Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
ஆகஸ்ட் மாதத்தில் இந்த 4 ராசிகளின் செல்வம் பெருகப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
ஆகஸ்ட் மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனால் சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பண மழை பொழியவுள்ளது. அதோடு பல நற்பலன்களும் கிடைக்கப் போகிறது.
ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு மாதமும் சில கிரகங்கள் தங்களின் ராசியை தவறாமல் மாற்றும். இந்த கிரக மாற்றங்களால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒருவித தாக்கம் இருக்கும். அது நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம்.

அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் சில முக்கிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதனால் சில ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் பண மழை பொழியவுள்ளது. அதோடு பல நற்பலன்களும் கிடைக்கப் போகிறது. இப்போது ஆகஸ்ட் மாதத்தில் எந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் புரளப் போகிறது என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆனால் அதீத ஆர்வத்தைத் தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் உங்களின் வேலையில் வெற்றி கிடைக்கும். வருமான உயர்விற்கு வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் இன்டர்வியூ சென்றால் அதிலும் வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இம்மாதத்தில் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் வாழ்க்கை திருப்திகரமாக இருக்கும்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் முழு நம்பிக்கையுடன் இருப்பார்கள். இருப்பினும் பொறுமையாக இருக்க முயற்சிக்க வேண்டும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபகரமான மாதமாக இருக்கும். வேலையை மாற்றுவதற்கான வாய்ப்புக்களும் அமையும். இம்மாதத்தில் குடும்பத்தினர் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு, இம்மாதத்தில் அதற்கான யோகங்கள் உண்டு.

கன்னி
கன்னி ராசிக்காரர்களும் நம்பிக்கை நிறைந்து இருப்பார்கள். இருந்தாலும், ஒருவித பயத்தால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இம்மாதத்தின் தொடக்கத்தில் குடும்பத்தினருடன் புனித ஸ்தலங்களுக்கு செல்ல திட்டம் தீட்டுவீர்கள். இம்மாதத்தில் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் இனிமையாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சொத்துகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் அவர்களின் பொறுமையின்மை மற்றும் கடுமையான பேச்சுக்களால் பிரச்சனைகளை சந்திப்பார்கள். இருப்பினும், இம்மாதத்தில் நம்பிக்கை அதிகம் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் கல்விக்காக குடும்பத்தை விட்டு விலக வேண்டிய சூழல் உருவாகலாம். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் அமையும். உயர் அதிகாரிகளிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். இம்மாதத்தில் வாகனம் வாங்குவதற்கான யோகம் உண்டு.



Click it and Unblock the Notifications