Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
Shukra Gochar 2022: சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் நவம்பர் 11 வரை இந்த ராசிகளுக்கு சூப்பரா இருக்கப் போகுது!
ஜோதிடத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. இப்போது சொந்த ராசியான துலாம் ராசிக்கு சுக்கிரன் செல்வதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.
ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் கிரக பெயர்ச்சிகள் ஒருவரின் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடையது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும் மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். ஆனால் அந்த தாக்கம் நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ இருக்கலாம். இந்நிலையில் அக்டோபர் 18 ஆம் தேதி, அதாவது இன்று சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்.

ஜோதிடத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசகிளின் அதிபதி தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஆடம்பரம், காதல், தொழில், அழகு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். எனவே ஜோதிடத்தில் சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது. இப்போது சொந்த ராசியான துலாம் ராசிக்கு சுக்கிரன் செல்வதால் 12 ராசிக்காரர்களும் பெறும் பலன்கள் என்னவென்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் உங்கள் காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். சாதனைகளுக்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நற்பலன்கள் கிடைக்கும். நிறைய பொருளாதார நன்மைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் மகிழ்ச்சியான தருணங்களை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை காட்ட வேண்டும். வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். திருமணமானவர்கள் நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதனால் மற்றவர்களிடம் கடன் வாங்குவது பற்றி யோசிக்க நேரிடும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் பயணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் அற்புதமாக இருக்கும். உங்கள் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வலுவான நிதி வளர்ச்சியைக் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள். உங்களின் சந்தோஷம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். உங்களின் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். உங்களின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் எண்ணங்கள் வலுவாகும். நிதி நிலை மேம்படும். இக்காலத்தில் வாகனம், வீடு வாங்க திட்டமிடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் டென்சன் குறையும். வியாபாரத்தில் பெரிய வெற்றியைக் காண்பீர்கள். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். வெளிநாட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் செல்வம் அதிகரிக்கும். பணம் அதிகம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். முந்தைய முதலீடுகளால் நல்ல ஆதாயத்தைப் பெறுவீர்கள். தொழில் ரீதியாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேலைகள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். ஆனால் எதிரிகளிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள். திருமணமானவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் இக்காலத்தில் தங்கள் வாழ்க்கைத் துணையை எளிதில் கண்டறிவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்களின் பணி மேம்படும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகளின் நிதி நிலை மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கடின உழைப்பினால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இக்காலதில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வுக்கான வாய்ப்புள்ளது. வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலமானது நல்ல அதிர்ஷ்டமானதாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி ரீதியாக முன்பை விட சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் தாயுடனான உறவு முன்பை விட சிறப்பாக இருக்கும். ஆனால் உங்களின் தனிப்பட்ட செலவுகளை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பண உதவி கிடைக்கும். உங்களின் வசதிகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். வருமான ஆதாரங்கள் பெருகும். முதலீடுகளால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இக்காலத்தில் புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள்.



Click it and Unblock the Notifications