Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
சுக்கிரனால் நவம்பர் 11 முதல் அடுத்த 24 நாட்கள் இந்த ராசிக்காரங்க நிறைய பிரச்சனைகளை சந்திப்பாங்களாம்..
சுக்கிரன் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சொந்த ராசியான துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், செழிப்பு, அதிர்ஷ்டம், செல்வம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே சுக்கிர பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் சுக்கிரன் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சொந்த ராசியான துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்வது சில ராசிக்காரர்களை மோசமாக பாதிக்கும்.

விருச்சிக ராசி செல்லும் சுக்கிரன், அந்த ராசியில் சுமார் 24 நாட்கள் வரை இருந்து, டிசம்பர் 05 ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்வார். இப்போது சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் எந்த 4 ராசிக்காரர்கள் நிறைய பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் சில சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவீர்கள். தேவையற்ற விஷயங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். விடாமுயற்சியும் கடின உழைப்பும் மட்டுமே உங்களுக்கு வெற்றியைத் தரும்.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே இக்காலத்தில் முதலீடு செய்வது தீங்ளை விளைவிக்கும். குடும்ப வாழ்வில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் நண்பர்களின் உதவியை எதிர்பார்க்காதீர்கள். ஏனெனில் அவர்களாலேயே சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்களை மீறி நிறைய பணம் செலவாகும். மேலும் இக்கால கட்டத்தில் உங்கள் பேச்சையும் நடத்தையையும் கவனிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே இப்பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் செலவாகும். ஆடம்பரம் மற்றும் பொழுதுபோக்கிற்கு நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். இதனால் நிதி பிரச்சனைகளை சந்தித்து கடன் வாங்க வேண்டியிருக்கும். வாகனம் வாங்க நினைத்தால், இக்காலத்தில் அந்த ஆசை நிறைவேறும். இந்த காலத்தில் நிதி அபாயங்களை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். கூட்டுத் தொழில் செய்பவர்களும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். திருமணமானவர்களது வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்ததாக இருக்கும். வீட்டு தேவைகளுக்காக நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். உங்களுக்கு வர வேண்டிய பணத்தில் தடை ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications