Latest Updates
-
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்..
சனி, குரு, சுக்கிரன் வக்ர காலம்... இந்த 5 ராசிக்காரர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருங்க...
வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் கிரகங்கள் கூடியுள்ளன. மகரம் ராசியில் இரண்டு கிரகங்கள் குரு சனி வக்ரமும், ரிஷப ராசியில் சுக்கிரன் வக்கிர சஞ்சாரம் செய்வதால் யாருக்கு பணவரவு வரும், யாருக்கு செலவு அதிகரிக்
வைகாசி மாதத்தில் ரிஷப ராசியில் கிரகங்கள் கூடியுள்ளன. மகரம் ராசியில் இரண்டு கிரகங்கள் குரு சனி வக்ரமும், ரிஷப ராசியில் சுக்கிரன் வக்கிர சஞ்சாரம் செய்வதால் யாருக்கு பணவரவு வரும், யாருக்கு செலவு அதிகரிக்கும் என்றெல்லாம் யோசிக்கிறீர்களா? இந்த வார ராசிபலனை படிங்க உங்க கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களில் யாருக்கு சங்கடங்கள் தீர்ந்து சந்தோஷம் அதிகமாகும் என்று பார்க்கலாம். சிம்மம், கன்னி, துலாம் ராசிக்காரங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மேஷம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே, இந்த வாரம் சுப செலவுகள் வரும் கவனமாக பேசுங்க சொந்த பந்தத்திற்குள் பிரச்சினை வரலாம். கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில கவனமாக இருங்க. மூன்று கிரகங்கள் சனி, குரு, சுக்கிரன் வக்ரமாக இருப்பதால் கவனமாக இருங்க பெரியவர்கள் ஆலோசனை அவசியம். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்பட வேண்டாம். இல்லத்தரசிகளுக்கு சந்தோஷமான வாரம் வீட்ல மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குழந்தைகள் மேல கவனமும் அக்கறையும் வேணும். குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. வேலையில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உடன் வேலை செய்பவர்கள் கிட்ட கவனமாக இருங்க. மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல வாரம் படிப்பது நினைவிருக்கும் தேர்வுகளுக்காக தெளிவாக படிங்க.
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
அதிர்ஷ்ட எண் : 21
அதிர்ஷ்ட நாள் : ஞாயிறு கிழமை

ரிஷபம்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிரகங்கள் சஞ்சாரம் சாதகமாகவே இருக்கிறது. பணப்பிரச்சினை தீரும் மன நிம்மதியை கொடுக்கும். கிரகங்கள் வக்ரமாக இருப்பதால் முடிவெடுப்பதில் கவனமும் நிதானமும் தேவை. இந்த வாரம் விஐபிக்கள் சந்திப்பு நடக்கும். தொழிலில் மேன்மையும் லாபமும் வரும். சிலருக்கு வண்டி வாகன பிரச்சினை தீரும். கடன்பிரச்சினை வரலாம் வீண் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். நீங்க நீண்ட காலமாக நினைத்திருந்த பிரச்சினைகள் தீரும் நீண்ட நாட்களாக திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப காரிய பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். எந்த காரியத்திலும் அவசரம் தேவையில்லை. வியாபாரிகளுக்கு தொழிலை விரிவு படுத்துவீங்க. புதிய வாடிக்கையாளர்கள் வருவாங்க. நீண்ட நாளாக இருந்த கஷ்டங்கள் தீரும். பெருமாளுக்கு சர்க்கரை வைத்து வழிபடுங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 11
அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு வரவுக்கு மீறி செலவு வரும். கவலைப்படாதீங்க காலம் மாறுது வருமானம் வரும். இந்த வாரம் பொன்னான காலமாக இருக்கப்போகுது அதனால வாய்ப்பை பயன்படுத்திக்கங்க. சிலருக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்காது நேரடியாக பேசுங்க. தன்னம்பிக்கையை வளர்த்துக்கங்க. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க. தேவையில்லாத சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. அரசு துறை வேலை செய்பவர்கள் வேலையில கவனமாக இருங்க. இல்லத்தரசிகள் நிதானமாக கவனமாக வேலையை தொடருங்க. சொந்தக்காரங்க கிட்ட கவனமாக பேசுங்க. புதிய வேலை கிடைக்கலாம். குல தெய்வ கோவிலுக்கு போங்க. வியாபாரிகளுக்கு கவனமும் எச்சரிக்கையும் வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்ச்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நாள் : வியாழன்கிழமை

கடகம்
கடக ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு தடைகள் நீங்கும். வேகத்தோடு யோசிப்பதை விட விவேகத்தோடு யோசிங்க. பணத்தேவைகள் பூர்த்தி அடையும். வாழ்க்கத்தரம் உயரும். வண்டி வாகனத்தில போகும் போது கவனமாக இருங்க வேகமாக இருக்காதீங்க. உங்களுக்கு ஏற்பட்டிருந்த தடைகள் தாமதங்கள் நீங்கும். கடவுள் அருளால் பிரச்சினைகள் தீரும். உங்க பணத்தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரிகளுக்கு சரக்குகள் விற்றுத்தீரும். முதலீடு அதிகமாகும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்க. சின்ன பிரச்சினையாக இருந்தாலும் உடனே கவனிங்க. பேச்சுல கவனம். முடிஞ்சவரைக்கும் மவுன விரதம் இருப்பது நல்லது. சகோதரர்கள் இடையே ஒற்றுமை அதிகரிக்கும். திடீர் திருமணங்கள் நடக்கும். சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுங்க.
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
அதிர்ஷ்ட எண் : 20
அதிர்ஷ்ட நாள் : திங்கட் கிழமை

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கு நிதானமாக இருங்க. வண்டி வாகனத்தில போகும் போது எச்சரிக்கையாக இருக்கணும். மே 17 காலை 7.14 மணி முதல் மே 19 இரவு 7.53 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் எந்த காரணத்திற்கும் நீங்க வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். இந்த வாரம் உங்க சகோதரர்களால் உதவி கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவும் கிடைக்கும். உங்க வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. சொந்தத்துக்குள்ள தோத்துப்போக நினைக்கிறவனை யாராலும் ஜெயிக்க முடியாதுன்னு சொல்வாங்க அது மாதிரிதான் நீங்களும். விட்டுக்கொடுத்து போங்க எந்த பிரச்சினையும் வராது. உங்க பலம் பலவீனம் பார்த்து எந்த விசயத்தையும் பண்ணுங்க. உங்களின் சிக்கல்களை நீங்களே தீர்ப்பீங்க. வேலை கிடைக்குமா? வருமானம் வருமான்னு யோசிப்பீங்க கவலைப்படாதீங்க இருக்கிற வேலை போனாலும் நல்ல வேலைகிடைக்கும். நண்பர்கள் கிட்ட எச்சரிக்கையாக பழகுங்க. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புரமோசன் கிடைக்கும். மாணவர்களுக்கு திறமை அதிகமாகும் நல்லா படிப்பீங்க.
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 27
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

கன்னி
கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் மே 19ஆம் தேதி இரவு 7.53 மணி முதல் மே 22ஆம் தேதி காலை 7.37 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் ரொம்ப கவனமாக இருங்க. வீட்டில் யார் கூடவும் கோபமாக பேசவேண்டாம். நிதானமாக இருங்க. உங்களுக்கு சில பிரச்சினைகள் வரலாம் முன்னெச்சரிக்கையாக இருங்க வீண் பழியை சுமக்க வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில அக்கறையாக இருங்க. வண்டி வாகனத்தில எதற்காகவும் வெளியே போகாதீங்க. வருமானத்தில் சுணக்கம் இருந்தாலும் சிக்கனமாக இருங்க. அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்குங்க. வேலைக்கு போறவங்களுக்கு சிக்கல்கள் தீரும் சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு வரும் பயன்படுத்திக்கங்க. இவ்ளோ நாள் வீட்டிலேயே இருந்தீங்க. சிலருக்கு புதிய வேலைகள் கிடைககும். மாணவர்கள் படிப்பில அக்கறை செலுத்துங்க. தேர்வுகளை பயமில்லாமல் எதிர்கொள்ளலாம்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
அதிர்ஷ்ட எண் : 23
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை

துலாம்
துலா ராசி நேயர்களே, இந்த வாரம் மே 22ஆம் தேதி காலை 7.37 மணி முதல் மே 24 மாலை 5.34 மணிவரைக்கும் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமாக எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வீண் பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தில அக்கறை எடுத்துக்கங்க. வண்டி வாகனத்தில வெளியே போகாதீங்க. சுப செலவுகள் வரலாம். குடும்ப உறுப்பினர்கள் நல்லா ஹெல்ப் பண்ணுவாங்க. தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். நீங்க எடுக்கப்போற முக்கிய முடிவுகளை கவனமாக எடுங்க. வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக கிடைப்பாங்க. இல்லத்தரசிகள் பேச்சில் நிதானமாக இருங்க. சுப செய்திகள் தேடி வரும். வேலைக்கு போறவங்களுக்கு இந்த வாரம் நல்ல செய்திகள் தேடி வரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு இது நல்ல வாரம். உடல் ஆரோக்கியம் சரியாக முருகனை வணங்கி கந்த சஷ்டி கவசம் பாராயணம் பண்ணுங்க.
அதிர்ஷ்ட நிறம் : குங்குமப்பூ
அதிர்ஷ்ட எண் : 15
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக் கிழமை

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இந்த வாரம் பொறுமையாக எந்த விசயத்தையும் கையாள வேண்டும். தொழில் வியாபாரத்தில் லாபம் வரும். கூட்டுத்தொழில் லாபத்தை கொடுக்கும். எதையும் தைரியமாக முடிவெடுங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. கணவன் மனைவி இடையே பிரச்சினைகள் தீரும். சுப நிகழ்சிகள் தடையில்லாமல் நடக்கும். சுபிட்சமான வாரம். பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீங்க. கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். உங்க தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்க குல தெய்வ கோவிலுக்கு போய் வழிபாடு பண்ணிட்டு வாங்க. மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு வருது பயன்படுத்திக்கங்க. உயர்கல்வி யோகம் வரும்.
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
அதிர்ஷ்ட எண் : 36
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை

தனுசு
தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் எதற்காகவும் பயப்படாதீங்க. குடும்ப ஸ்தானத்தில கிரகங்கள் வக்ரமாக இருக்கு. வருமான தடைகள் நீங்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். திருமணத்திற்காக வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். ராஜயோகம் கூட வரப்போகுது பயன்படுத்திக்கங்க. நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கங்க. மிகப்பெரிய நன்மைகள் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருங்க. வியாபாரிகளுக்கு லாபம் தேடி வரும். அரசு விசயமான டாக்குமெண்ட்களில் கையெழுத்து போடும் போது எச்சரிக்கையாக இருங்க. வாய்ப்புகளை பயன்படுத்திக்கங்க. தேவையில்லா விசயங்களில் மூக்கை நுழைக்காதீங்க. கணவன் மனைவி பேச்சில் நிதானமாக இருங்க. ஏழரை சனி காலம் என்பதால் அவமரியாதை வரலாம். வேலைக்கு போறவங்க எப்பாடு பட்டாவது வேலையை தக்க வைச்சிக்கங்க. மாணவர்கள் கவனமாகவும் அக்கறையாகவும் படிங்க.
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 12
அதிர்ஷ்ட நாள் : வியாழன் கிழமை

மகரம்
மகர ராசி நேயர்களே, இந்த வாரம் நீங்க புதிய முயற்சிகள் செய்வீங்க நல்ல லாபம் வரும். சனிபகவான் உங்களுக்கு நல்லதை செய்வார். தைரியம் தன்னம்பிக்கை அதிகமாகும். ஜென்மசனியின் தாக்கம் குறையும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. எதையும் அலட்சியப்படுத்த வேண்டாம். வருமானம் அதிகமாக வரும் பல வழிகளில் இருந்தும் பணம் வரும். வீடு கட்ட தொடங்குவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். வீட்டில் கணவன் மனைவி இடையே அவ்வப்போது பிரிச்டிநக ள விட்டுக்கொடுத்து போங்க. வங்கிக்கடன் எளிதாக கிடைக்கும் முயற்சி பண்ணுங்க. எதிரிகளை வெல்வீர்கள். பல வகையில் இருந்தும் பணம் வரும். நீண்ட நாள் கழித்து வேலைக்கு போறீங்க எச்சரிக்கையாக இருங்க. வீடு கட்ட வாய்ப்பு வருது, திடீர் வாய்ப்புகள் வரும். மங்கலகரமான காரியங்கள் நடைபெறும். தொழில் ஸ்லோவாக இருந்தாலும் ஸ்டெடியாக போகும். சரக்குகள கவனமாக எதிர்கொள்ளுங்கள். மாணவர்கள் தெளிவாக புரிந்து படிங்க.
அதிர்ஷ்ட நிறம் : பர்ப்பிள்
அதிர்ஷ்ட எண் : 34
அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை

கும்பம்
கும்ப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு பணம் அபரிமிதமாக வரும். பிரச்சினைகள் வந்து நீங்கும். நீங்களே எதிர்பாராத நல்ல விசயங்கள் நடக்கும், புதிய தொழில் அமையும். வேலை செய்பவர்களுக்கு கடன் பிரச்சின தீரும். சொல்வாக்கும் செல்வாக்கும் உயரும். பெண்களுக்கு இந்த வாரம் ரொம்ப அற்புதமாக இருக்கும், புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அந்த நண்பர்கள் மூலம் நல்லது நடக்கலாம். மாணவர்கள் உயர்கல்வி யோகம் வரும். எதிர்பாராத நல்ல விசயம் நடக்கும். சம்பள உயர்வுடன் புதிய வேலை கிடைக்கும். வரும் வாய்ப்புகளை கவனமாக அலசிப்பார்த்து மாற்றிக்கொள்ளுங்கள். இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான வாரம். வேலைக்கு செல்பவர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். நீண்ட நாள் கழித்து புதிய லாபத்தை பார்ப்பீர்கள். முன்னோர்கள், குல தெய்வத்தை முறையாக வழிபடுங்க.
அதிர்ஷ்ட நிறம் : க்ரீம்
அதிர்ஷ்ட எண் : 22
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய் கிழமை

மீனம்
மீன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்க தன்னம்பிக்கை தைரியம் கூடும். சுப செலவுகள் வரலாம். சிக்கனமாக செலவு பண்ணுங்க. அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடுதலாக வரும். சுய தொழில் செய்பவர்கள் வங்கிக்கடனுக்கு முயற்சி செய்யலாம். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. பொறுமையாக நிதானமாக இருங்க. புதிதாக திருமணமானவர்களுக்கு புத்திரபாக்கியம் கைகூடி வரும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுங்க. பிரச்சினைகளை நீங்களே தீர்க்க பாருங்க இவ்லாவிட்டால் நிறைய நல்லது நடக்கும். வியாபாரிகளுக்கு வார இறுதியில் முன்னெச்சரிக்கை தேவை. தானம் பண்ணுங்க பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு நிம்மதி ஏற்படும்
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
அதிர்ஷ்ட எண் : 19
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை



Click it and Unblock the Notifications











