Just In
- 45 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 17 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 20 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
சுக்கிரன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 6 ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரப் போகுது..
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றிக் கொண்டே இருக்கும். கிரகங்களின் இடமாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களில் சுக்கிரன் ஆடம்பரம், வசதி மற்றும் மகிழ்ச்சியின் காரணி கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருந்தால், அவர் சகல வசதிகளையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார். அதுவே சுக்கிரன் அசுப நிலையில் இருந்தால், பலவிதமான இன்பங்களை இழந்து வாழ வேண்டியிருக்கும்.
இந்நிலையில் சுக்கிரன் 2022 ஜூன் 18 ஆம் தேதி தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். இந்த ராசியில் ஜூலை 13 ஆம் தேதி வரை இருப்பார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். இப்போது ரிஷபம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
ரிஷபம் செல்லும் சுக்கிரனால் மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக தொழிலில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகள் லாபம் பெறுவார்கள். இக்காலத்தில் தொழிலை வளர்க்க முதலீடு செய்வது நல்லது. சிக்கிய பணம் இக்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

ரிஷபம்
சொந்த ராசிக்கு சுக்கிரன் வருவதால், ரிஷப ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். பொருளாதார நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். ஒன்றிற்கு மேற்பட்ட வழிகளில் இருந்து பணம் உங்கள் கையில் வந்து சேரும். வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு புதிய வேலையைத் தொடங்க விரும்பினால், அதற்கு இது சாதகமான காலமாகும். முக்கியமாக இக்காலத்தில் புதிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி நற்பலன்களைத் தரும். பணிபுரிபவர்களுக்கு வருமானம் உயர வாய்ப்புள்ளது. பணியிடத்தில் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. பதவி உயர்வு பெறவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நிதி ஆதாயம் பெற வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இக்காலத்தில் கடக ராசிக்காரர்கள் நல்ல நிதி பலன்களைப் பெறுவதோடு, அதிகம் சேமிக்கவும் முடியும். மேலும் வாழ்வில் வசதிகளும் பெருகும்.

சிம்மம்
ஜூன் 18 ஆம் தேதி நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் பணியிடத்தில் நற்பலன்களைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். இடமாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இக்காலத்தில் அது நடக்கும். பதவி உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள் மற்றும் கடின உழைப்பிற்கான முழு பலனும் இக்காலத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலம். பொருளாதார நிலை வலுவாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். திடீரென்று வருமானம் அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க சிறந்த காலம். ஒன்றுக்கு மேற்பட்ட ஊடகங்கள் மூலம் நீங்கள் பணத்தைப் பெறுவீர்கள். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்
சுக்கிர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் சேரும். அதிர்ஷ்டம் பெரிதும் ஆதரிக்கும். வருமானம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நற்பலன்களும், லாபங்களும் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் ஒரு புதிய நபரை சந்திப்பீர்கள்.