Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
டிசம்பரில் 2 முறை ராசியை மாற்றும் சுக்கிரனால் இந்த ராசிக்காரர்களின் பிரச்சனை இருமடங்கு அதிகரிக்கும்...
ஜோதிட சாஸ்திரத்தின் படி, அழகு, காதல், செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி ஆகியவற்றின் கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. இந்த சுக்கிரன் ஒரே மாதத்தில் இருமுறை ராசியை மாற்றுவது சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
2022 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நாம் உள்ளோம். இந்த டிசம்பர் மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அதில் ஆடம்பரம், செல்வத்தின் காரணியாக கருதப்படும் சுக்கிரனும், புத்திகாரகனான புதனும் இந்த மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றவுள்ளார்கள். அதுமட்டுமின்றி, புதன் மாதத்தின் இறுதியில் வக்ர நிலையில் தனுசு ராசியை அடைகிறார். இது சில ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும்.

2022 டிசம்பர் 5 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு மாறினார். அதன் பின் 2022 டிசம்பர் 29 ஆம் தேதி சுக்கிரன் மகர ராசிக்கு செல்கிறார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, அழகு, காதல், செல்வம், ஆடம்பரம், மகிழ்ச்சி ஆகியவற்றின் கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. இந்த சுக்கிரன் ஒரே மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுவது சில ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை சுக்கிரன் ராசியை மாற்றுவதால் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். எனவே சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றுவது ரிஷப ராசிக்காரர்களுக்கு நற்பலனை அளிக்காது. அதுவும் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்களுக்கு பணியிடத்தில் அதிக வேலை காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாக நேரிடும். இந்த மாதத்தில் வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் நிதானத்தை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும். குறிப்பாக இக்காலத்தில் நிதி இழப்பிற்கு வாய்ப்புள்ளதால், நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்
டிசம்பரில் சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றுவதால் கடக ராசிக்காரர்களும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குறிப்பாக இக்கால கட்டத்தில் நிதி இழப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலலாம். யாருக்கும் இக்காலத்தில் கடன் கொடுத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால் அந்த பணத்தைத் திரும்ப பெறுவது கஷ்டமாகிவிடும்.

சிம்மம்
டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் தனுசு, மகரம் ஆகிய இரண்டு ராசிகளிலும் பயணிப்பது, சிம்ம ராசிக்காரர்களுக்கு நற்பலனை வழங்காது. குடும்பத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்களின் வேலைகளை சரியாக முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

தனுசு
டிசம்பரில் சுக்கிரன் இருமுறை ராசியை மாற்றுவது தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்றாக இருக்காது. குறிப்பாக வியாபாரம் செய்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதிக பணத்தை செலவிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்குவீர்கள். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிப்பதால் மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கும் டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை ராசியை மாற்றுவது சாதகமாக இருக்காது. நிதி இழப்புகளை உருவாக்குவதோடு, ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் உறவுகளிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். சொத்து தொடர்பான விஷயங்களில் எதிரிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். எனவே இக்காலத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications