For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுக்கிர வக்ர பெயர்ச்சியால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?

டிசம்பர் 19 ஆம் தேதி சுக்கிர வக்ர பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

|

நவகிரகங்களில் வெள்ளி/சுக்கிரன் ஒருவருக்கு வசதி, வாய்ப்பு, இல்லற சுகம், சுக போகம், திருமண வாழ்க்கை மகிழ்ச்சி உள்ளிட்டவற்றைத் தரக்கூடியவர். ஆனால் இவை அனைத்துமே ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பாக கிடைக்கும் அதுவே மோசமான நிலையில் இருந்தால் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும். இத்தகைய சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதி.

Venus Retrograde In Capricorn On 19 December 2021 Effects on Zodiac Signs in Tamil

சுக்கிரன் தற்போது நட்பு ராசியான மகர ராசியில் இருக்கிறார். இவர் டிசம்பர் 19 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி நகரத் தொடங்குகிறார். பின் டிசம்பர் 30 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிலையில் மாறி பயணிப்பார். இப்படி சுக்கிரன் வக்ர பெயர்ச்சி ஆவதால், அது ஒவ்வொரு ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும். கீழே டிசம்பர் 19 ஆம் தேதி சுக்கிர வக்ர பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டும் மற்றும் உங்கள் இலக்குகளை அடைய கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இக்காலத்தில் வேலையை மாற்றும் எண்ணம் எழலாம். பணியிடத்தில் பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். தொழில் தொடங்க சாதகமான காலம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும். காதலிப்பவர்களுக்கு மகிழ்ச்சியான காலமாக இருக்கும். திருமணமாகாதவர்கள் துணையை சந்திக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், சுக்ர வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வழங்கும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், இக்காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரனின் அருளால் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்படும். இக்காலத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சமூகத்தில் மற்றவர்களின் இதயங்களை வெல்வீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனையைக் காணலாம்.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசியின் 8 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், இக்காலத்தில் உங்களின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்காது என்பதை எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களின் நிலையை நிலையாக வைத்துக் கொள்ள கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், நீங்கள் லாபகரமான முடிவுகளை எதிர்பார்க்கலாம். இருப்பினும், எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும் அல்லது ஒரு நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. முதலீடு செய்யும் முன் நன்கு யோசித்துக் கொள்ளுங்கள். உங்கள் வியாபாரம் சீராக நடக்கும் என்றாலும், பெரிய லாபம் அல்லது லாபத்தை எதிர்பார்க்காதீர்கள். இக்காலம் மாணவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.

கடகம்

கடகம்

கடக ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், திருமண சிறப்பான தாக்கம் காணப்படும். உங்களைச் சுற்றி ஆரோக்கியமான சூழ்நிலை இருக்கும். நீங்கள் உங்கள் துணையுடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நீண்ட காலமாக உங்கள் துணையுடன் இருந்த பிரச்சனைகளுக்கு இக்காலத்தில் தீர்வு காண முயற்சிப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடின உழைப்பின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். இக்காலம் உங்களுக்கு சவாலானதாக இருந்தாலும், வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகளை இக்காலத்தில் எடுக்காதீர்கள். இது உங்களை பின்னுக்கு தள்ளக்கூடும். உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல்நிலையில் கவனமாக இருக்க வேண்டும்.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசியின் 6 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், சில உடல்நல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். எனவே ஆரோக்கிய விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். பணிபுரிபவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பணியிடத்தில் உங்கள் எதிரிகள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள். நிதி நிலைமை சற்று பலவீனமாக இருக்கும். கட்டுப்பாடற்ற செலவுகள் உங்கள் நிதி நிலையை குலைக்கலாம். இக்காலம் உங்கள் குழந்தைகளுக்கு சாதகமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், நீங்கள் சில வாய்ப்புக்களையும், சவால்களையும் சந்திப்பீர்கள். ஒருபுறம் வேலையில் முன்னேற்றம் அடையும் பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இது சாதகமான காலம். இருப்பினும் தற்போதைய பணியிடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் பிரச்சனைகளால் வேலையை இழக்க நேரிட வாய்ப்புள்ளது. உங்களின் செலவுகள் இக்காலத்தில் அதிகரிக்கும். இதனால் ஆரம்பத்தில் சில சிக்கல்களை சந்தித்தாலும், பின் விருப்பப்படி செலவழிக்க போதுமான பணம் கிடைக்கும். உங்கள் மனைவி பணியிடத்தில் நல்ல முடிவுகளை பெறுவார்கள்.

துலாம்

துலாம்

துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். பொருள் வசதிகள் விரிவடையும் மற்றும் உங்கள் தாயிடம் நீங்கள் அதிக பாசத்துடன் இருப்பீர்கள். உங்கள் வீட்டிற்கு ஆடம்பரமான மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்க பணத்தைச் செலவிடுவீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் மன திருப்தியுடன் இருப்பீர்கள். இக்காலத்தில் உங்கள் குடும்ப விஷயங்களில் பிஸியாக இருப்பதால் உங்கள் வேலையில் தேவையான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். குடும்ப வருமானம் அதிகரிக்கும். இக்காலத்தில் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 3 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ஈகோ உறவுகளுக்கு இடையில் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அது உங்களை மோசமாக பாதிக்கும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த காலகட்டத்தில் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும். உடன் பணிபுரிபவர்கள் நம்பாதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களை ஏமாற்ற முயற்சிப்பதால், கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். யாரையும் தவறாகப் பேசாதீர்கள். இந்த காலத்தில் உங்கள் நடத்தை ஏற்ற இறக்கமாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையில் சமநிலையை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் மற்றும் உங்கள் எதிர்காலத் திட்டங்களில் கவனம் செலுத்த முயற்சி செய்யுங்கள், இது உங்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு உதவியாக இருக்கும்.

தனுசு

தனுசு

தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், இது ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தும். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். நீங்கள் கடன் கொடுத்த இடத்தில் இருந்து, பணத்தை திரும்ப பெற வாய்ப்புள்ளது. இதனால் நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றும் சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். நீங்கள் திருமணமானவராக இருந்தால், நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு நல்ல காதலுணர்வை அனுபவிப்பீர்கள். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பணியிடத்தில் உள்ள உங்கள் உயர் அதிகாரிகள் உங்களை நம்புவதால், பணியிடத்தில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீதிமன்ற வழக்குகளின் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், இக்காலம் மிகவும் முக்கியமானதாக மற்றும் சாகமானதாக இருக்கும். உங்களின் வேலையை நேர்மறையாக முடிப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். வணிகம் விரிவடையும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் படைப்பாற்றல், டிசைனிங், கலை போன்ற துறைகளுடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த காலம் இனிமையானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நீங்கள் ஒரு இனிமையான நேரத்தைப் பெறுவீர்கள். மேலும் இந்த நேரத்தை நீங்கள் சிறப்பாகப் பயன்படுத்துவீர்கள்.

கும்பம்

கும்பம்

கும்ப ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், இது சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. சுக்கிரனின் வக்ர நிலையால் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியம் மற்றும் நிதி விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கக்கூடும் மற்றும் ஆடம்பரத்திற்காக செலவுகளை செய்வீர்கள். மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் பயணம் மேற்கொள்ள நேரிடலாம் மற்றும் நீண்ட பயணத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்களுக்கு செலவுகள் மட்டுமின்றி வருமான ஆதாரங்களும் அதிகரிக்கும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். இக்காலத்தில் நிலம் வாங்கும் வாய்ப்புள்ளது.

மீனம்

மீனம்

மீன ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ர நிலை அடைவதால், இக்காலத்தில் நிறைய பணத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும் மற்றும் மிகவும் பிரபலமாவீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையைப் பெறலாம். காதல் உறவில் இருப்பவர்கள், திருமணம் செய்ய மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயம் மற்றும் மூதாதையர் சொத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இக்காலத்தில் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Venus Retrograde In Capricorn On 19 December 2021 Effects on Zodiac Signs in Tamil

Shukra Rashi Parivartan in Makara Rashi december 2021: Venus Retrograde In Capricorn Effects on Zodiac Signs in tamil: The Venus Retrograde In Capricorn will take place on 19 December 2021. Learn about remedies to perform in tamil.
Story first published: Saturday, December 18, 2021, 15:25 [IST]
Desktop Bottom Promotion