Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை
Shukra Gochar 2022 : சுக்கிர பெயர்ச்சியால் யாரெல்லாம் கவனமா இருக்கணும், யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் அடிக்கும்?
சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்லும் போது, தனுசு ராசியில் பயணித்து வரும் புதனுடன் இணைந்து பயணிப்பார். இதனால் தனுசு ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் ஒரு சுப யோகம் உருவாகி, நற்பலனைத் தரும்.
நவகிரகங்களில் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். ஜோதிடத்தின் படி, சுக்கிரன் அழகு, காதல், ஆரம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் தற்போது விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் 2022 டிசம்பர் 05 ஆம் தேதி தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார்.

சுக்கிரன் தனுசு ராசிக்கு செல்லும் போது, தனுசு ராசியில் பயணித்து வரும் புதனுடன் இணைந்து பயணிப்பார். இதனால் தனுசு ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் ஒரு சுப யோகம் உருவாகி, நற்பலனைத் தரும். புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் உருவாகும் யோகம் தான் லட்சுமி நாராயண யோகம். இப்போது தனுசு ராசிக்கு செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். பொருளாதார ரீதியாக நற்பலன்களைப் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். கடந்த கால கடின உழைப்பிற்கான பலன் இம்மாதத்தில் கிடைக்கும். நண்பர்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், இப்பெயர்ச்சியின் போது 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலம் சாதகமற்றதாக இருக்கும். வாழ்வில் பல குழப்பம் மற்றும் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்கக்கூடாது. குறிப்பாக இக்காலத்தில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். நிதி விஷயங்களில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க வேண்டாம். எதிரிகளிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.

மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். அதுவும் புதனுடன் இணைந்து உள்ளார். இதனால் இக்காலத்தில் புத்திசாலித்தனம் மற்றும் செயல்திறனால் பணியிடத்தில் வெற்றியை பெறுவீர்கள். உடன் பணிபுரிபவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். நிதி விஷயங்களில் வெற்றி கிடைக்கும். நல்ல விஷயங்களுக்காக செலவுகளை அதிகம் செய்வீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். மன உளைச்சலுக்கு அதிகம் உள்ளாவீர்கள். இக்காலத்தில் ரகசிய எதிரிகள் அதிகரிப்பார்கள் என்பதால் கவனமாக இருங்கள். வேலையில் கவனக்குறைவாக இருக்காதீர்கள். நிதி சிக்கலை சந்திப்பீர்கள். தேவையற்ற செலவுகள் உங்கள் பட்ஜெட்டை பாதிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் அற்புதமாக இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஹோட்டல், நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் விளையாட்டு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் நற்பலனைப் பெறுவார்கள். நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். குழந்தைகளின் முழு ஆதரவை இக்காலத்தில் பெறுவீர்கள். திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது தாய், இல்லற வாழ்க்கை, வீடு, வாகனம் மற்றும் சொத்து ஆகியவற்றின் வீடாகும். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களின் இல்லற வாழ்க்கை சிறக்கும். தாயின் ஆரோக்கியம் மேம்படும். தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரமான பொருட்களை வாங்க அதிக பணத்தை செலவிடுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

துலாம்
துலாம் ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் பல பகுதிகளில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். நிதி முதலீடுகள் செய்வதைத் தவிர்க்கவும். நேரத்தை தேவையற்ற விஷயங்களில் வீணடிக்காதீர்கள். இக்காலத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் மன அழுத்தத்திற்கு ஆளாவீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் நல்ல செல்வ செழிப்போடு இருப்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். வேலையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். இக்காலத்தில் தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளால் லாபம் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை சூப்பராக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் வெற்றி காண்பார்கள். ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். வசதிக்காக நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். ஆரோக்கியம் பாதிக்கப்படும். மூட்டு மற்றும் கண் பிரச்சனை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். காரணமின்றி மன அழுத்தம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு குறையும். வேலை அழுத்தம் அதிகரிக்கும். வாகனத்தை கவனமாக ஓட்டவும்.

கும்பம்
கும்ப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தடைபட்ட பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருந்த வேலைகள் இக்காலத்தில் மீண்டும் தொங்கப்பட்டடு வெற்றிகரமாக முடியும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள்.

மீனம்
மீன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாரம் நன்றாக இருக்கும். வேலையில் செயல்திறன் மேம்படும். அந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். உடன் பணிபுரிபவர்களின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கம். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். நிதி விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வாகனம் வாங்க நினைத்தால், இக்காலத்தில் அது நிறைவேறும். கடன் பிரச்சனை தீரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications