Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
2 மாதங்களுக்கு பின் விருச்சிகத்தில் உதயமாகும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
சுக்கிரன் நவம்பர் 20 ஆம் தேதி உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால் சில ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக மற்றும் லாபகரமானதாக இருக்கும்.
ஜோதிடத்தில் சுக்கிரன் அழகு, காதல், ஆடம்பரம், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்த சுக்கிரன் ராசியை மாற்றும் போது அல்லது அதன் இயக்கத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அது ஒருவரது பொருளாதார நிலை, காதல் வாழ்க்கை போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சுக்கிரன் நவம்பர் 11 ஆம் தேதி முதல் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். ஏற்கனவே சுக்கிரன் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் அஸ்தமனமானார்.

இந்நிலையில் சுக்கிரன் நவம்பர் 20 ஆம் தேதி உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால் சில ராசிக்காரர்களுக்கு இக்காலம் அதிர்ஷ்டமானதாக மற்றும் லாபகரமானதாக இருக்கும். இப்போது விருச்சிக ராசியில் சுக்கிரன் உதயமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
சுக்கிரன் 7 ஆவது வீட்டில் உதயமாகிறார். இதனால் இக்காலத்தில் நோய்களில் இருந்து விடுதலை பெறுவீர்கள். இதுவரை மருத்துவ செலவுகளை அதிகம் சந்தித்து வந்தால், இக்காலத்தில் இருந்து அந்த செலவுகள் குறையும். சிக்கிய பணம் இக்காலத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும். ஆராய்ச்சி துறையில் ஈடுபடுபவர்களுக்கு இக்காலம் அற்புதமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் நல்ல பலனைப் பெறுவார்கள்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகிறார். இது குழந்தை மற்றும் காதல் திருமண வாழ்க்கையின் வீடாகும். எனவே இக்காலத்தில் குழந்தைகளிடம் இருந்து சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலில் சாதகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

மகரம்
மகர ராசியின் அதிபதி சனி. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் நல்ல நட்புறவு உள்ளது. எனவே சுக்கிரன் உதயமாவதால் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். மறுபுறம், புதிய தொழில் தொடங்கினால், அதில் நற்பலன்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications