For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி விரதத்தின் பூஜைக்கான செயல் முறை மற்றும் அதன் சடங்குகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா

|

வரலட்சுமி விரதம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வட இந்தியாவில் இந்த விழாவை மகாலட்சுமி விரதம் என்றும் அழைக்கிறார்கள். இதற்காக பெண்கள் அனைவரும் முதல் நாளே வீட்டைச் சுத்தம் செய்து, மாக்கோலம் இட்டு, அம்மனை வீட்டிற்கு அழைத்திருப்பார்கள்.சுமங்கலிப் பெண்களுக்காக இந்த பூஜையானது நடத்தப்படுகிறது. அதாவது மகாலட்சுமியை நினைவுகூறும் வகையில் திருமணம் ஆன பெண்கள் கொண்டாடும் பண்டிகையே வரலட்சுமி விரதமாகும். 'வர' என்ற வார்த்தைக்கு வரம் என்று பொருளாகும். எனவே தான், வரலட்சுமியானவர் வரம் தரும் கடவுளாக கருதப்படுகிறார்.

Varalakshmi Vratham

இந்த நாளில் லட்சுமி தேவியை வணங்குவது அஷ்டலட்சுமியான 8 லட்சுமிகள் அதாவது பூமி, செல்வம், கற்றல், காதல், புகழ், அமைதி, இன்பம், மற்றும் வலிமை போன்றவற்றை வணங்குவதற்குச் சமம். மேலும் குடும்ப உறுப்பினர்களின் நல்வாழ்வுக்காகவும், கணவரின் வாழ்க்கைக்காகவும், குழந்தைகளைப் பெறுவதற்கும் வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இது பௌர்ணமி தினத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை கொண்டாப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு

வரலாறு

சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கி வந்தாள். அப்போது ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி சித்திரநேமிக்கு குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி தனது தவறை உணர்ந்து சாப விமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள். மனம் இறங்கிய பார்வதி தேவி வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் சாபவிமோசனம் நீங்கும் என அருள்புரிந்தார். எனவே சித்திரநேமி, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.

கர்ப்பிணி பெண்கள் மழைக்காலத்தில் பின்பற்ற வேண்டிய முக்கியமான குறிப்புகள்

அதிகாலை குளியல்

அதிகாலை குளியல்

வரலட்சுமி பூஜை அன்று கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும் என்று ஒரு கூற்றுண்டு. அப்படி முடியாதவர்கள், அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தம் என்பபடும் வேளையில் குளித்துவிட்டு பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

திருமணமான பெண்கள் பூஜை முடிக்கும் வரை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். ரங்கோலி வரைவதற்கு அரிசி மாவு தயார் செய்து கொள்ளுங்கள். ஒரு பெரிய தாம்பூலம் அல்லது பெரிய தட்டு மற்றும் சில வாழை இலைகள், ஒரு குடம் அல்லது கலசம் அது வெள்ளி, வெண்கலம் அல்லது செம்பு எது உங்களிடம் உள்ளதோ அதைப் பயன்படுத்தலாம். பின்பு ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமம், மஞ்சள் தூள், கற்பூரம், கிராம்பு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், பால், உலர் பழங்கள், எள்ளு, கொழுக்கட்டை, இனிப்பு, மேலும் கலசம் நிரப்பச் சிறிது மா இலைகள் அதன் மேல் வைக்க ஒரு தேங்காய், மஞ்சள் பூசப்பட்ட அரிசிகள், தாமரை மலர், தெய்வத்திற்கு அணிய ஆடைகள், நகைகள், மாலைகள், மஞ்சள் தூள் பூசப்பட்ட ஒரு புனித நூல் இவற்றையெல்லாம் தயார் செய்து கொள்ளுங்கள்.

உங்கள்சருமத்தில் வித்தியாசமான மாற்றங்கள் ஏற்படுகிறதா அப்போ இத படிங்க.

பூஜைக்கு முன்

பூஜைக்கு முன்

முதலில் அனைத்து பூஜை பாத்திரங்களையும் சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். கலசம், விளக்குகளை நன்றாக கழுவி சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து அழகு படுத்துங்கள். கலசத்தில் நூல்களை சுற்றி வையுங்கள். மேலும் பயன்பாட்டிற்கு தேவையான எண்ணெயை ஊற்றி வையுங்கள். கொழுக்கட்டைக்கு தேவையானவற்றையும் தயார் செய்து கொள்ளலாம். வீட்டின் எல்லா வாசலிலும் மஞ்சள் கோடுகளை இட்டு அழகு படுத்துங்கள்.

பூஜையை தொடங்குதல்

பூஜையை தொடங்குதல்

பூஜையை தொடங்கும் போது விநாயகரை வழிபட்டு தொடங்குவது நல்லது. விநாயகரே அனைத்திற்கும் முதல் கடவுள். அதன் பின்னர் லட்சுமி தேவியைப் பற்றிய ஸ்லோகங்கள் பாட வேண்டும். ஆரத்தி எடுக்கப்பட்டு, புளியோதரை, கொழுக்கட்டை மற்றும் இனிப்புகள் போன்றவை லட்சுமி தேவிக்கு படைத்து, பின்னர் தேவியை வழிபட்டு கட்டப்படும் மஞ்சள் கயிற்றை சில பெண்கள் தங்களுடைய கைகளில் அல்லது கழுத்துகளில் கட்டிக் கொள்வார்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்து வரும் பெண்களுக்கு வெற்றிலை-பாக்கு, குங்குமம், மஞ்சள், மஞ்சள் கயிறு, பழம் ஆகியவற்றைக் கொடுத்து, மாலையில் ஆரத்திக்கு வருமாறு கேட்டுக் கொள்வார்கள்.

பிரசவத்திற்கு பின் இரத்தசோகை ஏற்படுவது ஏன்?... எப்படி கண்டுபிடிக்கிறது?

பூஜை நிறைவு செய்தல்

பூஜை நிறைவு செய்தல்

கலசத்தில் உள்ள நீரை எடுத்து வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். எதையாவது செய்ய தவறிவிட்டால் ஒன்றும் தப்பு இல்லை. மற்ற செயல்களைச் செய்யும் போது மன நிறைவுடன் முழு பக்தியுடன் செய்யுங்கள். சிலரால் இந்த நடைமுறைகளைப் பின்பற்ற முடியவில்லை என்றால் வீட்டில் விளக்கு ஏற்றி மகாலட்சுமி துதி பாடி மிக எளிமையான முறையில் பூஜை செய்யுங்கள். எளிய பிரார்த்தனை கூட லட்சுமி தேவியின் அருளை உங்களுக்குப் பெற்றுத்தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: women pooja
English summary

Varalakshmi Vratham 2019 Date, Time and Pooja Procedure

Varalakshmi Vratham, Varamahalakshmi festival is the most auspicious festival celebrated by married woman to commemorate Goddess Mahalakshmi."Vara" means "boon" and Goddess Lakshmi grants all boons to those who performs pooja with utmost devotion on this day. On the day of Varalakshmi Vratam, wake up early in the morning. Take a shower and arrange the things to perform the pooja.
Story first published: Thursday, August 8, 2019, 17:44 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more