Just In
- 9 min ago
கத்தரிக்காய் சாப்பிடுறவங்களா நீங்க? அப்ப உங்களுக்கான மகிழ்ச்சியான செய்திதான் இது... அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- 6 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 21 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 23 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
Don't Miss
- Movies
கவர்ச்சியில் எல்லை மீறும் பூனம் பாஜ்வா.. பட வாய்ப்பை வாங்கியே ஆகணுமாம்!
- News
ஒளிமயமான எதிர்காலம்..’இது’ தான் எனக்கு பரிசாக வேண்டும்! பிறந்தநாளுக்கு சசிகலா வைத்த முக்கிய கோரிக்கை
- Automobiles
இ-கார் உற்பத்திக்காக மஹிந்திரா தயார் செய்திருக்கும் புதிய தளம்... வேற லெவல் வாகனங்களை இதுல தயாரிக்க போறாங்க!
- Technology
இரண்டு திட்டங்களுக்கு 75ஜிபி வரை எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்கிய வோடபோன் ஐடியா.!
- Finance
தங்கம் விலை சரிவு.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்?
- Sports
காலையிலேயே அதிர்ச்சி செய்தி..இந்திய கால்பந்து சம்மேளனத்துக்கு தடை.. இனி இந்திய அணி பங்கேற்க முடியுமா
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
சுக்கிர பெயர்ச்சியால் ஆகஸ்ட் மாதம் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது...
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் சுக்கிரன் காதல், ஆடம்பரம், அழகு, மகிழ்ச்சி போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறது. பொதுவாக சுக்கிரன் நன்மை தரும் சுபகிரகமாகும். ஆனால் சுக்கிரனின் நிலை மோசமாக இருந்தால், காதல் வாழ்க்கை, மகிழ்ச்சி, வசதி போன்றவற்றில் சிரமங்களை சந்திக்க நேரிடும். சுக்கிரன் சீரான இடைவெளியில் ராசியை மாற்றும்.
தற்போது மிதுன ராசியில் சுக்கிரன் பயணித்து வருகிறார். இந்த சுக்கிரன் 2022 ஆகஸ்ட் 07 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த கடக ராசியில் சுக்கிரன் 2022 ஆகஸ்ட் 31 வரை இருந்து, பின் சிம்ம ராசிக்கு செல்கிறார். கடக ராசிக்கு செல்லும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு நிறைய நற்பலன்கள் கிடைக்கவுள்ளன. அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இக்காலம் நன்றாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலம் உங்களுக்கு இனிமையாதானதாக இருக்கும். மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்கும். ஆரோக்கியம் நிலையானதாக இருக்கும்.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் நல்ல வெற்றிகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் அரசியல் துறையில் இருப்பவர்கள் நல்ல பதவியைப் பெற வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கலாம். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும், ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பணத்தை சமூகப் பணிகளில் பயன்படுத்துவீர்கள். வணிகம் மற்றும் கூட்டாண்மைக்கு சாதகமான காலமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் எழலாம். ஆனால் அதுவும் சரியாகிவிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உடல்நல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். தம்பதியர்களுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் திருமண வாழ்வில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். பணிபுரிபவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. மூதாதையர் சொத்துக்களில் இருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சிக்கிய பணம் கிடைக்கு. சமீபத்திய முதலீடுகளில் இருந்து நல்ல பலனைப் பெறுவீர்கள்.