Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மீனம் செல்லும் சுக்கிரனால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு யோகம் அடிக்கப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான நற்பலன்களை பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, கிரக மாற்றங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மாறுகின்றன. அதில் சுக்கிரன் ஒளிரும் கிரகம் என்று கூறப்படுகிறது. இந்த கிரகம் செல்வ செழிப்பைக் குறிக்கிறது. இவ்வுலகில் அனைவருமே செல்வ செழிப்போடு வாழவே விரும்புகிறார்கள். சுப கிரகமாக கருதப்படும் சுக்கிரன், கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி செல்கிறார்.

இந்த மீன ராசியில் சுக்கிரன் மே 23 ஆம் தேதி வரை இருந்து, பின் மேஷ ராசிக்கு இடம் மாறுவார். மீன ராசிக்கு சுக்கிரன் சென்றுள்ளதால், இக்காலத்தில் பலரது வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். ஆனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார், எம்மாதிரியான நற்பலன்களை பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
இந்த சுக்கிர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரப் போகிறது. நிதி நிலைமையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொத்து வாங்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பண பலன்களை பெறுவார்கள். வேலை விஷயத்தில் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும். விரும்பிய இட மாற்றம் மற்றும் சம்பள உயர்வுகளும் கிடைக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நிறைய ஆடம்பரங்களை அனுபவிப்பார்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் அடைத்துவிடுவீர்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது தொழிலில் சிறப்பான பலன்களைத் தரும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வேலையில் மிகவும் பொறுப்புடன் இருப்பார்கள். இது பணியிடத்தில் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும். இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபவர்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் மகாலட்சுமியின் பரிபூர்ண அருள் கிடைப்பதால், பண பிரச்சனைகள் எதுவும் இருக்காது.

கடகம்
கடக ராசிக்காரர்களே! மீன ராசியில் குருவுடன் சுக்கிரன் சேர்வதால் சிறந்த பலன்கள் கிடைக்கும். பல வழிகளில் நன்மைகள் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. பல வழிகளில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிதாக தொடங்கும் பல விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் தன்னம்பிக்கை அதிகரித்து, செய்யும் காரியங்கள் அனைத்திலும் சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களுடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். மகாலட்சுமியின் அருளால் நிதி நிலை சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது.



Click it and Unblock the Notifications