For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குருவும், சனியும் இந்த ராசிக்காரங்களுக்கு பணத்தை கொட்டி கொடுக்கப் போறாங்க...

|

வரப்போகும் ஏழு நாட்களும் எப்படி இருக்கும் என்று யோசிக்கும் உங்களுக்காகவே இந்த வார ராசி பலன்கள். சில ராசிக்காரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரப்போகிறது. சில ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்திருக்கும். சிலருக்கு இந்த ராசிகள் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கும். இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் இருக்கும் என்பதை இந்த வார ராசி பலன்களில் கூறியுள்ளோம் படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரங்களுக்கு இந்த வாரம் நவகிரகங்களும் சாதகமாகவே இருக்கிறது. ரொம்ப நல்ல வாரம் உற்சாகமான மனநிலையில் இருப்பீங்க. நல்ல வாய்ப்புகள் வந்து உங்க வீட்டு வாசல் கதவைத் தட்டும். இந்த வாரம் வேலை செய்யும் இடத்தில் பாசிட்டிவ் ரிசல்ட் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை பற்றிய செய்திகள் வந்து சேரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என்று வெற்றியை கொண்டாடுவீர்கள். நீங்கள் பிசினஸ் மேனாக இருந்தால் உங்களுக்கு லாபம் தேடி வரும். மகிழ்ச்சி மட்டுமே உங்களுக்கு நிரந்தரமாக தேடி வரும். பார்ட்னர்ஷிப் மூலம் புதிய பிசினஸ் தொடங்க ஏற்ற நேரமாக உள்ளது. உங்க பெர்சனல் வாழ்க்கையில் சந்தோஷ அதிர்வலைகள் வீசும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பண விசயமாக இந்த வாரம் எந்த பிரச்சினையும் வராது. பெரிய அளவில் நீங்கள் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரலாம். காதல் விசயங்கள் பேச இது ரொம்ப நல்ல வாரம். உங்க லைப் பார்ட்னருடன் இந்த வாரம் அதிக நேரம் செலவு செய்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : மெரூன்

அதிர்ஷ்ட எண்: 2

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறுகிழமை

ரிஷபம்

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். வேலை செய்யும் இடத்தில் சாதகமாகவே இருக்கும். வேலை செய்யும் இடத்தில் ஹார்ட் ஒர்க் பண்ணவேண்டியிருக்கும். சீனியர்ஸ் உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. உங்க வேலையை பார்த்து உற்சாகப்படுத்துவாங்க. உங்க வேலையில் பெஸ்டானதை கொடுங்க. பிசினஸ் செய்பவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்கும் தருணம் இது. உங்க பெரிசனல் லைப்ல எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம் அப்புறம் அவஸ்தை படுவீங்க. உங்க காதல் வாழ்க்கையில் நீங்க கவனமாக இருங்க. எப்போது பார்த்தாலும் வேலை வேலை என்று அலையவேண்டாம் குடும்பம், பெர்சனல் லைப் என்று நேரத்தை செலவு செய்யுங்கள். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ரொம்ப பலமாக உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 34

அதிர்ஷ்ட நாள் : புதன்கிழமை

மிதுனம்

மிதுனம்

இந்த வாரம் நீங்க நிறைய டாஸ்க்குகளை உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் நிறைய வேலை இருக்கிறதே என்று அப்செட் ஆக வேண்டாம். உங்க பார்ட்னர் இடையேயான உறவுகள் உற்சாகத்தை தரும். தவறுகளில் இருந்து பாடம் படித்துக்கொள்ளுங்கள். உங்க அன்பானவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். கண்ணியமாக சாமர்த்தியமாக எதையும் சமாளியுங்கள். சில பிரச்சினைகள் வரலாம் அதை எளிதில் சமாளித்து வெற்றியடையுங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை அதிகமாகும். உங்க வேலைக்கு ஏற்ற நல்ல பெயர் கிடைக்கும். திருமணமானவாராக இருந்தால் உங்க வாழ்க்கைத்துணையுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். எந்தவேலையையும் நேர்மையாகவும் சீரியஸாகவும் செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகமாகும். உங்க குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும்தான் செலவு செய்யவேண்டியிருக்கும். உங்க உடல் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும் அலட்சியம் காட்ட வேண்டாம் ஆபத்தாகிவிடும்.

அதிர்ஷ்ட நிறம் : ஸ்கை ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 36

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறுகிழமை

கடகம்

கடகம்

இந்த வாரம் உங்களுக்கு ரொம்ப நல்ல வாரம். எதையும் ரொம்ப கவனமாக கையாளுவீங்க. அலுவலகத்தில் பொறுப்புகள் தேடி வரும். ரொம்ப பிஸியாக இருப்பீர்கள். மன அழுத்தம் வரலாம் கவனமாக இருங்க. பிசினஸ் செய்பவர்கள் முதலீடு செய்யும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். உங்க எதிராளிகளிடம் கவனமாக இருங்க. பணத்தை கவனமாக கையாளுங்கள் செலவுகள் அதிகம் வரலாம் கவனம் தேவை. பெர்சனல் வாழ்க்கையில் நிதானமாக இருங்க அப்பத்தான் அமைதியாக இருக்கும். உங்க குடும்ப வாழ்க்கையில் வாழ்க்கை துணையுடனான பேச்சுவார்த்தையில் கவனமாக இருங்க. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க அப்போதுதான் மன அழுத்தத்தை தவிர்க்க முடியும்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அதிர்ஷ்ட எண்: 12

அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே, உங்க உடல் ஆரோக்கியத்தில் நீங்க அதிக அக்கறை காட்டுங்க. அலட்சியப்படுத்தினால் அது ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். டாக்டரோட அட்வைஸை கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க அப்புறம்தான் சீக்கிரம் உங்க ஹெல்த் இம்ரூவ் ஆகும். புதிய வேலை கிடைக்கும். பணம் உங்களுக்கு நிறைய வரும். பழைய சொத்துக்களை விற்று வருமானம் பார்ப்பீர்கள். அது உங்களின் நிதி நிலைமையை அது உற்சாகப்படுத்தும். பெர்சனல் லைப்ல ரொம்ப சந்தோஷமாக இருப்பீங்க. குடும்ப உறவுகளுடன் நீங்க ரொம்ப உற்சாகமாக இருப்பீங்க. அன்பும் காதலும் அதிகமாகும் குடும்ப அட்மாஸ்பியர் அற்புதமாக இருப்பீங்க. நண்பர்கள் உறவினர்களுடன் ஜாலியாக இருப்பீங்க. உங்களுடைய பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரியுங்கள் நெகட்டிவ் எனர்ஜியாக பேசுபவர்களிடம் இருந்து விலகி இருங்கள். யாருடனும் வாக்குவாதம் செய்யவேண்டாம். பயணங்கள் நன்மையை தரும்.

அதிர்ஷ்ட நிறம் : பிங்க்

அதிர்ஷ்ட எண்: 8

அதிர்ஷ்ட நாள் : திங்கட்கிழமை

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்களுக்கு பணம் விசயமாக மன அழுத்தம் ஏற்படலாம் இருந்தாலும் நல்ல ரிசல்ட் கிடைக்கும். உங்க பொருளாதார சூழ்நிலை நன்றாக இருக்கும். உங்க வருமானம் அதிகமாகும். வேலை செய்பவர்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும் புதிய புரமோசன் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். பெரிய கம்பெனிகளில் இருந்து அப்பாயின்ட்மெண்ட் ஆர்டர் தேடி வரும். உங்க வேலைகளை எல்லாம் நீங்க ஈஸியாக செய்து முடிப்பீங்க. பிசினஸ் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் உள்ள பிரச்சினைகளை எளிதில் சீர் செய்வீர்கள். வேடிக்கை விளையாட்டாக இந்த வாரம் கழிப்பீர்கள். மாணவர்களாக இருந்தால் படிப்பில் நல்லா கவனம் செலுத்துங்க. வார மத்தியில சில பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உங்க உடல் ஆரோக்கியத்தில கவனம் செலுத்துங்க.

அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன்

அதிர்ஷ்ட எண்: 21

அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

துலாம்

துலாம்

இந்த வாரம் உங்க குடும்ப உறுப்பினர்களுடன் நீங்க நேரம் செலவு பண்ணுவீங்க. இந்த வாரம் தூர பயணங்கள் செல்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அப்பாவிற்கும் உங்களுக்கும் இடையிலான உறவுகள் சற்றே சிக்கலாக இருக்கும். உங்க கல்யாண வாழ்க்கையில உங்க துணையுடன் நீங்க சந்தோஷமாக இருப்பீங்க. வார மத்தியில நீங்க சில சவால்களை சந்திப்பீர்கள். பண விசயத்தில சில நஷ்டங்களை சந்திப்பீர்கள் இதனால் நீங்க மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள். பிசினஸ் செய்பவர்கள் அதிக அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். கவனமாக இல்லாவிட்டால் ஏமாற்றிவிடுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் ரொம்ப கஷ்டமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரி உங்களுக்கு சில டாஸ்க்குகளை கொடுப்பார். சில பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். ஆனாலும் அந்த பிரச்சினைகளை ஒத்திவைப்பீர்கள். இந்த வாரம் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்காதீங்க அடுத்த வாரம் வரைக்கும் ஒத்திப்போடுங்க.

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 9

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணம் வருமானம் அதிகமாக இருக்கும் இருந்தாலும் பெரிய அளவில் பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். செலவுகள் தாறுமாறாக எகிறும் கவனமாக இருங்கள். பணத்தேவையை சமாளிக்க லோன் எடுக்க வேண்டியிருக்கும். உங்க குடும்ப உறுப்பினர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் சந்தோஷமாக இருப்பீங்க. வேலையில் ரொம்ப பொறுப்பாக இருப்பீங்க. உங்க வாழ்க்கை துணை உங்க மீது ரொம்ப கேர் எடுத்துக்குவாங்க. நீங்க ரொம்ப சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பீங்க. உங்க வேலை விசயமாக திட்டமிடுங்கள் அதுதான் உங்களுக்கு ரொம்ப நல்லது. உங்க உடல் ஆரோக்கியம் சுமாராகவே இருக்கும். மன அழுத்தம் உங்களை பாதிக்கும் உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம் கவனமாக இருங்க.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 30

அதிர்ஷ்ட நாள் : சனிக் கிழமை

தனுசு

தனுசு

இந்த வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு டென்சனை தரக்கூடிய வாரம். உங்க பார்ட்டனருடன் உங்களுக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உங்க உறவுகளோட பீலிங்ஸ்களை புரிஞ்சுக்கங்க. சரியா ஹேண்டில் செய்யாவிட்டால் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படலாம் கவனம். உங்க முயற்சிகளுக்கு இந்த வாரம் பாசிட்டிவ் ஆனா பதில்கள் கிடைக்காது நல்ல பதிலுக்காக காத்திருங்கள். உங்க வாழ்க்கைத் துணையுடன் உறவு பிணைப்பு அதிகமாகும். மாணவர்களுக்கு குருவின் ஆசி கிடைக்கும். அதுவே உற்சாகத்தை கொடுக்கும். அலுவலகத்தில உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் உங்களுக்கு ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும். பிசினஸ் செய்பவர்கள் முதலீடு செய்யாதீங்க அது ரொம்ப ரிஸ்க். உங்க டயட் பிட்னஸ்ல கவனம் செலுத்துங்க.

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 10

அதிர்ஷ்ட நாள் : புதன் கிழமை

மகரம்

மகரம்

நீங்க உழைப்பாளிகள், உங்க உழைப்பை மிஞ்ச யாராலும் முடியாது. வெற்றிக்காக நீங்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், இந்த வாரம் உங்கள் வணிகம் சிறப்பாக இருக்கும். லாபம் கிடைக்கும் வார ஆரம்பத்தில் நீங்கள் நிறைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், ஆனால் படிப்படியாக உங்கள் கஷ்டங்கள் குறையும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் ஒரு சர்ச்சை எழலாம். உங்க பேச்சில் கவனமாக இருங்கள். வாரத்தின் மத்தியில் உங்கள் மனைவியின் உடல்நிலை மோசமடையக்கூடும், எனவே, நீங்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் ஏற்படும். சில பெரிய செலவுகள் இருக்கும், அதே நேரம் வருமானம் அதிகமாகும். உங்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டுங்கள் நல்லதாகவே நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : ப்ளூ

அதிர்ஷ்ட எண்: 20

அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

கும்பம்

கும்பம்

காதல் மலரும் வாரம் இது. உங்க அன்பானவருக்கு நீங்க மனதிற்கு பிடித்தமான பரிசுகளைக் கொடுப்பீர்கள். உங்க அன்பை அது பலப்படுத்தும். காதலை சொல்ல விரும்பினால் தயங்காமல் சொல்லுங்கள் வேலை செய்யும் இடத்தில் சாதகமாக இருக்கும். இந்த வாரம் உங்கள் பணிகள் எதுவும் முழுமையடையாது. நீங்கள் கிட்டத்தட்ட அனைத்து பணிகளையும் கையாள முடியும். உங்கள் வணிகத்தைப் பற்றி உங்கள் மனதில் இருந்த சங்கடத்தை உங்கள் தந்தையின் உதவியுடன் சமாளிக்க முடியும், இது இந்த நேரத்தில் உங்களுக்கு நிறைய லாபத்தைத் தரும். இந்த காலகட்டத்தில், வேலை செய்யும் மக்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். மேலும், சக ஊழியர்களுடனான உங்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு ரொம்ப நல்ல வாரம் சந்தோஷமாக இருப்பீர்கள். எந்தவொரு நல்ல செய்தியையும் இந்த வாரம் நீங்க கேட்கலாம். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். நிதி வளர்ச்சிக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருப்பீர்கள். உங்களை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்க, உங்கள் உணவு வழக்கத்தை மாற்ற வேண்டும். காரமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 25

அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்க்கிழமை

மீனம்

மீனம்

உங்களுக்கு அதிர்ஷ்டகரமான வாரம். பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையை நிரூபிப்பீர்கள். பிசினஸ் செய்பவர்கள் செய்யும் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். உங்க பெர்சனல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். அன்பானவர்கள், வயது மூத்தவர்களிடம் அன்பு அதிகமாகும். மதிப்பு மரியாதை கூடும். வீட்டில் பெற்றவர்களின் ஆசி கிடைக்கும். நீங்க செய்யும் வேலைக்கும் எடுக்கப்போகும் முடிவுக்கும் அவர்களின் ஆசி கிடைக்கும். அலுவலகத்தில் சீனியர்களுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். அதே நேரத்தில் அசால்டாக இருக்காதீங்க சளித்தொந்தரவுகள் எட்டிப்பார்க்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 3

அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Weekly Horoscope For 26th January 2020 To 1st February 2020

Check out the weekly horoscope for 26th january to 1st february for all zodiac signs.
Story first published: Sunday, January 26, 2020, 10:00 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more