Latest Updates
-
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்!
விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரனால் இந்த 3 ராசிகளுக்கு தொழிலில் நிறைய லாபம் கிடைக்கப் போகுது...
சுக்கிரன் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் அஸ்தமனமானார். அதைத் தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து விருச்சிக ராசியில் உதயமாவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும்.
வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதாடு, சில சமயங்களில் அஸ்தமனமாகி, உதயமாகும். அப்படி கிரகங்களின் இயக்கங்களின் இயக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் செல்வம், காதல், ஆடம்பரம், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் 2022 நவம்பர் 20 ஆம் தேதி விருச்சிக ராசியில் உதயமாகவுள்ளார்.

ஏற்கனவே சுக்கிரன் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் அஸ்தமனமானார். அதைத் தொடர்ந்து 2 மாதங்கள் கழித்து விருச்சிக ராசியில் உதயமாவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்படும். ஆனால் 3 ராசிக்காரர்கள் சுக்கிரன் உதயமாவதால் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவதோடு, நல்ல லாபத்தையும் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சுக்கிரனின் உதயம் ரிஷப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மற்றும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். ஏனென்றால் சுக்கிரனின் உதயமானது ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டில் நிகழ்கிறது. எனவே கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அதோடு வாழ்க்கைத் துணையின் ஆதரவும் கிடைக்கும். அதே சமயம் குடும்பத்தினரின் ஆதரவையும் பெறுவீர்கள். இது தவிர, உங்கள் துணையுடன் ஏதேனும் முதலீடு செய்திருந்தால், இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகிறார். இது குழந்தைகளின் உணர்வு மற்றும் உயர் கல்விக்கான வீடாகும். எனவே, இந்த சுக்கிர உதயத்தால் கடக ராசிக்காரர்கள் குழந்தைகளிடம் இருந்து நற்செய்தியைப் பெறுவார்கள். போட்டித் தேர்வுகளை எழுதிய மாணவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவார்கள். அதே வேளையில் காதல் உறவு இனிமையாக இருக்கும். வாகனம் அல்லது சொத்து வாங்க நினைத்தால், அதை இக்காலத்தில் வாங்க உறுதியாக இருப்பீர்கள்.

சிம்மம்
சுக்கிரன் உதயமாவது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனென்றால் சுக்கிரன் சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டில் உதயமாகவுள்ளார். இது பொருள் மகிழ்ச்சி ம்ற்றும் தாயின் உணர்வு ஆகியவற்றின் வீடாகும். எனவே இக்காலத்தில் சிம்ம ராசிக்காரர்கள் அனைத்துவிதமான பொருள் இன்பங்களையும் பெறுவார்கள். மேலும் சொத்து மற்றும் வாகனம் வாங்குவதில் உறுதியாக இருப்பீர்கள். நிதி ரீதியாக இக்காலம் நன்றாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் தாயின் ஆதரவைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications