Just In
- 2 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 17 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 19 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 22 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
அமைச்சர் பிடிஆர் கார் மீது காலணி வீச்சு.. 3 பேர் கைது.. அதில் ஒருவர் சிண்ட்ரெல்லாவா?
- Movies
எனக்கு இந்த நடிகை தான் பிடிக்கும்.. மனைவி பெயரை மறந்த பிரசன்னா..செம ரியாக்ஷன் கொடுத்த சினேகா!
- Finance
இந்த ஒரு செயலி இருந்தால் போதும்.. விமான நிலையத்தில் செக்-இன் ரொம்ப ஈஸி!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
Shukra Gochar 2022: சுக்கிரன் ரிஷபத்திற்கு செல்வதால் இந்த ராசிகளுக்கு யோகம் அடிக்கப் போகுது...
கிரகங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கும் ஓர் கிரகம் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். ஆனால் 2022 ஜூன் 18 ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றம் அதிக நன்மைகளை உண்டாக்கும். ஆடம்பரமான வாழ்க்கையைக் குறிக்கும் சுக்கிரன், ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். இந்த சுக்கிரன் மீன ராசியில் வலிமையாகவும், கன்னி ராசியில் பலவீனமாகவும் இருப்பார். யாருடைய ஜாதகத்தில் சுக்கிரன் சுப வீட்டில் இருக்கிறாரோ, அவர்கள் மிகவும் வெற்றிகரமானவர்களாக இருப்பர். இப்போது ரிஷபம் செல்லும் சுக்கினால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை வலுவாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கும் வாய்ப்புள்ளது. பேச்சுத்திறமையால் கடினமான சூழ்நிலைகளைக் கூட எளிதாக கையாள்வீர்கள். கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். திருமண பேச்சு வார்த்தை நிறைவேறும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் குறையும். புதுமணத் தம்பதியர்களுக்கு குழந்தை பிறக்கும் யோகம் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நினைத்த காரியங்கள் வெற்றிகரமாக நடக்கும். வியாபாரிகள் எந்த வகையான புதிய ஒப்பந்தத்திலும் கையெழுத்திட வாய்ப்புள்ளது. மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். மொத்தத்தில், இந்த சுக்கிர பெயர்ச்சி காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எதிலும் வெற்றியைத் தரும் காலமாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பல இனிமையான மற்றும் எதிர்பாராத பலன்களைத் தருவார். ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பயணங்களால் அதிகச் செலவு ஏற்படும். கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்பினாலும், வெளிநாட்டு நிறுவனங்களில் வேலைக்குச் செல்ல விரும்பினாலும், வெற்றி கிடைக்கும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும். வீடு, வாகனமும் வாங்கும் வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். வருமானம் பெருகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் தொடர்பான கவலைகள் குறையும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். காதல் திருமணம் செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எல்லா வகையிலும் வெற்றி பெறுவார். எந்தவொரு அரசாங்க சேவைக்கும் விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது வெளிநாட்டு நிறுவனங்களில் சேவை அல்லது குடியுரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க நினைத்தால், அதற்கான வாய்ப்பு சாதகமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை பெருகும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில் எந்த வகையான அரசாங்க டெண்டருக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கு கிரகம் சாதகமாக இருக்கும். உங்கள் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்துங்கள், வெற்றி கிடைக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் எதிர்பாராத பலன்களும், ஏற்ற தாழ்வுகளும் உண்டாகலாம். ஆகவே ஒவ்வொரு செயலையும், முடிவையும் இந்தக் காலகட்டத்தில் மிகக் கவனமாகச் செய்ய வேண்டும். இக்காலத்தில் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை அவமானப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தையும் விட்டுவிட மாட்டார்கள். எனவே துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் கவனமாக செயல்பட வேண்டும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண பேச்சு வார்த்தைகளும் வெற்றி பெறும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவுகள் மேலும் வலுவடையும். இக்காலத்தில் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் முடிவு நஷ்டத்தை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். விசா தொடர்பான விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் மிகவும் ஏற்ற இறக்கமாக இருக்கும். ரகசிய எதிரிகள் அதிகரித்து தொடர்ந்து சதி செய்வார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தகராறு மற்றும் நீதிமன்றம் தொடர்பான விஷயங்களை பேசி தீர்க்க முயற்சிக்கவும். யாருக்கும் அதிகப் பணத்தைக் கடனாகக் கொடுக்காதீர்கள், இல்லையெனில் நீங்கள் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பயணத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் திறமையால் சூழ்நிலைகளை திறம்பட கட்டுப்படுத்துவீர்கள். காதல் திருமணம் செய்ய விரும்பினால், சந்தர்ப்பம் சாதகமாக இருக்கும். மூத்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்த சகோதரர்களின் ஆதரவு இருக்கும். மத்திய அல்லது மாநில அரசுத் துறைகளில், வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு இக்காலத்தில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். வீடு, வாகனம் வாங்க நினைத்தால் அதற்கான வாய்ப்பு சாதகமாக அமையும். ஆடம்பரங்களுக்கு அதிக செலவு செய்வீர்கள். அரசாங்க வேலைக்கு முயற்சித்தால், அதற்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்தும் நல்ல செய்தி கிடைக்கும். இக்காலத்தில் எந்த முடிவை எடுத்தாலும், அதில் வெற்றி பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு நிறுவனங்களில் வேலை அல்லது குடியுரிமைக்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் வலிமையால், நீங்கள் கடினமான சூழ்நிலைகளை எளிதில் சமாளிப்பீர்கள். இளைய சகோதரர்களுடனான உங்கள் உறவை மோசமடைய விடாதீர்கள்.