For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Shukra Asta 2022: சிம்மத்தில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் இந்த ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...

2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாகிறார். இந்நிலையில் 2022 டிசம்பர் 02 வரை இருப்பார். சுக்கிர அஸ்தமனம் என்பது சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் போதான காலமாகும்.

|

செப்டம்பர் மாதம் சுக்கிரனுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இம்மாதத்தில் சுக்கிரன் சிம்மத்தில் அஸ்தமனமாகி, பின் கன்னி ராசிக்கு செல்கிறார். ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பரம், மகிழ்ச்சி, செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்நிலையில் சுக்கிரனின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது, அது ஒருவரின் ஆடம்பர வாழ்க்கை, காதல் வாழ்க்கையை கண்டிப்பாக பாதிக்கும்.

Shukra Asta 2022 Venus Combust in Leo on 15 September 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

அந்த வகையில் 2022 செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாகிறார். இந்நிலையில் 2022 டிசம்பர் 02 வரை இருப்பார். சுக்கிர அஸ்தமனம் என்பது சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் போதான காலமாகும். இக்காலத்தில் சூரியனின் தாக்கத்தால் சுக்கிரன் சில நாட்களுக்கு பலவீனமாக இருப்பார். இதனால் சுக்கிரனின் நற்பலன்கள் குறையும். இப்போது சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

சுக்கிரன் அஸ்தமனமாவதால், மேஷ ராசிக்காரர்கள் சில இடையூறுகளைச் சந்தித்து நல்ல பலன்களை அடைவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் கூடும். நல்ல பணம் சம்பாதிப்பதிலும், உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பேணுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நிதி ரீதியாக, நல்ல பணத்தை சம்பாதிப்பீர்கள். ஆனால் அதை திறம்பட பயன்படுத்த முடியாது. உறவுகளைப் பொறுத்தவரை, உங்கள் வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கண் எரிச்சல்களால் பாதிக்கப்படலாம்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரன் அஸ்தமனமாவதால், ரிஷப ராசிக்காரர்கள் குடும்ப பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். இக்காலத்தில் கடன் வாங்குவதற்கான சூழ்நிலை உருவாகலாம். குடும்பத்தில் சில தொல்லைகளை சந்திக்க நேரிடும். உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் பணத்தை செலவிடுவீர்கள்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் அஸ்தமனமாவதால் மிதுன ராசிக்காரர்கள் தொழில் மற்றும் ஆன்மீக நோக்கங்களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும். உங்கள் முயற்சிகளுக்கான முடிவுகளைப் பெறுவதில் சில தாமதங்களை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக, சவால்கள் நிறைந்ததாக இருக்கும். வணிகர்களுக்கு கலவையானதாக இருக்கும். நிதி ரீதியாக, சிறப்பாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதே வேளையில் சிறப்பாக சேமிப்பதற்கான மிதமான வாய்ப்புகள் இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சோர்வால் அவதிப்படுவீர்கள் என்பதால் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

கடகம்

சுக்கிரன் அஸ்தமனமாவதால், கடக ராசிக்காரர்கள் சொத்துக்களை வாங்குதல் அல்லது முதலீடு செய்வதன் மூலம் ஆதாயம் பெறலாம். பல்வேறு ஆதாரங்களில் இருந்து அதிக பணம் சம்பாதிக்கும் ஆசை எழலாம். வேலை காரணமாக சிறு பயணங்களை மேற்கொள்வீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் வாக்குவாதம் ஏற்படலாம் என்பதால் சற்று கவனமாக இருங்கள். வணிகர்கள் லாபத்தைப் பெறுவார்கள். ஆனால் அது விரும்பிய அளவுக்கு இருக்காது. நிதி ரீதியாக நன்றாக இருக்கும். ஆனால் வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொள்வார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் எரிச்சலால் பாதிக்கப்படலாம்.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் அஸ்தமனமாவதால், சிம்ம ராசிக்காரங்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான உறுதியை பெறுவார்கள். தொழில் ரீதியாக, வெளிநாட்டில் புதிய வேலை வாய்ப்பைப் பெறலாம். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவதற்கு தேவையான இலக்கை அடைய முடியாமல் போகலாம். ஆனால் வியாபாரத்தில் தற்போதைய சூழ்நிலையை மேம்படுத்தி நல்ல முடிவுகளை பெற முடியும். நிதி ரீதியாக, மிதமான பணம் சம்பாதிப்பீர்கள். அலட்சியத்தால் பணத்தை இழக்க நேரிடும். குடும்பத்தில், உடன்பிறந்தவர்களுடன் சில உறவுச் சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது.

கன்னி

கன்னி

சுக்கிர அஸ்தமனத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு இது துரதிர்ஷ்டவசமான காலமாக இருக்கும். உங்கள் போட்டியாளர்கள் உங்களுக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்யலாம். ஆனால் அவற்றை வெற்றிகரமாக சமாளிப்பதன் மூலம் நீங்கள் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். நீங்கள் ஒரு நிலையான நிதி வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினால், திட்டமிட்டு செலவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்காமல் போகும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதிக கடன்களை சந்திக்க நேரிடலாம். புதிய முதலீடுகள் போன்ற எந்த முக்கிய முடிவுகளும் நல்ல லாபத்தைத் தராது. குடும்ப உறுப்பினர்களுடன் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

துலாம்

துலாம்

சுக்கிரன் அஸ்தமனமாவதால், துலாம் ராசிக்காரர்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வியாபாரிகள் மெதுவாக லாபத்தைப் பெறுவார்கள். நல்ல பண வரவுடன் செலவுகளும் இருக்கும். உறவுகளில் படிப்படியாக மகிழ்ச்சியைக் காண்பார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, பெரிய பிரச்சனைகள் எதுவும் இருக்காது. நீங்கள் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வணிகர்கள் மிக அதிகமாகவோ அல்லது குறைவாகவோ லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் மற்றும் தோல் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிகம்

சுக்கிர அஸ்தமனத்தால், விருச்சிக ராசிக்காரர்கள் வேலையில் சுமாரான முடிவுகளைப் பெறுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெற முடியாமல் போகும். வாழ்க்கைத் துணையுடன் சில ஈகோ தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. தற்போதைய வேலையில் நீங்கள் செய்யும் பணிக்கு தேவையான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். இது உங்களை வருத்தமடையச் செய்யும். உடன் பணிபுரிபவர்களுடன் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வணிகத்தைப் பொறுத்தவரை, கடுமையான சவால்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். புரிதல் இல்லாததால் உங்கள் உறவில் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, எந்த ஒரு பெரிய பிரச்சனையும் தொந்தரவு செய்யாது.

தனுசு

தனுசு

சுக்கிரன் அஸ்தமனமாவதால், தனுசு ராசிக்காரர்களுக்கு வேலையில் நற்பலன்கள் தாமதமாகலாம். வியாபாரத்தில் மிதமான லாபம் மட்டுமே கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் ஈகோ தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உடல் சூடு தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பீர்கள். இந்த நேரத்தில், கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு நல்ல அதிசயங்களைச் செய்யும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் வேலையில் தடைகளை சந்திக்க நேரிடும். இடமாற்றத்தால் வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வியாபாரத்தில் இருந்தால், லாபம், நஷ்டம் என இரண்டையும் சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, உங்கள் குடும்பம் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் கவலைப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண்களை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் உத்தியோகத்தில் வெற்றி பெறுவார்கள். ஆனால் உடன் பணிபுரிபவர்களால் சில தடைகள் வரலாம். பணத்தைப் பொறுத்தவரை, செலவுகள் மற்றும் வரவுகள் என இரண்டையும் சந்திக்க நேரிடும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். வேலையைப் பொறுத்தவரை, வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புள்ளது. வணிகத்தில் இருந்தால், நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அதே நேரத்தில், லாபம் பெரிய அளவில் இருக்காது. இருப்பினும், அது நியாயமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் வலுவான முயற்சியால் தொழிலில் சிறப்பாக செயல்படுவார்கள். ஆனால் உடன் பணிபுரிபவர்களால் சில தடைகளை சந்திப்பீர்கள். வியாபாரிகள் மிதமான லாபத்தைப் பெறுவார்கள். உறவுகளைப் பொறுத்தவரை, ஈகோ பிரச்சனைகளால் குடும்பத்தில் சில குழப்பங்களை சந்திக்க நேரிடும். இதனால் குடும்பச் சூழல் மகிழ்ச்சிகரமானதாக இருக்காது. வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பெரிய லாபம் எதுவும் இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே உங்களை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Shukra Asta 2022 Venus Combust in Leo on 15 September 2022 Effects And Remedies On 12 Zodiac Signs In Tamil

Shukra Asta 2022 In Simha Rashi; Venus Combust in Leo Effects on Zodiac Signs: The Venus Combust in Leo will take place on 15 September 2022. Learn about remedies to perform in tamil.
Story first published: Wednesday, September 14, 2022, 16:45 [IST]
Desktop Bottom Promotion