Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
Shukra Gochar 2022: சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் 12 ராசிக்கும் எப்படி இருக்கப் போகுது தெரியுமா?
சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஆகஸ்ட் 07 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நவகிரகங்களில் சுக்கிரன் ஆடம்பரம், மகிழ்ச்சி, அன்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக, பொருள் வசதி நிறைந்திருக்கும். அதுவே மோசமான நிலையில் இருந்தால், வாழ்க்கை சற்று சுமாராகவே இருக்கும். எனவே சுக்கிரனின் ராசி மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அந்த வகையில் சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2022 ஆகஸ்ட் 07 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசிக்கு செல்கிறார். இந்த சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது கடகம் செல்லும் சுக்கிரனால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். பணியிடத்தில் உங்கள் வேலை பாராட்டப்படும். மேலும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆனால் இக்காலத்தில் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் வியாபாரிகள் நிதி ரீதியாக நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். கல்வித் துறையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மிதுனம்
மிதுன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். குறிப்பாக திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் வரலாம். இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். பணியிடத்தில் நல்ல பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகரிக்கலாம். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும். வணிகர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்வில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வெளிநாட்டில் இருப்பவர்கள் சிறப்பாக இருப்பார்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இக்காலத்தில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் இனிமை நிறைந்திருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கன்னி
கன்னி ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் வாழ்வில் மகிழ்ச்சி அதிகம் நிறைந்திருக்கும். தம்பதியர்ளுக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் எந்த துறையில் இருந்தாலும் வெற்றி பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
துலாம் ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் பணிபுரிபவர்கள் பணியிடத்தில் தங்களின் சிறப்பான வேலையால் பாராட்டப்படுவார்கள். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எந்த துறையில் வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் குடும்ப வாழ்வில் சில சிரமங்கள் இருக்கும். ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாட்டு உறவுகளால் நன்மைகளைப் பெறுவீர்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும். நாள்பட்ட நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

தனுசு
தனுசு ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எதிரிகள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் அவர்களால் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது. கடன்கள் தொந்தரவு செய்யும். சில நேரங்களில் திடீர் இழப்புகளை சந்திக்க நேரிடும். அரசியலில் இருப்பவர்களுக்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு எல்லா வகையிலும் மோசமானதாக இருக்கும். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் தொழில் துறையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தை வழியில் இருந்து நிதி உதவி கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் எந்த துறையில் இருந்தாலும் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அதே வேளையில் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் ரகசிய எதிரிகள் உங்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கலாம். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் நிறைந்திருக்கும். செலவுகள் அதிகரிக்கும். எனவே தேவையற்ற செலவுகளை கவனித்து கட்டுப்படுத்துங்கள். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.

மீனம்
மீன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் புதிய தொழிலில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு இது நல்ல காலம். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications