Just In
- 3 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாம்...இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணுமாம்!
- 5 hrs ago
ஈரோடு சிக்கன் சிந்தாமணி
- 10 hrs ago
வார ராசிபலன் (26.06.2022-02.07.2022) - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- 11 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
Don't Miss
- Movies
இதுவரை நான் நடிக்காத கேரக்டர்.. அட்லி படம் குறித்து மெய்சிலிர்த்த ஷாருக்கான்!
- News
அடேங்கப்பா! அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்கும் பாஜக - மகா. காங்கிரஸ் தலைவர் புகார்
- Finance
ஜூலை மாதம் மட்டும் வங்கிகள் 14 நாள் விடுமுறை.. தமிழ்நாட்டில் எத்தனை நாள் லீவ்..?!
- Technology
ஆப்பிள் இலவசமாக AirPods வழங்கும் Back to School ஆஃபர்.. என்ன செய்தால் 'இது' இலவசமாக கிடைக்கும்?
- Sports
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு.. இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன்.. பிசிசிஐ பரிசீலினை
- Automobiles
வெறும் 2 மாதங்களில் ஓலாவின் வருவாய் ரூ.500 கோடிக்கு மேல்!! ஆண்டு முடிவிற்குள் ரூ.7,800 கோடியை எட்ட டார்க்கெட்!
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
மேஷம் செல்லும் சுக்கிரனால் இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
நவகிரகங்களில் பொருள் மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, காதல், கவர்ச்சி ஆகியவற்றின் காரணியான சுக்கிரன் மே 23 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார். மீனத்தில் இருந்து வெளிவந்து மேஷ ராசியில் நுழையும் சுக்கிரன், 2022 ஜூன் 18 ஆம் தேதி வரை இருந்து பின், சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார். சுக்கிரன் மேஷ ராசிக்கு செல்வதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறு பாதிப்பு ஏற்படும். ஆனால் இந்த சுக்கிர பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களின் கையில் அதிக பணம் சேரப் போகிறது மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது 2022 மே 23 ஆம் தேதி மேஷம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகிறது என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நற்பலன்களை அள்ளி வழங்க போகிறார். பணிபுரிபவர்கள் பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான காதல் உறவு வலுவாக இருக்கும். அதேப்போல் காதலிப்பவர்களின் வாழ்வில் காதல் அதிகரிக்கும்.

மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், மிதுன ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். மே 23 முதல் ஜூன் 18 வரை, இநத ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இக்காலத்தில் புதிய வருமான ஆதாரங்களால் நிதி நிலைமையானது முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். இக்காலத்தில் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அன்பு நிறைந்ததாகவும் இருக்கும்.

சிம்மம்
சுக்கிர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். வேலையில் உங்கள் புகழ் அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இக்காலத்தில் பதவி உயர்வு அல்லது விரும்பிய இடத்திற்கு மாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது. வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சொத்து அல்லது முதலீடுகளால் லாபம் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது, வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். புதிய வாகனம் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு, அது நடக்க வாய்ப்புள்ளது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் காதல் அதிகரித்து, உறவு இன்னும் வலுவாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மேஷம் செல்லும் சுக்கிரனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஃபேஷன், கவர்ச்சி அல்லது மீடியாவில் தொடர்புடையவர்களுக்கு இது சாதகமான காலம். இக்காலத்தில் நீங்கள் உங்கள் நடத்தை மற்றும் பேச்சின் மூலம் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவீர்கள். உடன்பிறப்புகளுடனான உறவு வலுவாகும். இக்காலத்தில் பயணம் செய்ய வாய்ப்புள்ளது.