Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் அடுத்த 3 மாதம் இந்த 8 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
செப்டம்பர் மாதம் முழுவதுமாக சுக்கிரன் சூரியனுடன் இணைந்தே பயணிக்கிறார். அதில் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்மதனமாகிறார். இந்நிலையில் டிசம்பர் 02 ஆம் தேதி வரை இருப்பார்.
செப்டம்பர் மாதம் சுக்கிரனுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த மாதத்தில் சுக்கிரன் அஸ்தமனமாகிறார் மற்றும் ராசி மாற்றம் செய்து சூரியனுடன் சேர்ந்து பயணிக்கிறார். சொல்லப்போனால் செப்டம்பர் மாதம் முழுவதுமாக சுக்கிரன் சூரியனுடன் இணைந்தே பயணிக்கிறார். அதில் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்மதனமாகிறார். இந்நிலையில் டிசம்பர் 02 ஆம் தேதி வரை இருப்பார்.

சுக்கிரன் என்ன தான் சுப கிரகமாக இருந்தாலும், எந்த ஒரு கிரகமும் அஸ்தமன நிலையில் பலவீனமாகவே இருக்கும். இருப்பினும், சுக்கிரன் அஸ்தமனத்தால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இப்போது சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்
சுக்கிர அஸ்மதனத்தால், மேஷ ராசிக்காரர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். இருப்பினும் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும். வீட்டுச் சூழல் அமைதியாகவும், சந்தோஷம் நிறைந்திருக்கும் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். எனவே சுக்கிரன் அஸ்தனமானாலும் ரிஷப ராசிக்காரர்களின் மீது அன்பு இருக்கும். இதனால் வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு வலுபெறும். இக்காலத்தில் குடும்பத்தினருடன் நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ளது.

மிதுனம்
சுக்கிரன் அஸ்தமனமாவதால், மிதுன ராசிக்காரர்களுக்கு ஆடம்பர செலவுகளை செய்ய வைப்பார். மேலும் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். திடீர் பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதிய நபர்களை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்களின் கவர்ச்சிகரமான ஆளுமை இக்காலத்தில் மற்றவர்கள் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வார்கள்.

துலாம்
துலாம் ராசியின் அதிபதியும் சுக்கிரன் ஆவார். எனவே சுக்கிர அஸ்தமன காலமானது இந்த ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஏனெனில் இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். எங்கும் பாராட்டைப் பெறுவீர்கள். உங்களின் வசதிகள் பெருகும். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். முக்கியமாக வருமானம் அதிகரித்து, நிதி நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிர அஸ்தமனத்தால் வாழ்வில் சுகங்கள் அதிகரிக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இக்காலத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், வாழ்க்கைத் துணையின் கருத்தைக் கேட்ட பிறகு எடுப்பது நல்லது.

மகரம்
சுக்கிர அஸ்தமன காலமானது மகர ராசிக்காரர்களுக்கு பொன்னான காலமாக இருக்கும். இக்கால கட்டத்தில் உறவுகள் மேம்படும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்கு லாபகரமானதாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சி பெருகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிர அஸ்தமன காலத்தில் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். குறிப்பாக காதல் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். முன்பை விட இக்காலத்தில் உறவு வலுவடையும்.



Click it and Unblock the Notifications