Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
துலாம் செல்லும் சுக்கிரனால் இந்த 6 ராசிக்காரர்களின் செல்வம் உயரப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சுக்கிரன் 2022 அக்டோபர் 18 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து சொந்த ராசியான துலாம் ராசிக்கு சென்றார். அதுவும் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்லும் போது சூரியனுடன் இணைகிறார்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களில் சுக்கிரன் காதல், ஆடம்பரம், செல்வம், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்த சுக்கிரன் கிரகங்களில் மங்களகரமான கிரகமாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சுக்கிரன் 2022 அக்டோபர் 18 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து சொந்த ராசியான துலாம் ராசிக்கு சென்றார்.

அதுவும் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்லும் போது சூரியனுடன் இணைகிறார். தீபாவளிக்கு முன் சுக்கிரன் தனது சொந்த ராசிக்கு செல்வதால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமாகவே இருக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் வேலையில் வெற்றி பெறுவார்கள். வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முக்கியமாக பல வழிகளில் இருந்து பணம் வருவதற்கான வலுவான வாய்ப்புள்ளது.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் இருப்பதால், மிதுன ராசிக்காரர்கள் இந்த காலத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வருமானம் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயம் உண்டாகும். மார்கெட்டிங், ஆசிரியர், அரசியல் போன்ற துறையில் இருப்பவர்கள் சிறப்பான பலனைப் பெறுவார்கள். மொத்தத்தில் இக்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சியால் உங்களின் அனைத்து வேலையிலும் வெற்றி கிடைக்கும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். சுக்கிரனின் ஆசியால் வருமானம் அதிகரிக்கும். பல வழிகளில் இருந்து பணம் வரும். வாகனம், வீடு வாங்க திட்டமிடுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். எனவே இந்த பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். வருமானம் பெருகும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஊடகம் மற்றும் பேஷன் டிசைனிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளதால், கன்னி ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். இக்காலத்தில் அதிக பணத்தை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. முதலீடுகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். இக்காலத்தில் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் உள்ளார். எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி காலம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடுகள் செய்ய இது நல்ல காலம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications