Just In
- 1 hr ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்த்திட வேண்டும்...
- 16 hrs ago
உங்க கணவன் அல்லது காதலனுக்கு இந்த விஷயங்கள் மட்டும் தெரிஞ்சிருந்தா நீங்க கொடுத்து வச்சவங்களாம்!
- 18 hrs ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க இரத்தத்தில் சர்க்கரை ஆபத்தான அளவில் இருக்குனு அர்த்தம்... உஷார்!
- 21 hrs ago
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று மகாத்மா காந்தி அவா்கள் எங்கு இருந்தாா் தெரியுமா?
Don't Miss
- News
"உங்களுக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயமா?" கனல் கண்ணன் கைது.. கொந்தளித்த பாஜக அண்ணாமலை
- Finance
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
- Movies
இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்!
- Automobiles
சுதந்திர தினத்தில் இந்தியர்களுக்கு விருந்து வைத்த மஹிந்திரா... டாடாவுக்கு இனிமேல் செம போட்டி காத்திருக்கு!
- Sports
டி20 உலகக்கோப்பையில் அஸ்வினுக்கு வாய்ப்புள்ளதா??.. ஆகாஷ் சோப்ரா கூறிய விளக்கம்.. அட இதுவும் சரிதானே?
- Technology
ஜியோக்கு போட்டியாக Airtel அறிமுகம் செய்த 2 புது திட்டம்.! இன்றே ரீசார்ஜ் செய்யுங்க.!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
வாஸ்து முறைப்படி உங்க வீட்டுல இதெல்லாம் மாத்துனா உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்குமாம் தெரியுமா?
திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பு புள்ளியாக கருதப்படுகிறது. அனைவருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கான தகுதி இருந்தாலும் சில காரணங்களால் திருமணம் தள்ளி சென்று கொண்டே இருக்கலாம். திருமண வயதைத் தாண்டியவுடன், விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கவலை இயற்கையானது. இன்னும் பலர் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் பலருக்கு அவ்வாறு செய்ய முடியாமல் போகிறது. அவர்களுக்கு இன்னும் சரியான துணை கிடைக்காத காரணத்தினாலோ அல்லது தற்சமயம் அவர்கள் தங்கள் மீது அதிக கவனம் செலுத்துவதால் இந்தியாவில் திருமண வயதைத் தாண்டியும் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். இந்த தாமதம் பெற்றோர்களுக்கு கவலையளிக்கிறது.
இந்த காரணங்கள் ஜோதிட ரீதியாகவும் இருக்கலாம் ஆனால் சிலசமயம் உங்கள் வீட்டின் வாஸ்து கூட உங்கள் திருமணம் தாமதவதற்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், வருத்தப்பட வேண்டாம். சில வாஸ்து குறிப்புகளை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம். அவற்றை நீங்கள் பின்பற்றினால் விரைவில் உங்களுக்கு திருமணம் நடக்க உதவும். இக்கட்டுரையில், திருமணத்திற்கு தடங்கலாக இருக்கும் வாஸ்து பிரச்சினைகள் என்னென்ன அதனை எப்படி சரிசெய்யலாம் என்று பார்க்கலாம்.

படுக்கையில் தூங்கும் திசை
திருமணமாகாத பெண், வீட்டின் வடமேற்கு திசையில் படுத்து தூங்க வேண்டும் மற்றும் வீட்டின் தென்மேற்கு மூலையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும். இப்படி தூங்கினால், திருமண வாய்ப்புகள் அதிகரிக்கும். அதேபோல், திருமணமாகாத ஆண்களும் வடகிழக்கு திசையில் தூங்க வேண்டும் மற்றும் தென்கிழக்கு திசையில் தூங்குவதை தவிர்க்க வேண்டும்.

பெட்ஷீட் நிறம்
இளஞ்சிவப்பு, மஞ்சள், வெளிர் ஊதா அல்லது வெள்ளை போன்ற வெளிர் நிற பெட்ஷீட்டில் தூங்குவது நல்லது. இது சரியான வகையான ஆற்றலை அறைக்குள் ஈர்க்கும் மற்றும் திருமணம் செய்ய விரும்பும் நபருக்கு நேர்மறை அதிர்வுகளை எண்ணங்களை உருவாக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல்களுக்கு உதவ, வீட்டின் அறைகள் வெளிர் வண்ணங்களில் வரையப்பட வேண்டும். கருப்பு மற்றும் பழுப்பு நிறத்தை அறவே தவிர்க்க வேண்டும்.

இரும்பு பொருட்கள்
திருமணம் செய்ய விரும்புபவர்கள் படுக்கைக்கு அடியில் இரும்புப் பொருட்களை வைத்து தூங்கக் கூடாது. படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் வைத்திருப்பது சுத்தமற்றது மற்றும் அவசியமற்றது. அறையில் நேர்மறை ஆற்றலை அனுமதிக்கும் நபர் தனது அறையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கனமான பொருள்கள்
கனமான பொருட்களை வைப்பது அல்லது வீட்டின் நடுவில் படிக்கட்டு வைப்பது திருமணத்தை தாமதப்படுத்தும் என்பதால் அது பரிந்துரைக்கப்படவில்லை. வாஸ்து படி, கனமான பொருள்கள் திருமணத்தின் சுப சக்தி வீட்டிற்குள் வருவதை கடினமாக்குகிறது. அதனால், அவற்றை வீட்டின் மூலையில் அல்லது வெளிப்புறத்தில் வைப்பது நல்லது.

சுவர் நிறம்
வீடு முழுவதும் ஒளி வண்ண சுவர்கள் இருக்க வேண்டும். பொதுவாக வீட்டிற்குள் வெளிர் நிழல்கள் மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றன. ஏனெனில் அவை திருமண உறவுகளையும் , நபருக்கான திட்டங்களையும் நேர்மறையாக தொடங்க உதவும். உண்மையில் இருண்ட நிறங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். அவை, எதிர்மறை எண்ணங்களை உருவாக்கலாம்.

கண்ணாடி
உங்கள் படுக்கையறையில் கண்ணாடிகள் இருப்பதைத் தவிர்க்கவும். இது தம்பதிகளிடையே கருத்து வேறுபாட்டிற்கு வழிவகுக்கும். ஒருவேளை கண்ணாடி இருந்தால், அவற்றை இரவில் மூடி வைக்கவும். இது தவிர, உங்கள் அறையை நன்கு வெளிச்சமாக வைத்திருங்கள். இது தம்பதியினரிடையே காதலுக்கும் நெருக்கத்திற்கும் வழிவகுக்கும்.