Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சுக்கிரனால் தீபாவளிக்கு முன் இந்த 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப் போகுது... உங்க ராசி இதுல இருக்கா?
2022 செப்டம்பரில் கன்னி செல்லும் சுக்கிரனால் தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
2022 செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் மாறுகிறார். அதுவும் 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் நிறைய ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வழங்கும்.

ஜோதிடத்தின் படி, சுக்கிரன் பொருள் இன்பம், ஆடம்பரம், அழகு மற்றும் காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவர் அனைத்துவிதமான சந்தோஷத்தையும் பெறுவார். அதுவே வலுவிழந்த நிலையில் இருந்தால், அவர் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் கன்னி செல்லும் சுக்கிரனால் தீபாவளிக்கு முன் 4 ராசிக்காரர்களின் வருமானம் உயரப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சொத்துக்களால் நற்பலன்கள் கிடைக்கும். நல்ல பண ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்காலகட்டத்தில் உங்கள் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். எந்த ஒரு ஆரோக்கிய பிரச்சனையையும் சமாளிப்பீர்கள். பணியிடத்தில் நல்ல வெற்றிக்கான வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே சுக்கிர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களின் பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் கிடைக்கும். இதனால் வருமானம் அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் இக்காலத்தில் தீர்க்கப்படும். பணியிடத்தில் உங்களின் பணி நல்ல பாராட்டைப் பெறும். பணிபுரிபவர்களுக்கு இது நல்ல காலம். பதவி உயர்வு கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே சுக்கிர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பல வழிகளில் நல்ல பணத்தைப் பெற வாய்ப்புள்ளது. இக்காலத்தில் மனம் பதற்றமின்றி, அமைதியாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால் வருமானம் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய முதலீடுகள் செய்வதற்கு இது நல்ல காலமாக இருக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்த வந்த பிரச்சனைகள் இக்காலத்தில் விலகும். தொழிலில் நற்பலன்கள் கிடைக்கும். தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.



Click it and Unblock the Notifications