Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
கன்னத்தில் குழி விழுந்தா மட்டுமில்ல குழி இருக்கிற பொண்ண கல்யாணம் பண்றதும் அதிஷ்டமாம் ஏன் தெரியுமா?
பொதுவாக கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டம் என்பார்கள், ஜோதிட சாஸ்த்திரத்தின் படி பார்க்கும்போது அது உண்மைதான். கன்னத்தில் விழும் பெண்ணை திருமணம் செய்து கொள்வது உங்கள் திருமண வாழ்வை அழகாக்கும்.
கன்னத்தில் குழி விழுவது என்பது அனைவரின் கவனத்தையும் நமது பக்கம் ஈர்க்கும் ஒரு அம்சமாகும். கன்னத்தில் குழி விழுவது ஒருவரின் முகத்தை அழகாகக் காட்டும். இது அவர்களின் முகத்திற்கு ஒரு தனிக்கவர்ச்சியை கொடுக்கும். இது அனைவருக்கும் கிடைத்துவிடாது. கன்னக்குழி என்பது சருமத்தின் முக்கிய உள்தள்ளல்கள் ஆகும், இது கீழுள்ள சதை காரணமாக ஏற்படுகிறது.

தாடையின் கீழுள்ள எலும்பு அமைப்பு மையத்தில் ஒரு அழுத்தத்தம் உருவாகும்போது அவை கன்னத்தில் ஏற்படுகின்றன. பொதுவாக கன்னத்தில் குழி விழுவது அதிர்ஷ்டம் என்பார்கள், ஜோதிட சாஸ்த்திரத்தின் படி பார்க்கும்போது அது உண்மைதான். கன்னத்தில் விழும் பெண்ணை திருமணம் செய்து கொள்வது உங்கள் திருமண வாழ்வை அழகாக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் கன்னத்தில் குழி விழும் பெண்ணை திருமணம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

மரபணு காரணிகள்
பொதுவாக கன்னக்குழி என்பது அவர்கள் மரபணுக்கள் மூலமாக வருவதாகக் கூறுகிறார்கள். ஆனால் சிலருக்கு தானாகவே இந்த அமைப்பு ஏற்படுகிறது. ஒருவர் புன்னகைக்கும்போது தானாக நிகழும் இந்த அமைப்பு சருமத்தை உள்நோக்கி இழுக்கும் முக்கிய தசைகளால் உருவாகிறது. இந்த பெண்களை திருமணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை
விஷ்ணு புராணத்தில் கூறியுள்ளபடி கன்னத்தில் குழி விழும் பெண்கள் ஆனதனமான திருமண வாழ்க்கையை பெறுவார்கள். இவர்கள் தங்கள் கணவரிடம் அளவிற்கு அதிகமான காதலும், மதிப்பும் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை நெருக்கமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும்.

வலிமையான சுக்ரன்
கன்னத்தில் குழி விழுவது அவர்களுக்கு சுக்கிரனின் அனுகிரகம் அதிகமாக கிடைப்பதற்கான அடையாளம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதனால் இவர்களின் வாழ்க்கையில் பணக்கஷ்டம் என்பது ஏற்பட வாய்ப்புகள் மிகக்குறைவு ஆகும். இது அவர்களின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை உறுதி செய்கிறது.

வேடிக்கையை விரும்புபவர்கள்
கன்னத்தில் குழி இருக்கும் பெண்கள் வேடிக்கையை விரும்புபவர்களாகவும், அன்பானவர்களாகவும், கவலையற்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்களாக இருப்பார்கள். கன்னத்தில் குழி விழுவது பற்றி மேலும் சில உண்மைகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளவும்.

பிறப்புக் குறைபாடு
மருத்துவரீதியாக பார்க்கும் போது ஜிகோமாடிகஸ் மேஜர் மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு குறைவாக இருப்பதால் கன்னத்தில் குழி விழுவதை பிறப்புக் குறைபாடு என்று கூறுகிறார்கள். இது கரு வளர்ச்சியின் போது சரும இணைப்பு திசுக்களில் ஏற்பட சில வளர்ச்சிக் கோளாறு காரணமாக இருக்கலாம்.

ஒற்றை மரபணு
கன்னத்தில் விழும் மரபணுக்கள் மிகவும் சுவாரஸ்யமானதாகும். கன்னக்குழி என்பது ஒரு மேலாதிக்க நடத்தையாகும், அதாவது கன்னக்குழியை பெறுவதற்கு ஒரே ஒரு மரபணு மட்டுமே தேவை.

பெற்றோர்களிடம் இருந்து வருவது
உங்கள் பெற்றோர்களில் யாராவது ஒருவருக்கு கன்னத்தில் குழி இருந்தால் உங்களுக்கு 25 முதல் 50 சதவீதம் வரை அந்த மரபணுவை பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஒருவேளை பெற்றோரில் இருவருக்குமே கன்னத்தில் குழி இருந்தால் உங்களுக்கு 100 சதவீதம் அந்த மரபணு வரும்.

இளமையுடன் தொடர்புடையது
கன்னக்குழி உங்கள் இளமையுடன் தொடர்புடையதாகும். சிலருக்கு இளமைப்பருவத்தில் கன்னத்தில் குழி விழும், ஆனால் வயதான காலத்தில் மறைந்துவிடும். ஏனெனில் வயதான காலத்தில் தசைகள் நீண்டு இந்த கன்னக்குழிகள் மறைந்துவிடும்.

அதிக கொழுப்புகள்
சிலசமயம் உங்கள் முகத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள் கன்னக்குழியாக மாற வாய்ப்புள்ளது. இந்த கன்னக்குழிகள் நிரந்தரமானதாக இருக்காது, அதிகப்படியான கொழுப்பு மறைந்தவுடன் இந்த குழியும் மறைந்துவிடும்.



Click it and Unblock the Notifications