For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த தீபாவளிக்கு உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்கணுமா? அப்ப இத பண்ணுங்க...!

|

கொண்டாட்டங்கள் நிறைந்த தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டே இருக்கிறது. தீபாவளி தொடர்பான விஷயங்கள் அனைத்தும் கலைக்கட்ட தொடங்கிவிட்டது. எப்போதும் தீபாவளி ஒருவரின் இல்லத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை கொண்டுவரும் ஒரு முக்கியமான பண்டிகையாக இருக்கிறது.

Useful Vastu tips for a Happy Diwali

தீபாவளி உங்கள் குடும்பத்தை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்லும் ஒரு பண்டிகையாகும். சரியான முறையில் தீபாவளியன்று லட்சுமி தேவியை வழிபட்டால் உங்கள் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் வந்து சேரும் என்று புராணங்கள் கூறுகிறது. இந்த தீபாவளியை உங்களுக்கு மகிழ்ச்சியான தீபாவளியாக மாற்ற சில வாஸ்து குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த முறையில் தீபாவளியை கொண்டாடுவது உங்களுக்கு லட்சுமியின் அருளை பூரணமாக பெற்றுத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்

தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுவதற்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் வீட்டின் ஒழுங்கீனத்தை இலவசமாக வைத்திருங்கள். நீங்கள் வீட்டின் எல்லா மூலைகளையும் (குறிப்பாக உங்கள் பூஜையறையை) சுத்தம் செய்து, துடைக்கும்போது, லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார், இது அவரை உங்கள் வீட்டிற்கு அழைத்து வரும். உங்கள் வீட்டில் கழிவுகளோ அல்லது குப்பைகளோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். வீட்டின் ஒரு மூலையும் கண்டிப்பாக இருளாக இருக்கக்கூடாது.

ஸ்வஸ்திக் சின்னம்

ஸ்வஸ்திக் சின்னம்

ஸ்வஸ்திகா என்ற புனித சின்னம் தூய்மையான மற்றும் புனிதமான எல்லாவற்றிற்கும் ஒரு அடையாளமாகும், எனவே உங்கள் பிரதான வாசலில் ஒரு ஸ்வஸ்திக் சின்னத்தை தொங்கவிடுவது தீபாவளிக்கு மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் உற்சாகத்தையும் தரும்.

சிலைகளின் இடங்கள்

சிலைகளின் இடங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி செல்வத்தை கொண்டு வர வீட்டின் வடக்கு பகுதியில் லட்சுமி பூஜை நடத்த வேண்டும். பூஜை செய்யும்போது லட்சுமி தேவியின் சிலைக்கு இடதுபுறத்தில் விநாயகரின் சிலை இருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

உப்பு நீரைத் தெளிக்கவும்

உப்பு நீரைத் தெளிக்கவும்

தண்ணீரில் சிறிது உப்பு கலந்து, குறிப்பாக தீபாவளி நாளில் இதை வீட்டைச் சுற்றி தெளிக்கவும். உப்பு காற்றிலிருந்து வரும் அனைத்து எதிர்மறை ஆற்றலையும் உறிஞ்சி சுற்றுச்சூழலை சுத்திகரிக்கிறது உங்கள் இல்லத்தில் நேர்மறை ஆற்றலை பரவச் செய்கிறது.

MOST READ: பெண்களுக்கு உடலுறவில் ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க...!

கோலம்

கோலம்

வீட்டு வாசலில் கோலம் போடுவது வெறுமனே ஒரு கலை உருவாக்கம் அல்ல, இது உங்கள் வீட்டிற்கு நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டுவரக்கூடியது. நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் வண்ணங்களான பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீளம் போன்ற வண்ணங்களை தேர்ந்தெடுக்கவும், இருண்ட நிறங்களை தவிர்ப்பது நல்லது. செல்வத்தை வரவேற்க உங்கள் வீட்டு வாசலில் மறக்காமல் கோலமிடுங்கள்.

ஊதுபத்திகள்

ஊதுபத்திகள்

ஊதுபத்திகள் கொளுத்துவது உங்கள் வீட்டை வாசனையாக வைத்துக்கொள்வது மட்டுமில்லாமல் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலையும் பரவச் செய்கிறது. . தீபாவளி நாளில் உங்கள் வீட்டை நேர்மறையாகவும், உற்சாகமாகவும் மாற்ற சந்தன ஊதுபத்தியை கொளுத்தி வைக்கவும்.

உங்கள் பிரதான கதவை திறந்து வைக்கவும்

உங்கள் பிரதான கதவை திறந்து வைக்கவும்

தீபாவளி பண்டிகையின் போது உங்கள் வீட்டின் பிரதான கதவு திறந்து வைத்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டிற்கு லட்சுமி தேவியை வரவேற்பதன் அறிகுறியாகும். தூங்கும்போதும் குறைந்தபட்சம் ஒரு ஜன்னலையாவது திறந்து வைத்துவிட்டு தூங்குங்கள்.

கண் திருஷ்டியை போக்க

கண் திருஷ்டியை போக்க

தீபாவளியின் இரண்டாவது நாளான காளி சவுதாஷ் நாளில், உங்கள் வீடு அல்லது அலுவலகத்திலிருந்து எதிர்மறையை அகற்ற நீங்கள் காளி தேவி அல்லது ஹனுமான் வழிபட வேண்டும். இது உங்கள் மீதுள்ள கண்திருஷ்டியை போக்கும்.

MOST READ: கையில இந்த ரேகை இருக்கறவங்க ஒரே நேரத்தில ரெண்டு பேர காதலிப்பாங்களாம் தெரியுமா?

மந்திரம்

மந்திரம்

தீபாவளி லட்சுமி பூஜையின் போது மணி ஓசை எழுப்புவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இது உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரவச் செய்யும். இதனுடன் ஓம் நமோ பகவத வாசுதேவயத்தை என்ற மந்திரத்தைக் கூறி பூஜை செய்யவும். இது உங்கள் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களையும் நீக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Useful Vastu tips for a Happy Diwali

Here are some simple and useful vastu tips for a happy diwali.
Story first published: Wednesday, October 16, 2019, 16:31 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more