Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சிம்மம் செல்லும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரங்க ஆகஸ்ட் 31 முதல் பல பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்மம் செல்லும் சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
நவகிரகங்களில் சுக்கிரன் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் கிரகமாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை மிகவும் முக்கியம். ஏனெனில் அனைத்து விதமான செல்வங்களையும், சுகங்களையும் தரக்கூடியவர் தான் சுக்கிரன். சுக்கிரன் சாதகமான நிலையில் இருந்தால், வாழ்வில் அனைத்துவிதமான மகிழ்ச்சிகளும் கிடைக்கும். அதுவே பலவீனமான நிலையில் இருந்தால், வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஆசைகள் எதுவும் நிறைவேறாது. வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்காது.

தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி சூரியன் ஆளும் சிம்ம ராசிக்கு செல்கிறார். சிம்மம் செல்லும் சுக்கிரனின் தாக்கம் அனைத்து ராசியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிக்காரர்கள் சிம்மம் செல்லும் சுக்கிரனால் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சுக்கிரன் ரிஷப ராசியின் அதிபதி. இந்த சுக்கிரன் ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். சுக்கிரனின் நிலை இக்காலத்தில் மகிழ்ச்சியைக் குறைக்கும். செலவுகள் அதிகரிக்கும். ஷாப்பிங் செய்ய நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். வீட்டைப் புதுப்பிக்க செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிலும் அவசரத்தையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களையே பெறுவார்கள். பணியிடத்தில் உங்களுக்கு கொடுத்த பணிகளை முடிப்பதற்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்காமல் போகும். குடும்ப வாழ்க்கையில் உங்கள் தாயின் ஆதரவு கிடைக்கும். ஆனால் வேறு யாரும் உங்களுக்கு உதவி முன்வரமாட்டார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல தடைகளை சந்திப்பார்கள். இது இந்த ராசிக்காரர்களின் வேலையை மெதுவாக்கும் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலதிபராக இருந்தால், தொழிலில் அதிக பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்தால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு குறைவாக இருக்கும். மேலும் சுக்கிரன் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையையும் பாதிக்கும். இப்பெயர்ச்சியால் உங்கள் திருமண வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவார்கள். உங்களின் மகிழ்ச்சி குறையும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். குறிப்பாக இக்காலத்தில் உடல் சோர்வு மற்றும் சர்க்கரை நோய் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.



Click it and Unblock the Notifications