Shukra Gochar 2022: சுக்கிரனால் ஏப்ரல் 27 முதல் இந்த ராசிக்காரங்களோட செல்வம் பெருகப் போகுது..

மீன ராசிக்கு சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி புதன்கிழமை மாலை 06.06 மணிக்கு இடம் மாறுகிறார். அதன் பின் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மே 23 ஆம் தேதி செல்கிறார்.

Venus Transit in Pisces On 27 April 2022: Effects On Zodiac Signs And Remedies in Tamil

நவகிரகங்களில் செல்வ செழிப்பிற்கான காரணியான சுக்கிரன் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார். அதுவும் மீன ராசிக்கு சுக்கிரன் 2022 ஏப்ரல் 27 ஆம் தேதி புதன்கிழமை மாலை 06.06 மணிக்கு இடம் மாறுகிறார். அதன் பின் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மே 23 ஆம் தேதி செல்கிறார். பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மீன ராசிக்கு செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நிதி ரீதியாக, அதிக செலவுகள் காரணமாக சில சிக்கல்களை சந்திக்கக்கூடும். தொழில் ரீதியாக, இக்காலத்தில் பதவி உயர்வைப் பெறக்கூடும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலர் வெளிநாட்டு வாய்ப்புக்களையும் பெறலாம். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் வாழ்க்கைத் துணையுடன் ஒன்றாக நல்ல தருணங்களை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தம் மற்றும் மனக் கவலைகள் உங்களை தொந்தரவு செய்யும். இதைத் தவிர்க்க தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கை நல்ல லாபகரமானதாக இருக்கும். தொழில் இலக்குகளைப் பொருத்தவரை அனைத்து நோக்கங்களும் நிறைவேறும், இது மன அமைதியையும் திருப்தியையும் தரும். நிதி ரீதியாக, இந்த காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். தொழிலதிபர்கள் அதிக லாபத்தைப் பெறுவார்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக அவதிப்பட்ட பிரச்சனைகளில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் தொழில் வாழ்க்கைக்கு நல்ல காலமாகும். இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, வெகுமதி மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெறலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்கும் மற்றும் கடந்த காலத்தில் செய்த முதலீடு உங்களுக்கு லாபத்தை தரும். உங்கள் வாழ்க்கைத் துணையை எல்லையின்றி அதிகம் நேசிப்பீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் சில மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் சந்திக்க நேரிடும். எனவே இக்காலத்தில் அதிகம் சிந்திக்காதீர்கள்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக இக்காலம் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் வியாபாரிகள் நல்ல லாபம் அடைவார்கள். உங்கள் தந்தையுடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்த இது சிறந்த காலம். உங்கள் குடும்பத்துடன் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டால், அதற்கு இது ஏற்ற காலம். காதல் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழில் ரீதியாக இக்காலம் சற்று சவால் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் தொழிலில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடலாம். எனவே சற்று கவனமாகவும், பொறுப்பாகவும் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக, உங்கள் செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். மாமியார்-மாமனாரால் சற்று பயனடைவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிற்றுப் பகுதி மற்றும் கண்கள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வணிகத்தில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். இக்காலத்தில் வேலை விஷயமாக மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் திருமண வாழ்க்கையில் இருந்த நீண்டகால பிரச்சினைகள் இந்த காலகட்டத்தில் குறைந்து நல்ல பிணைப்பை உருவாக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். ஆகவே இக்காலம் தொழில் ரீதியாக சராசரியாக இருக்கும். உங்கள் திட்டங்களில் அதிகபட்ச பலனைப் பெறுவதற்கு அனைத்து திறன்களையும் சேர்த்து சரியான திட்டமிடலை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் சண்டையில் ஈடுபடாதீர்கள். இக்காலத்தில் பதவி உயர்வு தாமதமாகலாம். பொறுமையாக இருங்கள் மற்றும் உடனடி முடிவுகளை எதிர்பார்க்க வேண்டாம். நிதி ரீதியாக உங்கள் செலவுகள் அதிகரிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உறவுகள் சுமூகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பதவி உயர்வு மற்றும் வருமான உயர்வுக்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல வளர்ச்சியை காணக்கூடும். நிதி ரீதியாக சுமாராக இருக்கும். இருப்பினும் இக்காலத்தில் எந்தவிதமான ஊக நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உறவுகள் வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் சொந்த தொழில் செய்வோருக்கு சாதகமாக இருக்கும். பணிபுரிபவர்கள், பணியிடத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். மேலும் புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. னிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவிட நீங்கள் அதிகம் விரும்புவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த காலகட்டத்தில் தொழில் ரீதியாக நீங்கள் உங்கள் சக ஊழியர்களுடன் நல்ல உறவைப் பேண வேண்டும். இது உங்களுக்கு பதவி உயர்வை பெற உதவும். இக்காலத்தில் அதிகம் செலவழிப்பீர்கள். ஆனாலும் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் சரியான முடிவு நிதி அடிப்படையில் உங்களுக்கு அதிசயங்களைச் செய்யும். நெருங்கிய மற்றும் அன்பானவருடனான உறவு வலுபெறும். உங்கள் குழந்தைகள் மூலம் ஆதாயங்கள் இருக்கும். உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். நிதி ரீதியாக உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் வசதி மற்றும் ஆடம்பரங்கள் அதிகரிப்பதைக் காண்பீர்கள். உங்கள் தந்தையுடன் நீங்கள் மிகவும் வலுவான உறவைக் கொண்டிருப்பீர்கள். திருமணமாகாதவர்கள் காதலில் விழ வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலத்தில் நன்றாக இருப்பீர்கள்.

மீனம்

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் கணிசமான லாபத்தையும் வருமானத்தையும் பெறுவார்கள். நிதி ரீதியாக, நீங்கள் உங்களுக்காக செலவழிப்பீர்கள். மொத்தத்தில் நிதி நிலை சீராக இருக்கும். நிலையான பண வரவு இருக்கும். இக்காலத்தில் உங்கள் மீது நம்பிக்கை அதிகமாக இருக்கும். காதலிப்பவர்கள், தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள். திருமணமான தம்பதியினரின் பந்தம் வலுவடையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறிய ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்படலாம். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, April 26, 2022, 15:51 [IST]
Desktop Bottom Promotion