Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
2023-ல் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப் போகுது...
2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சனியின் ராசி மாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள்.
Vipreet Rajyoga In 2023: புத்தாண்டில் நுழைய இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அனைவருக்குமே வரக்கூடிய 2023 புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருப்போம். அதைத் தெரிந்து கொள்ள ஜோதிடம் பெரிதும் உதவி புரியும். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் கணித்து கூறப்படுகின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அந்த கிரக மாற்றங்களால் பல சுப மற்றும் அசுப யோகங்களும் உருவாகவுள்ளன.

அதில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சனியின் ராசி மாற்றத்தால் விபரீத ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளில் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறப் போகிறார்கள். குறிப்பாக அந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கவுள்ளது. இப்போது 2023-ல் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது என்பதைக் காண்போம்.

கடகம்
2023-ல் நிகழும் சனிப்பெயர்ச்சியின் போது, கடக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சனி செல்கிறார். எனவே கடக ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள், இந்த விபரீத ராஜயோகத்தால் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. பொருளாதார ரீதியாக மிகவும் அற்புதமாக இருக்கும். அதே வேளையில் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

கன்னி
2023 ஆம் ஆண்டில் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது. ஏனெனில் சனி பகவான் கன்னி ராசியின் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். எனவே நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். இதுவரை ரகசியமாக இருந்து உங்களை பழிவாங்கிய எதிரிகள் இந்த யோக காத்தில் அழிக்கப்படுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதும் கன்னி ராசிக்கார மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெறுவார்கள். இதுவரை அவதிப்பட்டு வந்த நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் 2023 ஆம் ஆண்டில் உருவாகும் விபரீத ராஜயோகத்தால் நல்ல நிதி பலன்களைப் பெறுவார்கள். ஏனென்றால் சனி பகவான் தனுசு ராசியின் 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். மேலும் இதுவரை சனியின் பிடியில் சிக்கி அவதிப்பட்டு வந்த தனுசு ராசிக்காரர்கள், 2023-ல் நிகழும் சனிப்பெயர்ச்சியில் இருந்து சனியின் பிடியில் இருந்து விடுதலை பெறுகிறார்கள். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பரின் உதவியால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications