Latest Updates
-
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
விருச்சிகத்தில் சூரிய-சுக்கிர சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்கள் ரொம்ப கவனமா இருக்கணும்..
விருச்சிக ராசியில் சுக்கிரனும், சூரியனும் இணைந்திருப்பது நல்லதாக கருதப்படுவதில்லை. விருச்சிக ராசியில் சூரியனும், சுக்கிரனும் இணைந்திருப்பதால், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
நவம்பர் மாதத்தில் பல கிரகங்கள் அடுத்தடுத்து ராசியை மாற்றுவதோடு, அதனால் பல யோகங்களும் உருவாகி வருகின்றன. அதில் நவம்பர் 11 ஆம் தேதி சுக்கிரன் விருச்சிக ராசிக்கு சென்றார். அதைத் தொடர்ந்து நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்கு சென்றார். ஜோதிடத்தில் சூரியனும், சுக்கிரனும் எதிரிகளாக கருதப்படுகிறார்கள். எனவே விருச்சிக ராசியில் சுக்கிரனும், சூரியனும் இணைந்திருப்பது நல்லதாக கருதப்படுவதில்லை.

பொதுவாக சூரியனுக்கு அருகில் எந்த ஒரு கிரகம் வந்தாலும், அந்த கிரகம் அதன் பலனை இழந்துவிடும். தற்போது விருச்சிக ராசியில் சூரியனும், சுக்கிரனும் இணைந்திருப்பதால், சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது விருச்சிக ராசியில் சூரிய சுக்கிர சேர்க்கையால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சூரிய சுக்கிர சேர்க்கையானது மோசமான பலனைத் தரும். ஏனெனில் இந்த சேர்க்கையானது 8 ஆவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. எனவே இக்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யும், வியாபாரிகள் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் புதிய வேலைள் எதையும் தொடங்கி விடாதீர்கள். பணியிடத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். உஙகள் பேச்சைக் கட்டுப்படுத்துங்கள். இல்லாவிட்டால் பெரிய பிரச்சனையை சந்திப்பீர்கள்.

மிதுனம்
சூரிய சுக்கிர சேர்க்கையானது மிதுன ராசியின் 6 ஆவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. எனவே இந்த காலத்தில் மிதுன ராசிக்காரர்கள் எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். அதே வேளையில் வியாபாரிகள் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் இக்காலத்தில் பண பரிவர்த்தனைகளை தவிர்ப்பது நல்லது. வணிகம் தொடர்பான பயணத்தை மேற்கொள்ள நினைத்தால், அதை தவிர்த்திடுங்கள். இக்காலத்தில் வியாபாரம் சற்று மந்தமாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் தோல்வியை சந்திக்க நேரிடும்.

கடகம்
கடக ராசியின் 5 ஆவது வீட்டில் சூரிய சுக்கிர சேர்க்கை நிகழ்ந்துள்ளது. ஆகவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் மோசமடையும். காதலிப்பவர்களின் உறவுகளில் கசப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வாகனம் ஓட்டும் போது கவனமாக இருங்கள். வணிகத்தில் முதலீடு செய்ய நினைத்தால், அதை இக்காலத்தில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இக்காலம் சாதகமாக இல்லை. மாணவர்களுக்கு இக்காலம் நன்றாக இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications