For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலட்சுமி விரதம் 2021: பூஜை நேரம், பிரசாதம் மற்றும் விரத முறைகள்!

வரலட்சுமி அல்லது வரமஹாலட்சுமி விரதம் என்பது திருமணமான சுமங்கலி பெண்களால் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புனிதமான பண்டிகையாகும். இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது, 2021 ஆகஸ்ட் 20 ஆம் தேதி வருகிறது.

|

வரலட்சுமி அல்லது வரமஹாலட்சுமி விரதம் என்பது திருமணமான சுமங்கலி பெண்களால் பரவலாக கொண்டாடப்படும் மிகவும் புனிதமான பண்டிகையாகும். இந்த நாளில் பெண்கள் செல்வம், ஆரோக்கியம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை தர வேண்டுமென லட்சுமி தேவியிடம் பிராத்தனை செய்வர். இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது, 2021 ஆகஸ்ட் 20 ஆம் தேதி வருகிறது.

Varalakshmi Vratam 2020: Pooja Timings, Prasadam, Vidhanam, Mantras To Chant

இந்து பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம்பரியங்களின் படி, பெண்கள் தன லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வர். ஒவ்வொரு ஆண்டும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள், லட்சுமி ஆலயங்களில் திரண்டு சிறப்பு பிரார்த்தனை செய்வர். ஆனால், கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பெரும்பாலான பெண்கள் கோயில்களுக்குச் செல்வதற்குப் பதிலாக தங்கள் இல்லங்களிலேயே பூஜைகளை மேற்கொள்ள விரும்புகின்றனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலட்சுமி விரதத்திற்கான பூஜை நேரம்:

வரலட்சுமி விரதத்திற்கான பூஜை நேரம்:

காலை: சிம்ம லக்னம், முகூர்த்தம் - காலை 05:53 AM முதல் 07:59 AM வரை, கால அளவு: 2 மணி நேரம் 06 நிமிடங்கள்

பிற்பகல்: விருச்சிக லக்னம், முகூர்த்தம் - 12:35 PM முதல் 02:54 PM வரை, கால அளவு: 02 மணி நேரம்19 நிமிடங்கள்

மாலை: கும்ப லக்னம், முகூர்த்தம் - மாலை 06:40 PM முதல் 08:07 PM மணி வரை, காலம்: 01 மணி நேரம் 47 நிமிடங்கள்

வரலட்சுமி விரதத்திற்கு தேவையான பொருட்கள்:

வரலட்சுமி விரதத்திற்கு தேவையான பொருட்கள்:

வரலட்சுமி தேவி சிலை அல்லது புகைப்படம், பூ மாலை, மா இலைகள், வெற்றிலை மற்றும் பாக்கு, குங்குமம், மஞ்சள், விபூதி, 2 தேங்காய்களுடன் ஐந்து வகையான பூக்கள், சந்தனம், ரவிக்கை துணிகள், பஞ்சாமிர்தம், தயிர், வாழைப்பழம் மற்றும் பிற பழங்கள், மாட்டு நெய் , மாட்டு பால், சாம்பிராணி, சிறிய எண்ணெய் விளக்குகள், உடையாத முழு அரிசி.

பிரசாதம்:

பிரசாதம்:

லட்சுமி தேவிக்கு அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்தும் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, அரிசி உபயோகித்து, பரமன்னம், புளியோதரை அல்லது அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் பாயாசம் என அரிசியை பயன்படுத்தி பல்வேறு வகையான பிரசாதங்களை செய்து லட்சுமி தேவிக்கு படைக்கலாம்.

* சர்க்கரை பொங்கல்

* அரிசி பருப்பு பாயாசம்

* சேமியா பாயாசம்

* பால் பாயாசம்

* எலுமிச்சை சாதம்

* தயிர் சாதம்

* நெய் பொங்கல்

பூஜை தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவை:

பூஜை தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டியவை:

* பூஜை சடங்குகளைத் தொடங்குவதற்கு முன்பு, லட்சுமி தேவி சிலையை அல்லது உருவ படத்தை பூக்களால் அலங்கரிக்கவும்.

* அலங்கரிக்கப்பட்ட லட்சுமி தேவிக்கு முன்பு திருவிளக்குகளை ஏற்றி வைக்கவும்.

* தயாரிக்கப்பட்ட பிரசாதங்களை தேவிக்கு படைக்க தயாராக எடுத்து வைக்கவும்.

* ஒரு சிலர் பூசாரி உதவியுடன் இந்த விரதத்தை செய்வார்கள், இன்னும் சிலர் புத்தகத்தின் உதவியுடன் மேற்கொள்வர்.

* இந்த விரதத்தை மேற்கொள்ளும் எவராக இருந்தாலும், பூஜையின் போது 9 முடிச்சுகள் போடப்பட்ட மஞ்சள் கயிற்றை தங்கள் கைகளில் கட்டி கொள்ளவும்.

வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாடப்படுகிறது?

வரலட்சுமி விரதம் எதற்காக கொண்டாடப்படுகிறது?

ஒருவரது செல்வ வளம் மற்றும் ஆரோக்கியத்தை உயர்த்தக்கூடிய ஒரு பூஜையை பரிந்துரைக்குமாறு, பார்வதி தேவி, சிவ பெருமானிடம் கேட்டுள்ளார். அதற்கு சிவபெருமான் கூறிய விரதம் தான் இந்த வரலட்சுமி விரதம் என்று கூறப்படுகிறது. பார்வதி தேவியின் விருப்பத்திற்கேற்ப, இந்த விரதம் மேற்கொள்வதன் மூலம் ஒருவர், செல்வ வளம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டம் ஆகியவற்றை பெறுவர் என்று சிவபெருமான் பரிந்துரைத்துள்ளார்.

விரதம் மேற்கொள்ளும் நாளில், ஒருவர் தங்கள் பூஜை அறையை மா இலைகள் கொண்டு அலங்கரித்து, வழிபடும் இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை தொடங்குவதற்கு முன்பு பல்வேறு வகையான பூக்கள் மற்றும் உணவுப் பிரசாதங்களை தயார் செய்ய வேண்டும். லட்சுமி தேவி அரிசியில் தயாரிக்கப்படும் அனைத்தையும் விரும்புவார் என்று கூறப்படுகிறது.

பூஜையின் போது கூற வேண்டிய மந்திரங்கள்:

பூஜையின் போது கூற வேண்டிய மந்திரங்கள்:

விரதத்தின் போது இந்த மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை உச்சரிக்கவும்:

* ஓம் ஸ்ரீம் மகா லட்சுமியே நமஹா

* ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ளீம் மகா லட்சுமி நமஹா

* ஓம் ஸ்ரீம் ஸ்ரீ-அய் நமஹா

* ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் லட்சுமிபாயோ நமஹா

* ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலலேயே பிரசீட் பிரசாத் ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மகாலட்சுமியை நமஹா

* ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே

விஷ்ணு பத்னீ ச தீமஹி

தன்னோ லக்ஷ்மீ : ப்ரசோதயாத்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Varalakshmi Vratam 2021: Pooja Timings, Prasadam, Puja Vidhanam, Mantras To Chant In Tamil

Varalakshmi Vratam 2021: Pooja Timings, Prasadam, Vidhanam, Mantras To Chant. Read on..
Desktop Bottom Promotion