Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சிம்மம் செல்லும் சுக்கிரனால் ஆகஸ்ட் 31 முதல் இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
சிம்மம் செல்லும் சுக்கிரனால் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
நவகிரகங்கள் ஒவ்வொன்றும் சீரான இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன. கிரகங்கள் ராசியை மாற்றும் போது, அது ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின் படி, சுக்கிரன் 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் நிச்சயம் இருக்கும்.

சுக்கிரன் அழகு, ஆடம்பரம், திருமண வாழ்க்கை, நிதி வாழ்க்கை, செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிம்மம் செல்லும் சுக்கிரனால் 3 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகிறது. அந்த ராசிக்காரர்கள் யார்யார் மற்றும் எந்த மாதிரியான நற்பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் கடக ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தொழிலில் நல்ல வருமானத்துடன் வெற்றியைப் பெறுவார்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். தொழிலில் செய்யும் முதலீடுகள் நன்மையைத் தரும். இது திருமண வாழ்க்கையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் திடீர் பண வரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நற்செய்திகள் வரும்.

துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் பெரிய வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். இதனால் வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். ஊடகம் மற்றும் நடிப்பு துறையில் இருப்பவர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வீண் செலவுகள் மற்றும் நீதிமன்ற வழக்குகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகர்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் அமையும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

சுக்கிரனை வலுப்படுத்தும் பரிகாரங்கள்
சுக்கிரனால் சந்திக்கும் பிரச்சனைகளை நீக்கவும், சுக்கிரனை வலுப்படுத்தவும் உதவும் சில பரிகாரங்கள் பின்வருமாறு:
* சந்தனம், அரிசி, வெள்ளை நிற ஆடைகள், வெள்ளை நிற பூக்கள், வெள்ளி, நெய், தயிர், சர்க்கரை போன்றவற்றை ஒரு பெண்ணுக்கு தானம் செய்ய வேண்டும்.
* வைரம், புஷ்பராகம் போன்ற ரத்தினங்களை அணிவதால் சுக்கிரனை வலுப்படுத்தலாம்.
* சுக்கிரன் வலுப்பெற வெள்ளிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
* சுக்கிரனுக்கு வெள்ளை நிறம் பிடிக்கும். எனவே வெள்ளை நிற ஆடைகளை அணிவது நன்மை பயக்கும்.
* ஜாதகத்தில் சுக்கிரனை வலுப்படுத்த, குளிக்கும் போது நீரில் ஏலக்காயை சேர்த்து குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications