Latest Updates
-
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்?
கன்னி செல்லும் சுக்கிரனால் இன்று முதல் அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சுக்கிரன் 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி, அதாவது இன்று சிம்ம ராசியில் இருந்து புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்கிறார். இதனால் எந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
வேத ஜோதிடத்தில், ஆடம்பரம், அழகு, காதல், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி, அதாவது இன்று சிம்ம ராசியில் இருந்து புதன் ஆளும் கன்னி ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சுக்கிரனின் ராசி மாற்றம் ஒருவரது திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை, நிதி நிலை போன்றவற்றை பாதிக்கும்.

அந்த வகையில் சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால், சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைத்தாலும், சில ராசிகளுக்கு மோசமான பலன்கள் கிடைக்கலாம். இப்போது சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சில விஷயங்களுக்காக அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாக நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் இந்த காலகட்டத்தில் ஒருவித சட்டப்பூர்வ சர்ச்சையை சந்திக்க நேரிடலாம்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது மகிழ்ச்சி அசையா சொத்துக்கள் மற்றும் தாயின் ஆரோக்கியத்தைக் குறிக்கும் வீடு. எனவே இந்தப் பெயர்ச்சியின் தாக்கத்தால் உங்கள் தாயின் உடல்நலம் பாதிக்கப்படலாம். உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். சிலர் ஆடம்பரம், சுகம் ஆகியவற்றிற்காக நிறைய பணத்தை செலவிடக்கூடும். இருப்பினும், இக்காலத்தில் சிலரது நிதி நிலைமை மேம்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது தொழில், தந்தையின் நிலை, அரசியல் மற்றும் அந்தஸ்து ஆகியவற்றின் வீடு. இதனால் இக்காலத்தில் அனைத்து வேலைகளிலும் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும். தொழிலில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால், மிகவும் கவனமாக சிந்தித்து பின்னரே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் சச்சரவுகள் அதிகரிக்கலாம். நிதி ரீதியாக, நஷ்டத்தை சந்திக்க நேரிடும். சொத்துக்களை விற்பதால் நஷ்டத்தை சந்திக்கலாம். எனவே இக்காலத்தில் சொத்துக்களை விற்காதீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி நிலைமையில் ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும். சில திடீர் செலவுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பண விஷயத்தில் நிறைய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சிலர் இக்காலத்தில் வீட்டு அலங்காரம் மற்றும் ஆடம்பரத்திற்கு நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த வீடு திருமண வாழ்க்கை மற்றும் வணிக கூட்டாளருடனான உறவைக் குறிக்கிறது. ஆகவே இக்காலத்தில் கூட்டு வணிகம் செய்பவர்கள், சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த ஒரு புதிய வேலையையும் இக்காலத்தில் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திப்பீர்கள். இக்காலகட்டத்தில் புத்திசாலித்தனமாக பணத்தை செலவிடுங்கள். தொழில் ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications