For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீர்க்க சுமங்கலி வரம் வேண்டுமா? அப்ப வட சாவித்திரி விரதம் இருங்க...

வைகாசி மாத அமாவாசை நாளில் வட இந்தியாவில் வட சாவித்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தென் இந்தியாவில் பௌர்ணமி நாளில் வட சாவித்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

|

இல்லத்தரசிகள் பெரும்பாலும் விரதம் இருப்பது குடும்ப நன்மைக்காகவும், கணவனின் ஆயுள் ஆரோக்கியத்திற்காகவும்தான். வட சாவித்திரி விரதம் கணவனின் ஆயுள் பலம் வேண்டியும் தீர்க்க சுமங்கலி வரம் கேட்டும் கடைபிடிக்கப்படும் விரதமாகும். இந்த விரதம் வட இந்தியாவில் வைகாசி மாத அமாவாசை தினத்திலும் தென் இந்தியாவில் வைகாசி மாத பவுர்ணமி தினத்திலும் கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பெண்கள் அனுஷ்டிக்கும் வட சாவித்திரி விரத நாளில் ஆலமரத்துக்கு பூஜை நடக்கும்.

Vat Savitri Vrat 2021: Date, Tithi, Puja Vidhi, And Significance In Tamil

பங்குனி மாதத்தில் நம்ம ஊர்ல காரடையான் நோன்பு என அனுஷ்டிப்பதைதான் வட நாட்டில் வட சாவித்திரி விரதம் என அனுஷ்டிக்கின்றனர். கணவரின் ஆரோக்கியமும் ஆயுளும் சிறக்க வேண்டும் எனும் பிரார்த்தனையுடன் சுமங்கலிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள். கன்னிப்பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து, வழிபடுவதால், விரைவில் கல்யாண வரம் கைகூடும்; மனதுக்கு பிடித்தமான கணவர் கிடைப்பார் என்பது நம்பிக்கை.

வடம் என்றால் விழுது என பொருள். வடம் என்றால் கயிறு என்றும் பொருள். ஆலமரத்தின் பலமே அதன் விழுதுகளில் தான் இருக்கிறது. அதுபோல ஒரு பெண்ணின் பலம் அவளுக்கு கிடைக்கும் கணவனை பொருத்துதான் இருக்கிறது. நல்ல கணவன் அமையவும் மாங்கல்ய பலம் பெருகவும் கன்னிப்பெண்களும் சுமங்கலி பெண்களும் ஆல மர விழுதுகளில் பூஜை செய்து அனுஷ்டிக்கும் தினமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வட சாவித்திரி விரதம்

வட சாவித்திரி விரதம்

வட இந்தியாவில் மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானாவில் அமாவாசை தினமான நாளை ஜூன் 10ஆம் தேதி வட சாவித்திரி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

சாவித்திரி வழிபாடு

சாவித்திரி வழிபாடு

சாவித்திரியை வழிபடும் நாள் இது. சத்தியாவன் சாவித்திரி கதையை தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். கணவன் சத்யாவின் உயிரை காக்க எமனிடம் போராடிய பெண் சாவித்திரி. பெண்களுக்கு மாங்கல்ய பலம் அருளும் விரதம் இது என்பதால் சாவித்திரி விரதம் அனுஷ்டிக்கின்றனர். வட இந்தியாவில் பெண்கள் விரதம் இருந்து ஆலமரப் பூக்களை சாப்பிடுவார்கள்.

தீர்க்க சுமங்கலி விரதம்

தீர்க்க சுமங்கலி விரதம்

ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண்கள் இந்த வட சாவித்திரி விரதத்தை கடைபிடிக்கலாம். இதன் மூலம் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியை குறிக்கும் சுக்கிரனும் கணவனை குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோன பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

தீர்க்க சுமங்கலி ஜாதக அமைப்பு

தீர்க்க சுமங்கலி ஜாதக அமைப்பு

பெண் ஜாதகத்தில் எட்டு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் ராகு தொடர்பு கொள்ள கூடாது. அதே போல ஜாதகத்தில் பலமிழந்த நீச சந்திரன் ஆறு அல்லது எட்டாம் வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும். அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்க கூடாது. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று ஏழு மற்றும் எட்டாம் வீடுகளில் நிற்க கூடாது.

களத்திர காரகன் செவ்வாய்

களத்திர காரகன் செவ்வாய்

பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க கூடாது. ஏழாமிடம் சுத்தமாக இருப்பது நல்லது. களத்திர காரகன் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம்,குடும்பம்,சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறகூடாது.

மாங்கல்ய பலம் பெருகும்

மாங்கல்ய பலம் பெருகும்

தமிழ்நாட்டில் ஆறு பெரிய கோவில்களில் ஆலமரம் ஸ்தல விருட்சம் ஆக திகழ்கிறது. ஆலங்காடு, திரு ஆலம்பொழில், திரு அன்பிலாந்துறை, திரு மெய்யம், திருப் பழவூர், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில்களில் இறைவன் இறைவி மற்றும் ஸ்தல விருஷமான ஆல மரத்தை வணங்கினால் மாங்கல்ய பலம் பெருகும். தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vat Savitri Vrat 2021: Date, Tithi, Puja Vidhi, And Significance In Tamil

Vat Savitri Vrat 2021: The famous Vat Savitri Vratam is observed by married women pan India on the Amavasya. In South India the same vrat is observed on Purnima Full Moon Dayin the same month.
Desktop Bottom Promotion