Latest Updates
-
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தக்காளி சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
முகத்தில் உள்ள கருமையைப் போக்கணுமா? அப்ப கடலை மாவு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இன்டர்நெட் வசதியே இல்லாத உலகின் மிகவும் மோசமான நாடு எது தெரியுமா? இங்க தங்கத்தை விட இன்டர்நெட் காஸ்ட்லி -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க...
Shukra Gochar 2022: விருச்சிகம் செல்லும் சுக்கினால் நவம்பர் 11 முதல் இந்த ராசிகளுக்கு யோக காலம் ஆரம்பிக்குது..
தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 நவம்பர் 11 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் தனி குணாதிசயங்களைக் கொண்டவை. அதில் சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர் வாழ்வில் அனைத்துவிதமான மகிழ்ச்சியுடனும், செழிப்போடும் இருப்பார்.

தற்போது சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 நவம்பர் 11 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். இப்போது சுக்கிரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆடம்பரத்திற்காக அதிக பணத்தை செலவழிப்பீர்கள். மேலும் இக்கால கட்டத்தில் ரகசியமாக பல வழிகளில் இருந்து பணத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் பேச்சு மற்றும் நடத்தை மேம்படும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு இக்காலத்தில் நல்ல திருமண வரன் கிடைக்கும். புதிய முதலீடு செய்ய சிறந்த காலம் இது. பேச்சால் சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அதிக பணத்தை சம்பாதிப்பீர்கள். வீட்டை அழகாக்க நிறைய பணத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெண்கள் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். வியாபாரம் செய்பவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்தியைப் பெறுவீர்கள். ஷேர் மார்கெட்டில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறந்த காலமாக இருக்கும். காதலிப்பவர்கள் திருமணம் செய்ய வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வாகனம் அல்லது வேறு ஏதேனும் ஆடம்பர பொருட்களை வாங்கும் வாய்ப்புள்ளது. நிலம், வீடு, வாகனம் ஆகியவற்றிற்கு பணத்தை செலவழிக்க நேரிடும். இக்காலத்தில் எதிர்பாலினத்தவரின் மீது அதிக ஈர்ப்பைப் பெறுவீர்கள். சிலர் புதிய தொழிலைத் தொடங்கவும் வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம். காதலிப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் உடன்பிறந்தவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். தந்தை வழியில் இருந்து செல்வம் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே சுக்கிர பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு நிறைய பணம் கிடைக்கும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் மாமியார்-மாமனார் மூலம் நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. மூதாதையர் தொழிலில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். தந்திரம் மற்றும் மந்திரத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் மரியாதை சமூகத்தில் அதிகரிக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இனிமேல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆடம்பரத்திற்காக பணத்தை அதிகம் செலவழிப்பீர்கள். இக்காலத்தில் காதல் மற்றும் திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நிதி நிலை மேம்படும். தொலை தூர பயணத்திற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபகரமான காலமாக இருக்கும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். எனவே இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமூகத்திலும் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் துறைகளில் வெற்றி பெறுவார்கள். காதல் உறவில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். பங்குச் சந்தை தொடர்பான நபர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கும்ப ராசிக்காரர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் எதிர்பாராத வெற்றியைப் பெறுவார்கள். இக்காலத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வசதிக்காக அதிக பணத்தை செலவழிப்பீர்கள். சுக்கிரனின் அருளால் உங்கள் தாயாரின் ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்
மீன ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். உயர்கல்வியுடன் தொடர்புடையவர்கள் பெரும் வெற்றியைப் பெறுவார்கள். உங்கள் பேச்சில் ஆற்றல் அதிகரிக்கும். ஊடகம் மற்றும் எழுத்து துறையில் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல நன்மையைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications