For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்த இந்தியர்!.. இப்படியாவது நடக்குமா? என்ற ஏக்கத்தில் 90கிட்ஸ்…!

தொழில்நுட்பம் அதன் உச்சத்தில் இருக்கிறது என்பதை ஆன்லைன் நிச்சயதார்த்தம் என்ற தலைப்பில் ட்விட்டரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று நிரூப்பித்துள்ளது.

|

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்துவருகிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஒரு காலத்தில் ஹோட்டலில் ஆடர் செய்தால் வீட்டிற்கே உணவு கொண்டுவந்து கொடுப்பார்கள் என்று யாராவது சொல்லியிருந்தால், அவர்களை பார்த்து நிறைய பேர் சிரித்து இருப்பார்கள். உணவை யாரவது வீட்டுக்கே கொண்டு வந்து கொடுப்பாங்களா? என்று கிண்டல் அடித்து இருப்பார்கள். ஆனால், அது இன்று நடைமுறையில் இருக்கிறது. ஸ்விகி, சொமேட்டோ போன்ற ஆப்களில் தினமும் ஆடர் செய்து சாப்பிடுபவர்கள் இன்று ஏராளம்.

viral-video-of-couple-engaged-in-online-through-video-call

தற்போது இந்த தொழில்நுட்பம் உணவு முறையில் மட்டும் வளரவில்லை. கலச்சாரம், பண்பாடு எனக் கூறப்படும் திருமண நிகழ்விலும் தொழில்நுட்பம் உச்சத்தை தொட்டுவிட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணத்திற்கு நிகராக பார்க்கப்படும் நிச்சயதார்த்தம் இரண்டு நிகழ்வும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ மண்டபத்தில் அல்லது வீட்டில் வெகுவிமர்சையாக செய்யப்படும். தற்போது மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் கூட வர வேண்டாம் ஆன்லைனில் திருமண நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் தொழில்நுட்பம் இந்தியாவில் ஒரு இடத்தில் நடந்துள்ளது. அதைப்பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தொழிழ்நுட்ப காலம்

தொழிழ்நுட்ப காலம்

மக்கள் தங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்காக அல்லது ஷாப்பிங் செய்வதற்காக ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய நேரங்கள் முன்பு இருந்தன. ஆனால், தற்போதுள்ள தொழில்நுட்ப உலகில் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான விருப்பத்தை வழங்குகிறது மற்றும் சமூக வலைதளங்கள் உங்கள் அன்புக்குரியவர்களை இணைப்பதன் மூலமும் தொழில்நுட்பம் நம் வாழ்க்கையை தளர்த்தியுள்ளது.

MOST READ:இந்த காரணம்தான் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறதாம்...!

வீடியோகால்

வீடியோகால்

உலகின் வேறு எந்த மூலையில் இருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களிடம் நீங்கள் வீடியோகால் மூலம் பேசலாம். ஆனால், வீடியோகாலில் திருமண நிச்சயதார்த்தம் என்றால்? யாராவது நம்புவார்களா? நடைமுறையில் இதுவும் சாத்தியம் என்று நிரூப்பித்துள்ளனர் இந்தியர்கள்.

ஆன்லைனில் நிச்சயதார்த்தம்

தொழில்நுட்பம் அதன் உச்சத்தில் இருக்கிறது என்பதை ஆன்லைன் நிச்சயதார்த்தம் என்ற தலைப்பில் ட்விட்டரில் சமீபத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று நிரூப்பித்துள்ளது. நிச்சயதார்த்தம் என்பது சொந்தபந்தம் அனைவரும் கூடி பொதுவாக வருங்கால மணமகன் மற்றும் மணமகள் இருவரும் அவர்களின் விரல்களை பிடித்து மோதிரம் மாற்றி சடங்கு செய்வது. அவற்றுடன் பூக்களும் மாலைகளும் கூட இடம்பெறும். நிச்சயதார்த்தம் என்பது கிட்டத்தட்ட அரை திருமணம் என்றும் கூறுவதுண்டு.

நேரில் கலந்துகொள்ள முடியவில்லை

நேரில் கலந்துகொள்ள முடியவில்லை

இந்த வீடியோகாலில் அவர்கள் குஜராத் மொழி பேசுவதால் இந்த சம்பவம் குஜாரத்தில் நடந்துள்ளது என்று தெரிந்துகொள்ள முடிந்துள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ள நிலையில், திருமணத்திற்கு முன்னதான நிச்சயதார்த்த விழாவிற்காக ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், மணமக்கள் இருவராலும் நேரில் கலந்துகொள்ளமுடியாது என்ற சூழ்நிலை உருவாக, பையனுக்கும் பெண்ணுக்கும் ஆன்லைனிலேயே நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.

MOST READ:சிறிய பிரச்சனை என்று நீங்க நினைக்கும் இந்த அறிகுறிகள் உங்க உயிருக்கே ஆபத்தாய் மாறலாம்...!

ஆன்லைனில் சடங்கு

ஆன்லைனில் சடங்கு

அந்த வீடியோவில் வருங்கால தம்பதிகள் இருவரும் தனித்தனி செல்போனில் வீடியோ காலில் உள்ளனர். நிச்சயதார்த்தம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்த இடத்தில் செல்போன்கள் வைக்கப்பட்டிருந்தன. மணமக்கள் இருவரும் நேரில் இருந்தால் அவர்களுக்கு என்ன சடங்குகள் எல்லாம் செய்யப்படுமோ அது எல்லாம் அங்கு செய்யப்பட்டது. ஆன்லைன் நிச்சயதார்த்தத்தை புகைப்படமும், வீடியோவும் எடுத்தனர் அங்கிருந்த உறவினர்கள்.

மணப்பெண்ணுக்கு சடங்கு

மணப்பெண்ணுக்கு சடங்கு

மணப்பெண் வீடியோகாலில் இருக்கும் செல்போனுக்கு பொட்டு வைக்கப்பட்டது. உச்சக்கட்டமாகப் பெண்ணிற்கு சால் போர்த்தும் நிகழ்ச்சியில் பெண் விடியோ கால் பேனிற்கு சால் போர்த்தப்பட்டது. அனைவரும் வருங்கால தம்பதியை வாழ்த்தினர்.

நிச்சயதார்த்த மோதிரம்

நிச்சயதார்த்த மோதிரம்

நிச்சயதார்த்த மோதிரங்கள் அந்தந்த மொபைல் போன்களுக்கு முன் வைக்கப்படுகின்றன. மணமகனும், மணமகளும் ஆன்லைனில் நிச்சயதார்த்தம் செய்வதைப் பார்க்கும்போது குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியுடன் வீடியோகாலில் இருக்கும் மணமக்களை பார்த்து மகிழ்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது.

MOST READ:நீங்க டயட் ஃபாலோ பண்ணுறீங்கனா? இந்த தவறுகள தெரியாம கூட பண்ணிடாதீங்க...!

முதல்முறை

முதல்முறை

தம்பதியினர் தங்கள் வேலையில் மிகவும் பிஸியாக இருந்திருக்கலாம் அல்லது அவர்களுக்கு விமுறை கிடைக்கமால் இருந்திருக்கலாம். ஆக, காரணம் எதுவாக இருந்தாலும், இந்தமாதிரி ஆன்லைன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது அநேகமாக இதுதான் முதல்முறை. சினிமாவில் கூட ஆன்லைன் நிச்சயதார்த்தம் என்று ஒரு கான்சப்ட் இல்லை. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

சோசியல் மீடியா கமெண்ட்

சோசியல் மீடியா கமெண்ட்

பலராலும் பார்க்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் இந்த வீடியோவிற்கு பலர் தங்கள் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். "அவன் அவனுக்கு கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு கிடைக்கல, இதுங்க பண்ற அலும்பல பாருங்க", "அருமையான பதிவு. போற போக்கை பார்த்தால் ஆன்லைன்லயே எல்லாத்தையும் முடிச்சிக்குவாங்க போல" என்று கிண்டலாக பலர் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். மேலும் 90 கிட்ஸ் ஒருவர், "எனக்கு இதுகூட நடக்குமாம்னு தெரியல" என்று குசும்பாக கமெண்ட் செய்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Viral Video of Couple Engaged in Online through Video Call

Here is the viral video of couple engaged in online through video call.
Story first published: Wednesday, February 12, 2020, 18:28 [IST]
Desktop Bottom Promotion