Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
Shukra Gochar August 2022: சுக்கிர பெயர்ச்சியால் ஆகஸ்ட் 31 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்த சிம்ம ராசியில் சுக்கிரன் சுமார் 23 நாட்கள் இருப்பார்.
ஜோதிடத்தில் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதி தான் சுக்கிரன். பொதுவாக சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்படம், மகிழ்ச்சி, அழகு, இளமை, பொருள் இன்பம், காதல் மற்றும் ரொமான்ஸைக் குறிக்கிறது. சுக்கிரனின் தாக்கத்தால் தான் ஒருவரது வாழ்க்கையில் பொருள் இன்பம், தாம்பத்திய சுகம், ஆடம்பரமான வாழ்க்கை, புகழ் போன்றவை கிடைக்கின்றன.

சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், அதனால் சில ராசிகளுக்கு நற்பலனும், சில ராசிகளுக்கு கெடுபலன்களும் கிடைக்கலாம். இந்நிலையில் 2022 ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு செல்கிறார். இந்த சிம்ம ராசியில் சுக்கிரன் சுமார் 23 நாட்கள் இருப்பார். ஆகவே சிம்மம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். ஆகவே மாணவர்களுக்கு இக்காலம் செழிப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். காதலர்கள் சில ஈகோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இக்காலகட்டத்தில் திருமணமாகாதவர்கள் சில நல்ல செய்தியைப் பெற வாய்ப்புள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இக்காலத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் புதிய விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். உங்களின் மகிழ்ச்சி சற்று குறையும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஷாப்பிங் செய்ய நிறைய பணத்தை செலவழிப்பீர்கள். இக்காலத்தில் வாகனத்தை ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று கலவையான பலன்களைப் பெறுவார்கள். உங்களின் பணிகளை முடிக்க மற்றவர்களின் ஆதரவு கிடைக்காமல் போகும். குடும்ப வாழ்க்கையில் உங்களின் தாயார் ஆதரவாக இருப்பார். ஆனால் மற்றவர்கள் யாரும் உங்களுக்கு உதவ முன்வரமாட்டார்கள். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது காயம் ஏற்பட வாய்ப்புள்ளதால், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் வாழ்க்கை மங்களகரமானதாக இருக்கும். தொழிலில் நல்ல லாபத்துடன் வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்வதால் நன்மை கிடைக்கும். திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பீர்கள். சமூக உறவுகள் வலுவடையும். சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடனான உறவுகள் கிடைக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் இக்காலத்தில் நீங்கும்.

கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்கள் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டால் அல்லது ஏதேனும் MNC இல் இருந்தால், முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் போட்டியில் கலந்திருந்தால், உங்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளால் வெற்றி பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வேலை மற்றும் வியாபாரத்தில் பெரும் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். ஊடகம் மற்றும் சினிமா சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்த காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வேலையில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் பணி பாராட்டப்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிகம் விரிவடையும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பல தடைகளை சந்திப்பீர்கள். உங்களின் வேலைகள் தாமதமாகும் மற்றும் சிக்கல்களை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் அதிக முதலீடு செய்வதைத் தவிர்க்க அறிவுறத்தப்படுகிறது. நண்பர்களுடன் சேர்ந்து ஏதேனும் புதிய விஷயங்களை செய்ய தொடங்கினால், இக்காலத்தில் சற்று அதிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். சேமிப்பு குறைவாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் மற்றவர்கள் தலையிடுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உடல் சோர்வு மற்றும் நீரிழிவு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன் தேடி வரும். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு இது நல்ல காலமாக இருக்கும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்களின் செயல்கள் அனைத்திலும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இக்காலத்தில் மிகவும் அன்பானவராக இருப்பீர்கள். உங்களின் ஆளுமை மேம்படும்.

மீனம்
மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் கலவையான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குறிப்பாக வயிறு பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் கண் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இக்காலத்தில் உங்கள் இமேஜை கெடுக்க பலர் முயற்சி செய்வார்கள். எனவே கவனமாக இருங்கள். பயணம் காரணமாக அதிக பணத்தை செலவழிக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications











