Latest Updates
-
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
Shukra Gochar 2022: கன்னி செல்லும் சுக்கிரனால் அக்டோபர் 18 வரை இந்த ராசிகளுக்கு அமோகமா இருக்கப் போகுது...
சுக்கிரன் புதன் ஆளும் கன்னி ராசிக்கு வருவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இப்போது 2022 செப்டம்பர் 24 இல் கன்னி ராசிக்கு சுக்கிரன் செல்வதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 செப்டம்பர் 24 ஆம் தேதி இரவு 09.03 மணிக்கு சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்கிறார். சுகபோகங்களின் அதிபதியான சுக்கிரன் இந்த கன்னி ராசியில் 2022 அக்டோபர் 18 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு செல்வார்.

சுக்கிரன் புதன் ஆளும் கன்னி ராசிக்கு வருவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இப்போது கன்னி ராசிக்கு சுக்கிரன் செல்வதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்காது. இருப்பினும் ஆடம்பர செலவுகள் அதிகம் இருக்கும். சில காரணங்களால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்களுக்கு எதிரிகள் அதிகம் இருப்பார்கள். உங்களை அவமானப்படுத்த காத்துக் கொண்டிருப்பார்கள். எனவே கவனமாக இருங்கள். ஆரோக்கியத்தில் சற்று விழிப்போடு இருங்கள். நீதிமன்ற வழக்குகள் தொடர்பான சச்சரவுகளை வெளியிலேயே தீர்த்துக் கொள்ள முயற்சிக்கவும். தாய்வழி உறவுகள் வலுவடையும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். மாணவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். காதலிப்பவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். உங்கள் முழு ஆற்றலைப் பயன்படுத்தினால், எதிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் சகோதரர்களிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் சுக்கிரனின் தாக்கத்தால் எல்லாவிதமான ஆடம்பரங்களையும் பெற உதவியாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தியைப் பெறுவீர்கள். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். புதிய டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பினாலும், வாய்ப்பு சாதகமாக அமையும்.

கடகம்
கடக ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் சுக்கிரனின் அசைக்க முடியாத செல்வாக்கு உங்களை விரைவாக முடிவெடுப்பவராகவும் தைரியமாகவும் மாற்றும். உங்கள் செயல்கள் அனைத்தும் பாராட்டப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காத்தில் உங்கள் கருத்து வேறுபாடுகள் வளர விடாதீர்கள். உங்கள் குழந்தைகளைப் பற்றிய கவலைகள் நீங்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் திடீரென்று பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் இக்காலத்தில் கைக்கு திரும்ப கிடைக்கும். பணியிடத்தில் சதியால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீர்கள். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், வெற்றி பெறுவீர்கள்.

கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. விருந்தினர்களின் வருகையால் குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகளும் வெற்றி பெறும். உறவினர்களின் ஒத்துழைப்பு இக்காலத்தில் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகளில் கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி செய்ய வேண்டும். பணியிடத்தில் சதியால் பாதிக்கப்படுவதைத் தவிர்த்திடுங்கள். நீதிமன்ற வழக்குகளை வெளியே பேசி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு உருவாகும். உடன் பிறந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீங்கள் ஏதேனும் பெரிய வேலையைத் தொடங்க விரும்பினால் அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்களின் செல்வாக்கு அதிகரிப்பதோடு, உங்களின் முடிவுகளும் பாராட்டப்படும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனம் வாங்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து நற்செய்திகளைப் பெறுவீர்கள். வெளிநாடு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிர்பாராத இனிமையான பலன்கள் கிடைக்கும். உங்களின் அனைத்து விதமான பணிகளிலும் வெற்றி கிடைக்கும். தேர்வுகளை எழுதியிருந்தால், அதில் நல்ல பலன் கிடைக்கும். மத்திய, மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இது சாதகமான காலம். ஆரோக்கிய பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஏற்ற தாழ்வுகள் இருந்தபோதிலும், நீங்கள் விரும்பும் எந்த வேலையும் போராட்டத்திற்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உங்களின் கௌரவம் உயரும். வேலை செய்யும் இடத்திலும் சதிக்கு பலியாவதைத் தவிர்க்கவும். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வீர்கள். ஆரோக்கியத்தில் பாதகமான விளைவு ஏற்படும்.

மீனம்
மீன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பல வழிகளில் இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். மாமனார்-மாமியாரின் ஆதரவு கிடைக்கும். உங்களை அவமானப்படுத்த நினைத்தவர்கள் இக்காலத்தில் உங்களுக்கு உதவ முன்வருவார்கள். அரசின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு இனிமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications