்கவைத்துக்கங்க. வியாபாரத்தில் லாபம் வரும் தொழில் முன்னேற்றம் நடக்கும். தூரத்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வரும். இந்த வாரம் பொறுமையும் நிதானமும் தேவை. சிலருக்கு பதவி பறிபோகலாம் எச்சரிக்கையாக இருங்க. சிலரது குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். வேலைக்கு போகும் பெண்களுக்கு சிக்கல் வரும் அதற்காக எந்த சூழ்நிலையிலும் வேலையை விட்டு நிற்காதீங்க. மாணவர்கள் தெளிவா புரிந்து படிங்க தேர்வுகளைப் பார்த்து பயப்படாதீங்க.

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 21

அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை கிழமை

மகரம்

மகரம்

இந்த வாரம் சுப விரைய செலவுகள் வரும். உங்களுக்கு சின்னச் சின்ன குழப்பங்கள் வரலாம். துணிச்சல் தன்னம்பிக்கையால் எதையும் தகர்த்துடுவீங்க. உங்க மனுசும் புத்தியும் சொல்றதை கேட்டு நடப்பீங்க. புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்க. நீங்க கேட்ட இடத்தில இருந்து உதவிகள் தேடி வரும். அந்த உதவிகளை ஏற்றுக்கொள்ளுங்கள். வெளியூரில் வசிப்பவர்கள் சிலர் சொந்த ஊருக்கு திரும்புவீர்கள். சிலருக்கு சிக்கல் வரலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். உங்க முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் சம்பளம் அதிகம் வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் நினைத்தது நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். இந்த வாரம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும். வியாபாரிகளுக்கு நல்ல வாரம் லாபம் வரும். வரவு அதிகமாக இருக்கும். கடன் கிடைக்கும். தொழிலில் மேன்மை அதிகரிக்கும். இந்த வாரம் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வணங்குங்கள். வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு விளக்கு போடுங்க. நிறைய மாற்றங்கள் வரும். விரைய செலவுகள் கட்டுப்படும்.

அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்

அதிர்ஷ்ட எண் : 17

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கும்பம்

கும்பம்

இந்த வாரம் உங்களுக்கு குபேர யோகம் வருகிறது. வரவுக்கு ஏற்ற செலவு நடக்கும். தாய்மாமன் உறவுகளால் சிக்கல்கள் வரலாம் கவனம் தேவை. பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. சிலருக்கு திடீர் வேலை மாற்றம் இடமாற்றம் வரலாம் அதை ஏற்றுக்கங்க நல்லதுதான். கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. கூட வேலை செய்றவங்களை கவனமாக பார்த்துக்கங்க. ஏழரை சனியோட தாக்கம் அதிகமாக இருக்கும் சனிபகவானை வணங்குங்கள். ஏழைகள், முதியவர்களுக்கு உதவி பண்ணுங்க நிறைய நல்லது நடக்கும். சுப விரைய செலவுகள் வரலாம் வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். புதிய வேலைகள் தேடி வரும். திருமணம் சுப காரிய பேச்சுவார்த்தைகள் கூடி வரும் ஒருதடவைக்கு இருதடவை யோசிங்க. மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்க. நல்லா படிங்க. உயர்கல்வி விசயமாக ஆசிரியர்களை ஆலோசனை பண்ணுங்க. வரவும் செலவும் சரியா இருக்கேன்னு கவலைப்படாதீங்க. விநாயகரை வணங்குங்க நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

மீனம்

மீனம்

இந்த வாரம் நீங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருங்க. கோபப்படாதீங்க தொட்டதுக்கு எல்லாம் கோபப்பட்டு உணர்ச்சி வசப்பட்டு சிக்கல்ல மாட்டிக்காதீங்க. வேலையில் சில பிரச்சினைகள் வரலாம் கவனமாக கையாளுங்க. குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போங்க. சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் கணவன் மனைவி கவனமாக இருங்க. பேச்சில் நிதானமாக இருங்க. மாணவர்கள் தெளிவா படிங்க. விளையாட்டை விடுங்க. தேர்வு நெருங்குது கவனமாக படிங்க. நிதி நிலைமை நன்றாக இருக்கிறது. பொருளாதாரம் சுபிட்சமாக இருக்கிறது. திடீர் உத்யோக உயர்வு கிடைக்கும். சிலருக்கு திடீர் வருமானம் வரும். பெண்களுக்கு புதிய ஆடை ஆபரணம் வாங்குவீங்க. வேலையில பிரச்சினைகள் வரலாம் அக்கறையாக இருங்க. தொழில் வியாபாரிகள் லாபம் கிடைக்கும். திடீர் வருமான உயர்வு வரும். முதலீடுகள் செய்யலாம் லாபம் இரட்டிப்பாகும். வியாழக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு போங்க நல்ல சிந்தனைகள் வரும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண் : 12

அதிர்ஷ்ட நாள் : வியாழன்கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, June 7, 2020, 8:00 [IST]
Desktop Bottom Promotion