Just In
- 4 hrs ago
உங்க குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்களை 50% தள்ளுபடி விலையில் இப்போதே அமேசானில் வாங்குங்கள்!
- 4 hrs ago
இந்த 7 விஷயம் கனவில் வந்தால் சீக்கிரம் பணக்காரர் ஆக போறீங்கன்னு அர்த்தம்...
- 5 hrs ago
உங்க ஆடையில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை இந்த முறைகளின் மூலம் இருந்த இடம் தெரியாமல் செய்யலாமாம்...!
- 5 hrs ago
எப்பவும் நீங்க அழகாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்க இந்த 5 விஷயங்கள பண்ணா போதுமாம் தெரியுமா?
Don't Miss
- Movies
விரைவில் ஓய்வுபெற போகிறேன்..பொன்னியின் செல்வன் விழாவில் விக்ரம் சொன்ன அதிர்ச்சி தகவல்!
- News
செல்போனில் ‘100’ போட்டோ! தோழிகளை ‘அந்த’ வேலைக்கு அழைத்த குயின் ‘ஸ்வேதா’! திடுக்கிட்ட திருப்பூர்..!
- Sports
பத்தே பந்து 3 விக்கெட்.. தென்னாப்பிரிக்கா அசுர வேக பந்துவீச்சு.. சிக்கி சின்னா பின்னமான இங்கிலாந்து
- Finance
870 பேர் பணி நீக்கம் செய்யப்படலாம்.. கவலையில் வேஃபேர் ஊழியர்கள்..!
- Automobiles
நாளைக்கு சொல்வதாக இருந்த தகவல் இப்பவே வெளியானது!.. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் காரின் விலை விபரம் வெளியீடு!
- Technology
பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் Xiaomi நோட்புக் ப்ரோ 120ஜி லேப்டாப்.!
- Travel
உலக புகைப்பட தினம் 2022: மாயஜால போட்டோக்களை எடுக்க நீங்கள் கட்டாயம் இந்த இடங்களுக்கு செல்ல வேண்டும்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
சுக்கிர பெயர்ச்சியால் ஆகஸ்ட் 31 வரை இந்த ராசிக்காரங்க கொஞ்சம் நிறைய பிரச்சனையை சந்திப்பாங்களாம்...
ஜோதிடத்தில், காதல், ஆடம்பரம் மற்றும் பொருள் இன்பங்களின் காரக கிரகமாக கருதப்படுவது சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு சுப கிரகமாக இருந்தாலும், அதன் நிலை ஒருவரது ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால், அந்நபர் நற்பலன்களை விட கெடுபலன்களை அதிகம் சந்திக்க நேரிடும்.
இந்த சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் 2022 ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசிக்கு காலை 05.20 மணிக்கு சென்று, அந்த ராசியில் ஆகஸ்ட் 31 வரை இருந்து பின் சிம்ம ராசிக்கு செல்வார். சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருந்தாலும், சில ராசிக்காரர்கள் நிதி மற்றும் காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கையில் சிறு மாற்றம் ஏற்படும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். எனவே சிறு விஷயங்களும் இந்த ராசிக்காரர்களை தொந்தரவு செய்யும். மேலும் இக்காலத்தில் உங்கள் அன்புக்குரியவர்களுடனான உறவில் சில சிக்கல்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எந்த ஒரு பண அபாயத்தையும் எடுக்காதீர்கள். பணத்தை முதலீடு செய்ய முடிவு செய்தால், புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். முடிந்தால், இக்காலத்தில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருங்கள்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் குடும்ப வாழ்க்கை சற்று கடினமாக இருக்கும். இக்காலத்தில் பெரியோர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். குடும்பத்தில் சில சுப காரியங்களை ஏற்பாடு செய்ய முயற்சி செய்யுங்கள். மேலும் பணிபுரிபவர்கள் மற்றும் வணிகர்கள் பல சவால்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், தனுசு ராசிக்காரர்கள் கடும் போட்டியை சந்திக்க நேரிடும். யாரிடமும் கடன் வாங்க வேண்டாம். இல்லாவிட்டால் உங்கள் கஷ்டங்கள் அதிகரிக்கும். பண இழப்பு பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை மிகவும் கவனமாக செய்ய வேண்டும். மாணவர்கள் படிப்பில் சில இடையூறுகளை சந்திக்கலாம்.

கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் வாழ்வில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த முயலுங்கள். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.