For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த இடத்தில் விநாயகர் சிலையை வைப்பது துரதிர்ஷ்டமாம்... எந்த இடத்தில் வைத்தால் அதிர்ஷ்டம் தெரியுமா?

விநாயகர் செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் கடவுளாவர். விக்னஹார்தா என அறியப்பட்ட விநாயகர் தனது பக்தர்களுக்கு செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கி வருகிறார்.

|

விநாயகர் செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் கடவுளாவர். விக்னஹார்தா என அறியப்பட்ட விநாயகர் தனது பக்தர்களுக்கு செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை வழங்கி வருகிறார். விநாயகப் பெருமானின் பக்தர்கள் அவரது சிலையை வீடுகளில் வைப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு விநாயகர் சிலையை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரிவதில்லை.

Right Place To Keep Ganesha Idol In The Home

சரியான இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது உங்கள் வாழ்க்கையில் அமைதியையும், அதிர்ஷ்டத்தையும் கொண்டுவரும். வாஸ்து அடிப்படையில் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் வைத்து விநாயகரை வழிபட வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விநாயகர் சிலையை வைக்க சரியான இடங்கள்

விநாயகர் சிலையை வைக்க சரியான இடங்கள்

நீங்கள் அதிக செல்வம், மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை ஈர்க்க விரும்பினால், வெள்ளை விநாயகரின் சிலையை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். வெள்ளை விநாயகரின் படத்தை ஒட்டுவது கூட உங்களுக்கு வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தெய்வத்தின் பின்புறம் உங்கள் வீட்டுக்கு வெளியே இருக்கும் வகையில் விநாயகர் சிலையை வைக்கவும்.

எந்த திசையில் வைக்கலாம்?

எந்த திசையில் வைக்கலாம்?

விநாயகர் சிலையை வீட்டின் கிழக்கு அல்லது மேற்கு திசைகளில் எளிதில் தெரியும் வகையில் வைக்கலாம். இவ்வாறு வைப்பது உங்கள் வீட்டிற்குள் அதிர்ஷ்டத்தை அழைத்து வரும்.

எந்த திசையில் வைக்கக்கூடாது?

எந்த திசையில் வைக்கக்கூடாது?

வீட்டின் தெற்கு திசையில் விநாயகர் சிலையை ஒருபோதும் வைக்காதீர்கள். விநாயகர் சிலையை கழிவறைக்கு அருகில் அல்லது குளியலறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சுவர் அருகிலும் வைக்கக்கூடாது, ஏனெனில் குளியலறையிலிருந்து வெளிவரும் எதிர்மறை ஆற்றல்களை பூஜை அறையின் நேர்மறை சூழலுக்கு பாதகத்தை ஏற்படுத்தும்.

எந்த இடத்தில் வைக்கக்கூடாது?

எந்த இடத்தில் வைக்கக்கூடாது?

மாடிப்படிக்கு அடியில் சிலையை ஒருபோதும் வைக்க்கூடாது, ஏனென்றால் மக்கள் படிக்கட்டுகளில் நடந்து செல்வார்கள் மற்றும் மக்கள் தங்கள் தலைக்கு மேல் மிதிப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.

படுக்கையறையில் வைக்கலாமா?

படுக்கையறையில் வைக்கலாமா?

படுக்கையறையில் விநாயகர் சிலையை வைப்பது நல்லதல்ல, ஆனால் வேறு வழியில்லை என்றால், அறையின் வடகிழக்கு மூலையில் சிலைகளை வைக்கவும், நீங்கள் தூங்கும்போது, அந்த மூலையில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நோக்கி நீங்கள் கால்களை நீட்டக்கூடாது.

எந்தவகை விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்கலாம்?

எந்தவகை விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்கலாம்?

மாங்காய், அரசமரம் மற்றும் வேப்ப மரத்தால் ஆன விநாயகர் சிலை அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. அவற்றை வாசலில் வைப்பது நேர்மறை ஆற்றலையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும்.

கிரிஸ்டல் விநாயகர்

கிரிஸ்டல் விநாயகர்

உங்கள் வீட்டில் உள்ள அனைத்து வாஸ்து தோஷங்களையும் அகற்ற கிரிஸ்டல் விநாயகர் வைப்பது நல்லது. பொதுவாக கிரிஸ்டல் விநாயகர் சிலை மிகவும் விலை உயர்ந்தது ஆனால் இந்த விநாயகர் சிலையை வைத்திருப்பது உங்கள் வாழ்க்கையை உடனடியாக மாற்றும்.

மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை

மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலை

வாஸ்து படி, மஞ்சளால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை உங்கள் வாழ்க்கையை அதிக கஷ்டங்கள் இல்லாததாக மாற்றும். உங்கள் வீட்டில் இந்த சிலை இருப்பது மிகவும் மங்களகரமானதாகும்.

நீங்களாகவே செய்த விநாயகர் சிலை

நீங்களாகவே செய்த விநாயகர் சிலை

நீங்களாகவே உருவாக்கிய விநாயகர் சிலையையும் வழிபடலாம். இதுபோன்ற சிலையை வணங்கினால் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். ஆனால், ஜாக்கிரதை; சிலை செய்யும் போது எந்த அசுத்தமான பொருளையும் பயன்படுத்த வேண்டாம். இது பாதகமான விளைவை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Vastu Tips For Placing Ganesha Idol At Home in Tamil

Placing Ganesha idols in these places in the house can change your destiny.
Desktop Bottom Promotion