Latest Updates
-
2 உருளைக்கிழங்கு இருந்தா, இப்படி குருமா செய்யுங்க.. சிக்கன், மட்டன்-லாம் தோத்துடும்.. -
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
சுக்கிரனால் அக்டோபர் 18 வரை இந்த 5 ராசிகளுக்கு யோகமான காலமா இருக்கும்..! உங்க ராசி என்ன?
சுக்கிர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமாக இருக்கும். இப்போது கன்னி செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் நிறைய நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ஜோதிடத்தில் பொருள் இன்பம், காதல், அழகு மற்றும் ஆடம்பரம் ஆகியவற்றின் காரக கிரகமாக சுக்கிரன் கருதப்படுகிறது. இந்த சுக்கிரன் கடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறினார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலனும், சில ராசிக்காரர்களுக்கு மோசமான பலனும் கிடைக்கலாம். ஆனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் 5 ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சாதகமாக இருக்கும். இப்போது கன்னி செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்கள் நிறைய நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் தொழிலில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நிதி நிலைமை மேம்படும். அதிக பணம் சம்பாதிப்பீர்கள். இக்காலத்தில் நல்ல செயல்களுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். படைப்பாற்றல் திறன் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால், அதில் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆடம்பரத்திற்காக பணத்தை அதிகம் செலவழிப்பீர்கள். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான காலமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் உள்ளார். இதனால் நிதி நிலை மேம்படும் மற்றும் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். முதலீடு செய்ய நீண்ட காலமாக யோசித்துக் கொண்டிருந்தால், அதற்கு இது சிறந்த காலம். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள். சிக்கிய பணம் இக்காலத்தில் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். வியாபாரிகளுக்கு சிறப்பானதாக இருக்கும். இக்காலத்தில் அனைத்து வகையான எதிர்மறை எண்ணங்களும் மனதில் இருந்து விலகும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இது வருமான வீடு. இதனால் இக்காலத்தில் கடின உழைப்பினால் அதிக பணம் சம்பாதிப்பீர்கள். நிதி முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்பை விட நிதி நிலை வலுவாக இருக்கும். காதல் விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். சுக்கிரனின் அருளால் சமூகத்தில் உங்களின் ஆளுமை உயரும்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். இது அதிர்ஷ்ட வீடு. இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். அனைவருடனும் நல்லுறவில் இருப்பீர்கள். பணம் சம்பாதிப்பதற்கான பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications