Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்..
Shukra Gochar 2022: சுக்கிர பெயர்ச்சியால் அடுத்த 23 நாட்கள் இந்த ராசிகாரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
சுக்கிரன் இதுவரை ரிஷப ராசியில் பயணித்து வந்தால், இந்நிலையில் 2022 ஜூலை 13 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறுகிறார் மற்றும் இந்த ராசியில் 23 நாட்கள் வரை இருந்து, பின் கடக ராசிக்கு மாற்றுவார்.
ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, ஆடம்பரம் மற்றும் காதல் ஆகியவற்றின் கிரகமாக கருதப்படுகிறது. இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், அவர்களின் வாழ்க்கையில் அனைத்துவிதமான மகிழ்ச்சியும் இருக்கும். அதே சமயம் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அவர்கள் சௌகரியத்திற்காக போராட வேண்டியிருக்கும்.

இத்தகைய சுக்கிரன் இதுவரை ரிஷப ராசியில் பயணித்து வந்தால், இந்நிலையில் 2022 ஜூலை 13 ஆம் தேதி, அதாவது இன்று ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறுகிறார் மற்றும் இந்த ராசியில் 23 நாட்கள் வரை இருந்து, பின் கடக ராசிக்கு மாற்றுவார். சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் 12 ராசிகளும் எந்த மாதிரியான பலன்களைப் பெறுவார்கள் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் தைரியம் அதிகரிக்கும். அதேப் போல் உங்களின் புரிதலும், பொறுமையும் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களில் வேலை பாராட்டைப் பெறும் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும். இக்காலத்தில் பல முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். வேலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. கார், நிலம், வீடு போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வதற்கு இது சாதகமான காலமாக இருக்கும். வணிக ரீதியாக சில சிக்கல்களை சந்திப்பீர்கள். ஆனால் பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் ஓரளவு லாபம் பெறுவார்கள். இக்காலத்தில் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதேப் போல் திருமண வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவார்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திப்பார்கள். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் அலர்ஜி பிரச்னையையும் சமாளிக்க வேண்டியிருக்கும்

கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தேவைப்பட்டால் மட்டும் செலவுகளை செய்யுங்கள். நிதி பரிவர்த்தனைகளுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் சிலரின் பகுத்தறிவற்ற நடத்தையை எதிர்கொள்வீர்கள் மற்றும் உறவினர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தொழில் ரீதியாக வியாபாரிகளுக்கு நல்ல நேரமாக இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் கடின உழைப்பு உங்களின் வருமானத்தில் புகழைக் கொண்டு வரும். இது உங்களின் தோல்விகளை சமன் செய்யும். வேலையில் சற்று குழப்பம் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான சிறு பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புக்கள் வரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இக்காலம் சாதகமாக இருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய திட்டத்தின் மூலம் வெற்றியையும், புகழையும் பெறுவீர்கள். இக்காலத்தில் உங்கள் தந்தையின் ஆதரவு உங்களின் பல விருப்பங்களை நிறைவேற்றக்கூடும். உங்கள் குடும்பம் மற்றும் துணையுடனான உங்கள் உறவு சிறப்பாக இருக்கும்.

துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. தொழிலில் பல புதிய வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். அதோடு அதிக லாபத்தையும் பெறுவீர்கள். எந்தவொரு வேலையிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு இருக்கும். ஆனால் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் உறவுகள் பாதிக்கப்படலாம். நிதி நீதியாக, இக்காலமானது உங்களை தவறான வழியில் பணம் சம்பாதிப்பதை நோக்கித் தள்ளும், இது பெரிய இழப்புகளுக்கு வழிவகுக்கும். ஆனால் தொழிலில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும். இதனால் உங்கள் ரகசிய எதிரிகளின் பொறாமை அதிகரிக்கும். உங்கள் திருமண வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் பணியிடத்தில் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். இக்காலத்தில் வேலைக்கு பதிலாக, பிறவற்றில் முன்னுரிமை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல வாய்ப்புகளால் வியாபாரத்தில் வளர்ச்சி பெறுவார்கள். உத்தியோகத்தில் நல்ல வருமான உயர்வு ஏற்பட்டு மனநிறைவை அடைவீர்கள்.

மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சிறு விஷயங்களுக்காக விவாதம் செய்வதைத் தவிர்த்து, பொறுமை காக்க முயற்சி செய்யுங்கள். நிதி ரீதியாக, இக்காலத்தில் கடன் வாங்குவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். வேலையை மாற்றுவதற்கு நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இல்லை. காதல் உறவில் தவறான புரிதல்கள் ஏற்பட்டு பிரச்சனையை சந்திக்கலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இப்பெயர்ச்சி காலம் கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இல்லற வாழ்வில் அமைதியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு சாதகமான காலம். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். உங்கள் குழந்தைகளின் செயல்களால் உங்களின் மரியாதை அதிகரிக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள்.

மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் காதவிப்பவர்கள் சில சவால்களை சந்திக்க நேரிடும். நிலம், கட்டிடம், வாகனங்கள் வாங்குவதால் ஆதாயம் கிடைக்கும். வேலை செய்பவர்கள் இந்த ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் நிச்சயம் சுப பலன்களைப் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களுக்கு இது நல்ல காலம் அல்ல. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது.



Click it and Unblock the Notifications